படி 1: விண்ணப்பதாரர் படிவம் "M.T.A. 42" கீழ்கண்ட இடங்களிலிருந்து பெறுதல்:
மாவட்ட செயலக அலுவலகங்கள் (சாதாரன சேவை)
வெரஹேராவில் உள்ள தலைமை அலுவலகம் – கொழும்பு (ஒரு நாள் சேவை-முன்னுரிமை)
படி 2: பூர்த்தி செய்யப்பட்ட படிவத்துடன் சேர்த்து தேவையான ஆவணங்களையும் துணை ஆணையாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும்:
மாவட்ட செயலக அலுவலகங்கள் (சாதாரன சேவை)
வெரஹேராவில் உள்ள தலைமை அலுவலகம் – கொழும்பு (ஒரு நாள் சேவை-முன்னுரிமை)
படி 3: ஆவணங்களின் உண்மைத்தன்மையை திணைக்களம் சரிபார்க்கும்.
படி 4: துணை ஆணையாளரிடம் போலி உரிமத்தை வழங்கமாறு கட்டளையிடுதல்.
படி 5: போலியான உரிமமத்தை திணைக்களம் வழங்குதல்.
குறிப்பு:
விண்ணப்பதாரர்கள் சமர்பித்த ஆவணங்கள் சரியானவை இல்லை என கண்டறியப்பட்டால் போலி உரிமத்திற்கான வேண்டுகோள் நிராகரிக்கப்படும் மற்றும் விண்ணப்பதாரர்கள் அதற்கு தொடர்பான ஆவணங்களை மறுபடியும் சமர்ப்பிக்க வேண்டும்.
தகுதி:
கீழ்காணும் சூழ்நிலைக்கு தகுந்தவாறு விண்ணப்பதாரர்கள் இந்த சேவைக்காக விண்ணப்பிக்க வேண்டும்:
ஓட்டுனர் உரிமம் தொலைந்து போயிருப்பின்
ஓட்டுனர் உரிமம் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருப்பின்
இந்த சேவையில் தகுதி பெறுவதற்கு விண்ணப்பதாரர்கள் கீழ்காணும் கட்டளைகளை சந்திக்க வேண்டும்:
ஓட்டுனர் உரிமத்தின் உரிமையாளராக இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் வழங்கும் உரிமத்தின் விபரங்கள் கீழ் கொடுத்திருக்கும் இரண்டிற்குள் இருக்க வேண்டும்.
கணிப்பொறி திணைக்களம் (1996க்குப் பிறகு வழங்கப்பட்ட உரிமம் எனில்)
செயல்முறை கோப்பு (1996க்கு முன் வழங்கப்பட்ட உரிமம் என்றால்)
இந்த சேவைக்குள் தேவைப்படும் அனைத்து ஆவணங்களையும் வழங்க வேண்டும். (“தேவையான ஆவணங்கள்” என்ற பிரிவில் பார்க்கவும்)
குறிப்பு:
மேலே கொடுக்கப்பட்டுள்ள கட்டளையை சந்திக்காத விண்ணப்பதாரர்கள் யாராக இருந்தாலும் தகுதியற்றவர்கள் என்று கருதப்படுவர்.
சமர்ப்பிக்கும் முறைகள்:
அனைத்து விண்ணப்பங்களும் உரிமப் பிரிவின் ஆணையாளரிடம் அனுப்பப்படும்.
ஆணையாளர் – வாகனப் போக்குவரத்து திணைக்களம்,
தபால் பெட்டி: 533, 581-341, எல்விட்டிகல மாவத்த.
கொழும்பு 5.
குறிப்பு 1:
உரிமம் பெறுவதற்கான எளிய வழியை விண்ணப்பதாரர்களுக்கு வழங்குதல்:
அனைத்து மாவட்ட காரியதரிசி அலுவலகங்கள் (சாதாரண சேவை)
வெரடிஹராவில் உள்ள தலைமை அலுவலகம் – கொழும்பு (ஒரு நாள் சேவை-முன்னுரிமை)
குறிப்பு 2:
“சமர்ப்பிக்க வேண்டிய காலக்கோடு” என்ற பிரிவில் பார்க்கவும்.
“இணைப்பு ஆவணங்கள்” என்ற பிரிவில் பார்க்கவும்.
விண்ணப்பபடிவம்:
படிவம் "M.T.A. 42"
காலக்கெடு:
செயல்முறை காலக்கெடு:
ஒரு நாள் சேவைக்காக விண்ணப்பித்தல் (முன்னுரிமை): ஒரு நாட்களுக்குள் உரிமம் வழங்கப்படும்.
சாதாரண சேவைக்காக விண்ணப்பித்தல் : 3 மாதத்திற்குள் உரிமம் வழங்கப்படும்.
