நிதி அமைச்சு
இலங்கைச் சுங்கம்
தலைப்பு: இரத்தினக்கற்களது ஏற்றுமதி
உள்ளடக்கம்:
இரத்தினக்கற்களது ஏற்றுமதி
இலங்கையில் கொள்வனவு செய்யப்பட்ட இரத்தினக்கற்கள் ஆகாய மார்க்கத்திலோ அல்லது உரிமையாளரினால் சுமந்துகொண்டே அவற்றினை ஏற்றுமதிசெய்ய முடியும்.
விமானச் சரக்கு/ஈ.எம்.எஸ்/பெடெக்ஸ் ஊடாக இரத்தினக்கற்களை ஏற்றுமதி செய்தல்.
இரத்தினக்கற்கள் சாதாரண சுங்கப் பிரகடணத்துடன் தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபைக்கு சமர்ப்பிக்கப்படுகின்றன. தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபை பெறுமதி மதிப்பீட்டாளர் மற்றும் சுங்க இரத்தினக்கல் மதிப்பீட்டாளர்கள் ஆகியோர் இணைந்து அவற்றினை சோதனைசெய்து, பொறியிட்டு அதனை கப்பலேற்றும் வகையில் பிணைப்படுத்தப்பட்ட சுமப்பர் ஒருவரினால் விமான சரக்கு பிரிவுக்கு அனுப்பப்படும்.
இக்கப்பலேற்றுகையானது அதி விரை அஞ்சல் சேவை (EMS) ஊடாகவோ அல்லது பெடெக்ஸ் கூரியர் சேவை ஊடாகவோ அனுப்ப முடியும்.
நாட்டை விட்டு வெளியேறும் பயணிகளால் கையில் சமந்துகொண்டு செல்லப்படுகின்ற இரத்தினக்கற்கள் (சாதாரண நடைமுறை)
பயணிகள் அவர்களது கையில் சுமந்து கொண்டு செல்வதற்கு வேண்டியுள்ள இரத்தினக்கற்கள் யாவும் தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபைக்கு சமர்ப்பிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்ட பின்னர் அவ் இரத்தினக்கற்கள் அடங்கிய பொதி பொறியிடப்பட்டு விமான நிலையத்தில் வெளிச்செல்லல் பகுதியில் உள்ள சுங்க கடமை அலுவலருக்கு (1ஆம் அலுவலர்) அனுப்பப்படுகின்றன. விமானத்தில் ஏற்றுவதற்கான அனுமதிப்பத்திரத்தினை (Boarding Pass) பெற்றதன் பின்னர் தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையில் இருந்து பெறப்பட்ட பற்றுச் சீட்டினை சுங்க கடமை அலுவலரிடம் சமர்ப்பிப்பதன் மூலம் பயணிகள் அவர்களது இரத்தினக்கல் பொதியினை பெற்றுக்கொண்டு அவர்களுடன் கொண்டுசெல்ல முடியும்.
நாட்டை விட்டு வெளியேறும் பயணிகளால் கையில் சமந்துகொண்டு செல்லப்படுகின்ற இரத்தினக்கற்கள் (துரிதமான நடைமுறை)
எப்.ஓ.பி. பெறுமதி மதிக்கத்தக்க ஐ.அ.டொ. 200,000/- அல்லது அதற்கு மேற்பட்ட பெறுமதியுடைய வெட்டப்பட்ட மற்றும் மினுக்கம் செய்யப்பட்ட இரத்தினக்கற்களை அவசர தேவை நிமித்தம் கையில் கொண்டு செல்ல எத்தனிக்கும் பயணிகள், இது தொடர்பில் தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையில் பற்றுச்சீட்டு சேவைக் கட்டணமாக ஐ.அ.டொ. 1500/- செலுத்தி இச்சேவையினை பெற்றுக்கொள்ளலாம் என்பதுடன், பற்றுச்சீட்டின் மூன்று பிரதிகள் மற்றும் இரத்தினக்கற்களுடன், நேரடியாக விமான நிலையத்திற்கு சமர்ப்பிக்க முடியும். இரத்தினக்கற்கள், பற்றுச்சீட்டுக்கள் மற்றும் வவுச்சர் என்பவற்றினை விமான நிலையத்தின் செல்லுகை கருமபீடத்திலுள்ள கடமை அலுவலரிடம் சமர்ப்பித்ததும் சுங்க அலுவலர் குறித்த ஆவணங்களில் தேவையான குறிப்புகளையிடுவதுடன் கப்பலேற்றுகையுடன் தொடர்புபட்ட பட்டியல் ஒன்றின் பிரதியினையும் விடுவிப்பார்.
அமைப்பு பற்றிய தகவல்சுங்கத் திணைக்களம்
இல. 40,
பிரதான வீதி,
கொழும்பு 11.
தொலைபேசி:+94-11-2470945 to +94-11-2470948 தொலைநகல் இலக்கங்கள்:+94-11-2446364 மின்னஞ்சல்:dgc@customs.gov.lk இணையத்தளம்: www.customs.gov.lk
|