வீட்டுக் கடனுக்காக ஊழியர் சேமலாப நிதியத்தின் உத்தரவாதச் சான்றிதழை வழங்குதல் |
|
||||||||||
தகைமைகள்
தற்போது ஊ.சே. நி. பங்களிப்புச் செய்து கொண்டிருக்கும் செயற்படு நிலையில் உள்ள அங்கத்தவர்கள், ஊ.சே. நி. கணக்கில் உள்ள தமது மீதியின் 75% இற்கான உத்தரவாதச் சான்றிதழுக்குத் தகுதியுடையவராவர்.
தற்போது ஊ.சே. நி. பங்களிப்புச் செய்யாது செயற்பாடற்ற நிலையில் உள்ள அங்கத்தவர் ஊ. சே. நி. கணக்கில் உள்ள தமது மீதியின் 50% இற்கான உத்தரவாதச் சான்றிதழுக்குத் தகுதியுடையவராவர். விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிக்கும் முறை
விண்ணப்பப் படிவம் பெற்றுக் கொள்ளக் கூடிய இடங்கள்:-
மாவட்டத் தொழில் அலுவலகங்கள், தலைமை அலுவலக கீழ் தளத்தில் உள்ள கரும பீடத்தில் மற்றும் இணையத் தளத்தில் பெற்றுக் கொள்ளலாம் .
இணையத்தளம் labourdept.gov.lk
விண்ணப்பப் படிவத்திற்கான கட்டணம்:-
75% வீட்டுக்கடன் விண்ணப்பப்படிவம்- ரூபா.40/= விண்ணப்பப்படிவம் சமர்ப்பிப்பதற்கான காலம் :-
அங்கத்தவரால் பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப் படிவமானது , அவரது வதிவிடத்திற்கு அருகாமையில் உள்ள வலையத் தொழில் அலுவலகத்திற்கு வேலைநாட்களில் அலுவலக நேரத்தில் அங்கத்தவரே நேரில் சென்று சமர்ப்பிக்க வேண்டும். சேவையைப் பெற்றுக் கொள்வதற்கான கட்டணம் :-
சேவைக் கட்டணம் இல்லை சேவையை வழங்குவதற்கான காலப்பகுதி (சாதாரணசேவை /முன்னுரிமைச்சேவை)
அனைத்து ஆவணங்களும் சரியாக இருப்பின், 06 கிழமைகளுள். உறுதிப்படுத்தத் தேவைப்படும் ஆவணங்கள்
பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப் படிவம் மற்றும் தேவைப்பாடுகளின் பிரகாரம் அறுவுறுத்தல் தாளில் குறிப்பிடப்பட்டுள்ள பிற ஆவணங்கள். (தேவைப்படும் ஆவணங்களின் மீதான தகவல்களை மாவட்டத் தொழில் அலுவலகத்திலிருந்துபெற்றுக் கொள்ளலாம்) இந்தச் சேவைக்குப் பொறுப்பாக உள்ள பதவி நிலை அலுவலர்கள்
அசாதாரண அல்லது மேற்கூறப்பட்டுள்ள தேவைகளுக்குப் புறம்பான சந்தர்ப்பங்கள் மற்றும் விசேட தகவல்கள்
சமர்பிக்கும் ஆவணங்களில் ஏதாவது குறைபாடுகள் காணப்படின் அவ்விடயங்கள் தொடர்பாக விண்ணப்பம் சமர்ப்பிக்கும் தொழில் அலுவலக பிரதித் தொழில் ஆணையாளர் அல்லது உதவித் தொழில் ஆணையாளருடன் கலந்தாலோசிக்கலாம் விண்ணப்பப்படிவம் (விண்ணப்பப் படிவத்தை இணைக்க)
தேவையான விண்ணப்பப் படிவத்தை இணையத் தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்
|
முறைப்பாடு செய்யவும் |
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 06:38:44 |
» | உடல் நல வைத்திய அதிகாரி |
» | பொது சுகாதார கண்காணிப்பாளர் |
» | குடும்ப சுகாதார மருத்துவச்சி |
» | பொலிஸ் நிலையம் |
» | புகையிரத நேர அட்டவணை |