தகைமைகள்:-
நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பிரமாணங்களுக்கு அமைவாக வரையப்பட்ட கட்டிடத் திட்டப் பத்திரங்களைச் சமர்ப்பித்தல்.
1. சம்பந்தப்பட்ட நிலப்பகுதி நகரசபையினால் உத்தேச அபிவிருத்திக்காக அங்கீகரிக்கப்பட்டிருத்தல்.
2. மேற்படி அங்கீகரிக்கப்பட்ட நில அளவையாளர் திட்டத்தின் பிரதியொன்றைச் சமர்ப்பித்தல் வேண்டும்.
3. சமாப்பிக்கும் திட்டத்தின் முற்புறத் தோற்றம் பக்கத் தோற்றம் குறுக்கு வெட்டுமுகங்கள் வெளிக்களத் திட்டம் அபிவிருத்தியின் தலைப்பு அத்திவாரக் குறுக்கு வெட்டுமுகங்கள் போன்றவை உள்ளடக்கப்பட்டிருத்தல் வேண்டும்.
4. சமர்ப்பிக்கும் திட்டமானது நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பிரமாணங்களுக்கு அமைவாகவூம் ஏற்புடைய அளவூத் திட்டங்களையூம் கொண்டதாக தயாரிக்கப்பட்டிருத்தல் வேண்டும்.
5. தகைமைபெற்ற ஒருவரால் நற்சாட்சிப்படுத்தப்பட்டிருத்தல்.
விண்ணப்பப் பத்திரங்களைச் சமர்ப்பிக்கும் செயற்பாடு:-
விண்ணப்பப் பத்திரங்களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள்
கெஸ்பேவ நகரசபையின் கட்டிடப் பிரிவூ
விண்ணப்பப் பத்திரங்களைப் பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணங்கள்
ரூ.200.00
12மூ வற் வரி- ரூ.24.00
சமர்ப்பிக்க வேண்டிய நேரங்கள்
மு.ப. 9.00 மணி முதல் பி.ப. 12.30 மணி வரை
பி.ப. 1.00 மணி முதல் பி.ப. 3.00 மணி வரை
சேவையைப் பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணங்கள் (தயாரித்தல் கட்டணம்)
பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது.
சேவையை வழங்க எடுக்கும் காலம் (சாதாரண சேவைகள் மற்றும் முன்னுரிமைச் சேவைகள்)
02 வாரங்களில் அல்லது 08 வாரங்களுக்கிடையில்.
நிரூபிக்க அவசியமான ஆவணங்கள்:-
1. வதிவிடங்கள்
(அ) கெஸ்பாவ நகரசபையினால் அங்கீகரிக்கப்பட்ட நிலத்துண்டத் திட்டத்தின் பிரதியொன்று.
(ஆ) விண்ணப்பப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்ட அளவூத் திட்டங்கள் மற்றும் அளவீடுகளுக்கு கட்டுப்பட்டதாக வரையப்பட்ட கட்டிடத் திட்டப் பத்திரங்களின் 03 பிரதிகள்.
(இ) உறுதியின் பிரதியொன்று.
(ஈ) விண்ணப்பதாரியின் பெயரில் செலுத்தப்பட்ட மதிப்பீட்டு வரிப் பற்றுச்சீட்டின் பிரதியொன்று.
(உ) 3000 சதுர அடிகளை விஞ்சுமிடத்து பட்டயம் பெற்ற கட்டிடக் கலைஞர் ஒருவரால் கட்டிட விண்ணப்பப் பத்திரமும் திட்டப் பத்திரமும் அங்கீகரிக்கப்பட்டிருத்தல்.
(ஊ) மறை சுவர் உள்ள வேளையில் கட்டமைப்புச்சார் பொறியியலாளர் ஒருவரின் விதப்புரை பெறப்படல் வேண்டும்.
2. வணிக மற்றும் கைத்தொழில்கள்
(அ) கெஸ்பாவ நகரசபையினால் வணிக அல்லது கைத்தொழில் பாவனைக்காக அங்கீகரிக்கப்பட்ட நிலத்துண்டத் திட்டத்தின் பிரதியொன்று.
(ஆ) விண்ணப்பப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்ட அளவூத் திட்டங்கள் மற்றும் அறவீடுகளுக்கு கட்டுப்பட்டதாக வரையப்பட்ட கட்டிடத் திட்டப் பத்திரங்களின் 03 பிரதிகள்.
(இ) உறுதியின் பிரதியொன்று.
(ஈ) விண்ணப்பதாரியின் பெயரில் செலுத்தப்பட்ட மதிப்பீட்டு வரிப் பற்றுச்சீட்டின் பிரதியொன்று.
(உ) 3000 சதுர அடிகளை விஞ்சுமிடத்து பட்டயம் பெற்ற கட்டிடக் கலைஞர் ஒருவரால் கட்டிட விண்ணப்பப் பத்திரமும் திட்டப்பட பத்திரமும் அங்கீகரிக்கப்பட்டிருத்தல்.
(ஊ) மறை சுவர் உள்ள வேளையில் கட்டமைப்புசர் பொறியியலாளரொருவரின் விதப்புரை பெறப்படல் வேண்டும்.
(எ) தீயணைப்புச் சேவைகள் திணைக்களத்தின் விதப்புரை.
(ஏ) கைத்தொழில் பாவனைக்காகவெனில் பூர்வாங்க திட்டத் தீர்வூச் சான்றிதழ் (பி.ஊ.) சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
சேவைகளுக்குப் பொறுப்பான உத்தியோகத்தர்கள்
பதவி |
பெயர் |
பிரிவூ |
தொலைபேசி |
பக்ஸ் |
மின்னஞ்சல் |
கைத்தொழில் அத்தியட்சகர் |
று.யூ.பி. விஜேகாந்த |
கைத்தொழில் |
+94-11-2614250 |
+94-11-112618102 |
- |
விதிவிலக்கு அல்லது மேற்படி அவசியங்களுக்குப் புறம்பான சந்தர்ப்பங்களும் விசேட தகவல்களும்
நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பிரமாணங்கள் அமுலுக்கு வந்த 1986.03.10 ஆம் திகதிக்கு முன்னர் பிரித்தொதுக்கிய காணிகள் தொடர்பானது.
விண்ணப்ப பத்திர மாதிரி (மாதிரிப் படிவத்தை இணைக்கவூம்)
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் பத்திரம்
அமைப்பு பற்றிய தகவல்கெஸ்பேவ நகரசபை
சமரகோன் மாவத்தை,
பிலியந்தல. செயலாளர் தொலைபேசி:0112 617 005 தொலைநகல் இலக்கங்கள்:0112 618 102 மின்னஞ்சல்: இணையத்தளம்: www.kesbewa.uc.gov.lk
|