நிதி அமைச்சு
இலங்கைச் சுங்கம்
தலைப்பு : இறக்குமதியாளர்களை / ஏற்றுமதியாளர்களை பதிவு செய்தல்
(வரி அடையாளப்படுத்தல் இலக்கம் /பெறுமதி சேர் வரி பதிவு)
உள்ளடக்கம்:
இறக்குமதியாளர்களை / ஏற்றுமதியாளர்களை பதிவு செய்தல்
(வரி அடையாளப்படுத்தல் இலக்கம் /பெறுமதி சேர் வரி பதிவு)
யாதேனும் நபர் அல்லது கம்பனி பதிவுசெய்யப்பட்ட இறக்குமதியாளர்/ ஏற்றுமதியாளராக இருக்கும் வகையில் அவர்கள் இலங்கைச் சுங்கத்தில் பதிவுசெய்வதற்கு வேண்டப்படுகின்றனர். இந்த வகையில் மேற்படி பதிவினை மேற்கொள்ளும் வகையில் விசேடத்துவமிக்க சேவைகள் பணிப்பகத்தின் கீழ் வரி அடையாளப்படுத்தல்/பெறுமதி சேர் வரி பதிவு செய்தல் எனும் பிரிவு சுங்க தலைமை அலுவலக கட்டிடத்தின் கீழ் மாடியில் நிறுவப்பட்டுள்ளது.
செயற்பாட்டுவகை மற்றும் வியாபாரவகை போன்றவற்றின் அடிப்டையில் பின்வரும் ஆவணக் கோவைகளை வரி அடையாளப்படுத்தல்/பெறுமதிசேர் வரி பதிவுசெய்தல் கருமபீடத்தில் சமர்பித்தல் வேண்டும்.
வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரத்தையுடையவர்கள் தவிர்ந்த தனிப்பட்ட வாகன இறக்குமதியாளர்ளை பதிவு செய்தல்.
போட்டோ பிரதிகளுடனான பின்வரும் மூல ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பம் (https://www.customs.gov.lk /downloads/vat/Reg imp exp.pdf) எனும் இணையத்தளத்திலிருந்து பெற்றுகொள்ள முடியும்)
- தேசிய அடையாள அட்டை/கடவுச்சீட்டு
- பற்றுச்சீட்டு
- வார்நாமம்
தனிப்பட்ட வாகன இறக்குமதியாளர்களை (இறக்குமதி அனுமதிப்பத்திரமுடையவர்கள்) பதிவு செய்தல்.
போட்டோ பிரதியுடன் பின்வரும் ஆவணங்களின் மூலப்பிரதியுடன் சமர்ப்பித்தல் வேண்டும்.
- பூரணப்பத்தப்பட்ட விண்ணப்பம்(https://www. customs.gov.lk /downloads/vat/Reg imp exp.pdf)
- தேசிய அடையாள அட்டை/கடவுச்சீட்டு
- அலுவலக அடையாள அட்டை
- பற்றுச்சீட்டு
- வார்நாமம்
- இறக்குமதி அனுமதிப்பத்திரம்
வரையறுக்கப்பட்ட பொறுப்புக் கம்பனிகளை பதிவுசெய்தல்
வரையயறுக்கப்பட்ட தனியார் அல்லது வரையறுக்கப்பட்ட பொதுக் கம்பனியொன்றினை பதிவுசெய்யும் வகையில் பின்வரும் மூல ஆவணங்களுடன் போட்டோ பிரதியும் சமர்ப்பித்தல் வேண்டும்.
