நிதி அமைச்சு
இலங்கைச் சுங்கம்
முதலீட்டாளர்களுக்கான வசதியளித்தல்- TIEP IV
உயர்தரமான தயாரிப்புக்கான தொழில்நுட்பம் (ஏற்றுமதி நோக்கிலான தற்காலிக இறக்குமதி IV)
இத்திட்டமாது, ஏற்றுமதி நோக்கிலான உற்பத்திகள் மற்றும் சேவைகளை தயாரிப்பதற்காக உயோகிக்கப்படும் மூலதன மற்றும் இடை நிலைப் பொருட்களது இறக்குமதி தொடர்பிலான அரசிறை அறவீடுகளை முழுமையாக அல்லது பகுதியளவில் விலக்களிப்புச் செய்ய அனுமதிக்கின்றது.
விலக்களிப்புக்காக தகுதிபெறுகின்ற மூலதன மற்றும் நடுத்தர பொருட்கள் :
- உற்பத்திச் செயன்முறையில் நேரடியாக தொடர்புபட்ட மூலதன பொருட்கள்
- இயந்திர சாதனங்கள்
- உபகரணங்கள்
- உதிரிப்பாகங்கள்
- உற்பத்திச் செயன்முறைக்காக அத்தியாவசிமென கருதப்படுகின்ற இடை நிலைப் பொருட்கள் (மூலப்பொருட்கள் விலக்கலாக)
- துணைக்கருவிகள்
- கருவிகள்
- காற்றுச் சீராக்கிகள், கணனிகள், மின்பிறப்பாக்கிகள் போன்ற துணைச் சாதனங்கள்
- ஏனைய அத்தியாவசிய உபகரணங்கள்
- கருத்திட்டங்கள் தொடர்பிலான உதிரிப்பாகங்கள்
- தொழிற்சாலை வளாகங்களில் அல்லது உற்பத்தி செய்கின்ற இடத்தில் முழுமையாக உற்பத்தி செய்முறையில் பாவிக்கப்படுகின்ற போக்குவரத்துச் சாதனங்கள் மற்றும் கையாளும் உபகரணங்கள்
- விவசாய கருத்திட்டங்களுக்கான விலங்கு இனப்பெருக்கம்
செயற்படுத்துவதற்காக அனுமதிக்கப்படுபவர்கள் யார்?
நேரடி ஏற்றுமதியாளர்கள்
ஏற்றுமதி நோக்கில் பொருட்களை உற்பத்தி செய்கின்ற உற்பத்தியாளர்கள்
நேரடியற்ற ஏற்றுமதியாளர்கள்
ஏற்றுமதிக்காக பொருட்களை உற்பத்தி செய்கின்ற ஏனைய கைத்தொழிற்சாலைகளுக்கான உள்ளீடுகளாக பொருட்களை உண்டுபண்ணுகின்ற தயாரிப்பாளர்கள்.
கிடைக்கத்தகு வசதிகள்
பின்வருகின்ற திட்டத்தின் கீழ் தீர்வை மற்றும் வரி விலக்களிப்புகள் வழங்கப்படும்.
-அவர்களது வெளியீடுகளில் 50% அல்லது அதற்கு மேற்பட்டவற்றினை ஏற்றுமதி செய்கின்ற ஏற்றுமதியாளர்கள் மற்றும் அவர்களது வெளியீடுகளில் 50% அல்லது அதற்கு மேற்பட்டவற்றினை நேரடி ஏற்றுமதியாளர்களுக்கு விநியோகிக்கின்ற நேரடியற்ற ஏற்றுமதியாளர்கள் விடயத்தில் 100% விலக்களிப்பு.
-அவர்களது வெளியீடுகளில் 25% அல்லது அதற்கு மேற்பட்டவற்றினை ஏற்றுமதி செய்கின்ற ஏற்றுமதியாளர்கள் மற்றும் அவர்களது வெளியீடுகளில் 25% அல்லது அதற்கு மேற்பட்டவற்றினை நேரடி ஏற்றுமதியாளர்களுக்கு விநியோகிக்கின்ற நேரடியற்ற ஏற்றுமதியாளர்கள் விடயத்தில் 50% விலக்களிப்பு.
- முதலீட்டுச் சபை வியாபாரங்களுக்கு உற்பத்திகளை விநியோகிப்பவர்கள் அத்தகைய பொருட்களது இறக்குமதி தீர்வை இலவசம் எனும் வகைக்குள் உள்ளாக்கப்பட்டு அத்தகைய பொருட்கள் கருதப்பட்ட ஏற்றுமதிகளாக (Deemed Exports) கருதப்படும்.
அங்கீகாரத்திற்கான நடைமுறை
- அங்கீகாரத்தினை பெறும் வகையில், நேரடி ஏற்றுமதியாளர்கள் அல்லது நேரடியற்ற ஏற்றுமதியாளர்கள் சுங்கப் பணிப்பாளர் நாயகத்திற்கு விபரிக்கப்பட்டுள்ள படிவத்தில் (TIEP IV) விண்ணப்பித்தல் வேண்டும்.
- படிவங்களை பிணைகள் பணிப்பகத்தின் ஏற்றுமதி வசதியளித்தல் பிரிவிலிருந்து பெற்றுக்கொள்ள முடியும்.