- பூரணப்பத்தப்பட்ட விண்ணப்பம்(https://www.customs.gov.lk /downloads/vat/Reg imp exp.pdf)
- பெறுமதிசேர் வரிச் சான்றிதழ் (உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திலிருந்து பெறப்பட்டவை)
- வரி அடையாளப்படுத்தல் இலக்கம் (உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திலிருந்து பெறப்பட்டவை)
- இரு பணிப்பாளர்களது தேசிய அடையாள அட்டை/ கடவுச்சீட்டு (விண்ணப்பப்பத்திரத்தில் கையொப்பமிடப்பட்டவர்கள்) மற்றும் சகல பணிப்பாளர்களதும் தேசிய அடையாள அட்டையின் போட்டோ பிரதிகள்/ கடவுச்சீட்டு
- படிவம் 01 அல்லது படிவம் 48 மற்றும் 40 (கம்பனிப் பதிவாளரிடமிருந்து பெறப்பட்டவை)
- கூட்டிணைப்புச் சான்றிதழ்
- வியாபார பற்றுச்சீட்டு மற்றும் வார்நாமம்
- வெளிநாட்டு கம்பனியாயின் படிவம் 44, 45 மற்றும் 46 (கம்பனிப் பதிவாளரிடமிருந்து பெறப்பட்டவை)
- படிவம் 13 (விலாசம் மாற்றப்பட்டிருந்தால் கம்பனிப் பதிவாளரிடமிருந்து பெறப்பட்டவை)
- படிவம் 20 (பணிப்பாளர்கள் மாற்றப்பட்டிருந்தால் கம்பனிப் பதிவாளரிடமிருந்து பெறப்பட்டவை
- படிவம் 3 (கம்பனிப் பெயர் மாற்றப்பட்டிருந்தால் கம்பனிப் பதிவாளரிடமிருந்து பெறப்பட்டவை)
- ஏற்றுமதியாளர்கள் தொடர்பில் ஏற்றுமதி அபிவிருத்திச் சபையிடமிருந்தான சான்றிதழ் (ஏற்றுமதி அபிவிருத்திச் சபையினால் வினியோகிக்கப்பட்டவை)
- முதலீட்டுச் சபை கம்பனிகள் தொடர்பில் முதலீட்டுச் சபை பதிவுக் கடிதம்
தனியுடமை அல்லது பங்குடமை கம்பனிகளை பதிவு செய்தல்
பின்வரும் மூல ஆவணங்களுடன் போட்டோ பிரதியும் சமர்ப்பித்தல் வேண்டும்.
- இரண்டு பணிப்பாளர்களது/பங்குதாரர்களது/விண்ணப்பதாரர்களது தேசிய அடையாள அட்டை (கடவுச்சீட்டு அல்லது சாரதி அனுமதிப்பத்திரம்) மற்றும் சகல பங்குதாரர்களதும் தேசிய அடையாள அட்டை /கடவுச்சீட்டு
- வியாபார பதிவுச் சான்றிதழ்
- வரி அடையாளப்படுத்தல் மற்றும் பெறுமதிசேர் வரிச் சான்றிதழ்
- வியாபாரம் இடம்பெறும் இடத்தின் காணி உறுதி அல்லது குத்தகை உடன்படிக்கை (கம்பனியின் உரிமையாளர் அல்லது பங்குதாரர்களது பெயர் தவிற்று வேறு நபர் ஒருவரது பெயரில் குறித்த காணி உறுதி இருப்பின், காணி உரிமையாளரின் சம்மதத்தினை ஒரு பிரமாணப் பத்திரம் மூலம் சமர்ப்பித்தல் வேண்டும்)
- பட்டியல் தொடர்பான நிரூபணம் (நீர்பட்டியல்/மின்சாரப் பட்டியல்/தொலைத்தொடர்பு பட்டியல்)
- அண்மைய மாதத்திலான வங்கி கூற்று
- வியாபார பற்றுச்சீட்டு மற்றும் வார்நாமம் (இறக்குமதியாளராக பதிவு செய்வதற்காக மாத்திரம் வேண்டப்படும்)
- குறுந்தகவல் தொடர்பிலான விண்ணப்பப்படிவம்
- ஏற்றுமதி அனுமதிப்பத்திர சான்றிதழ் – ஏற்றுமதி அபிவிருத்திச் சபையினால் வினியோகிக்கப்பட்டவை (ஏற்றுமதியாளராக பதிவுசெய்வதற்காக மாத்திரம் வேண்டப்படும்.
கம்பனி ஒன்றின் விலாசத்தை மாற்றுதல் தொடர்பில் தேவைப்படும் ஆவணங்கள்
பின்வரும் மூல ஆவணங்களுடன் போட்டோ பிரதியும் சமர்ப்பித்தல் வேண்டும்.