பதிவுசெய்வதற்காக தேவைப்படும் ஆவணங்கள்
- சரியாக பூர்த்திசெய்யப்பட்ட குறித்துரைக்கப்பட்ட படிவம் (TIEP IV) மூன்று பிரதிகளில்
- வேண்டுகோள் கடிதம்
- கருத்திட்ட அறிக்கை
- ஏற்றுமதி அபிவிருத்திச் சபை பதிவுச் சான்றிதழ்
- பெ.சே.வரி பதிவுச் சான்றிதழ்
- வியாபார பதிவுச் சான்றிதழ் (படிவம் 65)
- பொருள் உடன்படிக்கை (படிவம் 48)
- இரு பணிப்பாளர்களது அடையாள அட்டை பிரதிகள்
- ஏனைய தேவையான அங்கீகாரங்கள் (உதாரணமாக - தேயிலைச் சபை, தெங்கு அபிவிருத்திச் சபை போன்றவை)
அங்கீகாரத்தின் வகைகள
- அங்கீகாரம் பெறப்பட்ட திகதியிலிருந்து ஒரு வருட காலப்பகுதிக்கான பொதுவான அங்கீகாரம்.
- குறித்த அங்கீகாரமானது, ஒருபக்க இறக்குமதி செய்தலுக்காக விண்ணப்பம் மேற்கொள்கின்றபோது வழங்கப்படும்.
பாதுகாப்புகள்
- பாதுகாப்பு / வங்கி உத்தரவாதமானது பெ.சே.வரி நீங்கலாக செலுத்தத்தகு தீர்வை மற்றும் ஏனைய வரிகள் என்பவற்றின் முழுப் பெறுமதிக்கு சமமானதாகும்.
- செயற்படத் தொடங்கி ஒரு வருடத்திற்குப் பின்னர் சுங்கப் பணிப்பாளர் நாயகத்தினால் தீர்மானிக்கப்பட்டவாறாக சுங்கத்திற்கு தனிப்பட்ட / கூட்டுறவு வங்கி உத்தரவாதம் ஒன்றினை TIEP உரிமையாளர்கள் வழங்குதல் வேண்டும்.
- முதல் தடவையாக இறக்குமதி செய்கின்ற புதிய TIEP உரிமையாளர்கள் 100% வங்கி உத்தரவாதம் ஒன்றினை வழங்குதல் வேண்டும்.
- 03 வருடங்களுக்கு குறைந்த நற்போக்கு பதிவினையுடைய TIEP உரிமையாளர்கள் 25% வங்கி உத்தரவாதமொன்றினையும் மற்றும் 75% தனிப்பட்ட உத்தரவாதமொன்றினையும் வழங்கலாம்.
- 05 வருடங்களுக்கு மேற்பட்ட நற்போக்கு பதிவினையுடைய TIEP உரிமையாளர்கள் 100% தனிப்பட்ட உத்தரவாதம் அல்லது கூட்டுறவு உத்தரவாதமொன்றினை விண்ணப்பிக்கலாம்.
- சகல உத்தரவாதங்களும் ஒரு வருட காலப்பகுதிக்கே செல்லுபடியாகும்.
உத்தரவாதங்களது விடுவிப்பு
உற்பத்தி தொடங்கிய திகதியிலிருந்தான ஒரு வருடத்தின் இறுதியில், TIEP உரிமையாளர்கள் உற்பத்திப்பொருட்கள் மற்றும் ஏற்றுமதிகள் தொடர்பிலான அறிக்யொன்றினை மற்றும் / அல்லது அத்தகைய உற்பத்திகளது விநியோகங்கள் பற்றிய கூற்றினையும் TIEP IV ஆம் படிவத்தில் அங்கீகரிக்கப்பட்டதொரு கணக்காய்வாளரினால் உரிய முறையில் சான்றுபடுத்தப்பட்டு சுங்கப் பணிப்பாளர் நாயகத்திற்குச் சமர்ப்பித்தல் வேண்டும்.
உத்தரவாதம் விடுவிக்கப்பட்டதன் பின்னர், உரிமையாளர் இத்திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்யவோ, குத்தகைக்கு விடவோ, பொறுப்பு நீக்கம் செய்யவோ அல்லது சுங்கப் பணிப்பாளர் நாயகத்தின் முன் அங்கீகாரமின்றி, இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டவற்றுக்கான நோக்கம் தவிர்ந்த ஏதேனும் பிற நோக்கங்களுக்காக பாவிக்கப்படுவதற்கோ அல்ல என தெரிவித்து சுங்கப் பணிப்பாளர் நாயகத்திற்கு எழுத்து மூல உறுதிமொழி கொடுத்தல் வேண்டும்.
அமைப்பு பற்றிய தகவல்சுங்கத் திணைக்களம்
இல. 40,
பிரதான வீதி,
கொழும்பு 11.
தொலைபேசி:+94-11-2470945 to +94-11-2470948 தொலைநகல் இலக்கங்கள்:+94-11-2446364 மின்னஞ்சல்:dgc@customs.gov.lk இணையத்தளம்: www.customs.gov.lk
|