வரையறுக்கப்பட்ட பொறுப்பு கம்பனிக்காக (வரையறுக்கப்பட்ட தனியார் மற்றும் வரையறுக்கப்பட்ட பொது)
- வேண்டுகோள் கடிதம் சுங்கப் பணிப்பாளர் நாயகத்திற்கு விலாசமிடப்படல் வேண்டும்)
- பெறுமதிசேர் வரிச் சான்றிதழ்
- வரி அடையாளப்படுத்தல் சான்றிதழ்
- படிவம் 13 (கம்பனிப் பதிவாளரினால் வினியோகிக்கப்பட்டவை)
- உரிய கிராம அலுவலரினால் வினியோகிக்கப்படும் விலாசத்தை உறுதிப்படுத்திய கடிதம்
தனியுரிமை மற்றும் பங்குடமை கம்பனிகளுக்காக;
- வேண்டுகோள் கடிதம் சுங்கப் பணிப்பாளர் நாயகத்திற்கு விலாசமிடப்படல் வேண்டும்)
- பெறுமதிசேர் வரிச் சான்றிதழ்
- வரி அடையாளப்படுத்தல் சான்றிதழ்
- வியாபார சான்றிதழ்
- உரிய கிராம அலுவலரினால் வினியோகிக்கப்படும் விலாசத்தை உறுதிப்படுத்திய கடிதம்
- வியாபாரம் அமையப்பெற்றுள்ள காணியின் உறுதி அல்லது வாடகை உடன்படிக்கை (காணி உறுதியானது கம்பனி உரிமையாளரின் அல்லது பங்குதார்களின் பெயரில் இல்லாது மூன்றாம் நபரின்பெயரிலாயின் காணி உரிமையாளரின் சம்மதத்தினை பிரமாணப்பத்திரம் மூலம் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்)
கம்பனியின் பெயர் மாற்றும் தொடர்பில் தேவைப்படும் ஆவணங்கள்
பின்வரும் ஆவணங்களுடன் போட்டோ பிரதியும் மூல ஆவணங்களும் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
- சுங்கப் பணிப்பாளர் நாயகத்திற்கு விலாசமிடப்பட்ட வேண்டுகோள் கடிதம்
- வியாபாரச் சான்றிதழ்/படிவம் 03
- வரி அடையாளப்படுத்தல் இலக்கம்
- பெறுமதிசேர் வரி சான்றிதழ்
பெறுமதிசேர் வரி இலக்கம் மாற்றம் தொடர்பில் வேண்டப்படும் ஆவணங்கள்
(மாற்றம்பெற்ற இறுதி நான்கு இலக்கங்கள்)
பின்வரும் ஆவணங்களுடன் போட்டோ பிரதியும் மூல ஆவணங்களும் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
- சுங்கப் பணிப்பாளர் நாயகத்திற்கு விலாசமிடப்பட்ட வேண்டுகோள் கடிதம்
- பெறுமதிசேர் வரி சான்றிதழ்
தற்காலிக பெறுமதிசேர் வரி சான்றிதழை இற்றைப்படுத்துவதற்குத் தேவைப்படும் ஆவணங்கள்
பின்வரும் ஆவணங்களுடன் போட்டோ பிரதியும் மூல ஆவணங்களும் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
- பெறுமதிசேர் வரி சான்றிதழ்
- பொருள் பற்றுச்சீட்டு
- வார்நாமம்
தற்காலிக பெறுமதி சேர்வரி தொடர்பிலான சுங்க இல்ல முகவரது செல்லுபடி காலத்தினை இற்றைப்படுத்துவதற்குத் தேவையான ஆவணங்கள்
பின்வரும் ஆவணங்களுடன் போட்டோ பிரதியுடன் மூல ஆவணங்களும் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
- பெறுமதிசேர் வரி சான்றிதழ்
- செல்லுபடியாகும் சுங்க இல்ல அனுமதிப்பத்திரம் அல்லது புதுப்பித்தல் விண்ணப்பம், அலுவலக பொறுப்பதிகாரியினால் (சுங்க இல்ல முகவர் பிரிவு) அங்கீகரிக்கப்பட்டவை
மேலதிக விபரங்களுக்கு https://www.customs.gov.lk/vatreg.html எனும் இணையத்தளத்திற்குள் பிரவேசிக்கவும்.
அமைப்பு பற்றிய தகவல்சுங்கத் திணைக்களம்
இல. 40,
பிரதான வீதி,
கொழும்பு 11.
தொலைபேசி:+94-11-2470945 to +94-11-2470948 தொலைநகல் இலக்கங்கள்:+94-11-2446364 மின்னஞ்சல்:dgc@customs.gov.lk இணையத்தளம்: www.customs.gov.lk
|