சமர்ப்பிக்க வேண்டிய காலக்கெடு:
விண்ணப்ப படிவங்கள் பெறுதல் மற்றும் சமர்ப்பித்தல்:
வேலை நாட்கள் : திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை
கருமபீடம் திறந்திருக்கும் நேரம்: மு.ப 9:30 மணி முதல் பி.ப 3:30 மணி வரை (சாதாரண)
கருமபீடம் திறந்திருக்கும் நேரம்: மு.ப 9:30 மணி முதல் பி.ப 12:30 மணி வரை (முன்னுரிமை)
விடுமுறை நாட்கள் : அனைத்து பொது மற்றும் வணிக நாட்கள்
குறிப்பு:ஒரு நாள் சேவைத்திட்டத்தில் விண்ணப்பதாரர்கள் படிவம் சமர்ப்பித்த அன்றே பி.ப 3.30 மணிக்கு மேல் விண்ணப்பம் சமர்ப்பித்தலுக்கான அதே முறைகளை பின்பற்றி போலி உரிமத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.
ஏற்றுக்கொள்ளக்கூடிய காலக்கெடு:
செயல்கள் முடிவடையும் வரை மற்றும் போலி உரிமம் வழங்கும் வரை அந்த விண்ணப்பம் செல்லுப்படியாகும்.
சேவைத் தொடர்பான கட்டணங்கள்:
விண்ணப்பம் பெறுவதற்கான செலவீனம்:
விண்ணப்ப படிவங்கள் இலவசமாக வழங்கப்படும்.
கட்டணம்:
வேண்டுதலின் வகை |
சாதாரண சேவை |
முன்னுரிமை சேவை |
தொலைந்த உரிமத்திற்காக |
ரூ. 520.00 |
ரூ. 770.00 |
சேதாரமான உரிமத்திற்காக |
ரூ. 520.00 |
ரூ. 770.00 |
3 வருட புதுப்பித்தலில் தொலைந்த உரிமத்திற்காக |
ரூ. 820.00 |
ரூ. 1120.00 |
5 வருட புதுப்பித்தலில் தொலைந்த உரிமத்திற்காக |
ரூ. 1120.00 |
ரூ. 1470.00 |
5 வருட புதுப்பித்தலில் தொலைந்த உரிமத்திற்காக |
ரூ. 1420.00 |
ரூ. 2270.00 |
அபராதம்:
இந்த செயலில் அபராதங்கள் எதுவும் இல்லை.
இதரக்கட்டணம்:
இந்த சேவையை பெறுவதற்கு கூடுதல் செலவினங்கள் எதுவும் இல்லை.
தேவையான இணைப்பு ஆவணங்கள்:
"2*2 ” அளவில் இரண்டு கருப்பு வெள்ளை நிழற்படங்கள் அதில் ஒரு நிழற்படத்தின் பின்புறம் கிராம நிலதிகாரியிடம் அத்தாட்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
உரிமம் தொலைந்துவிட்டது என்று பொலிஸிடம் கொடுத்த பதிவின் அத்தாட்சி நகல்.அந்த நகல் கடைசி 6 மாத காலத்திற்குள் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
தேசிய அடையாள அட்டை - தேசிய அடையாள அட்டையின் இலக்கம் கொண்டுள்ள செல்லத்தக்க கடவுச்சீட்டின் அசல் மற்றும் நிழற்படநகல்
விண்ணப்பதாரரின் தற்போதைய உரிமம் - உரிமம் பழுதடைந்திருக்கும் பட்சத்தில்,
**முன்னுரிமை சேவைக்கு பதிவுசெய்யும் போது கிராம நிலதாரியிடமிருந்து ஒரு கடிதம் அல்லது மண்டல செயலதிகாரி சான்றழித்த வாழ்விட உண்மை அத்தாட்சியை விண்ணப்பதாரர் வழங்க வேண்டும்.
சேவைக்கான பொறுப்புக் குழு:
பதவி |
பெயர் |
பிரிவு |
தொலைபேசி |
ஆணையாளர் |
Mr. B. விஜயரத்னே |
பொது |
011-2698717 |
கூடுதல் ஆணையாளர் |
திரு. கண்ணகரா |
உரிமம் பிரிவு |
011-2556856/011-2516404 |
துணை ஆணையாளர் |
திருமதி. சந்தர கருணசேனா |
உரிமம் பிரிவு |
|
மேற்பார்வை அலுவலர்கள் |
திரு. சோமசிரி பெர்ணான்டோ |
உரிமம் பிரிவு |
|
சிறப்பு வகையறைகள்:
இந்த சேவையில் விண்ணப்பிப்பதற்கு எந்த சிறப்பு நிபந்தனையும் இல்லை.
போலித் தகவல்களுடன் கூடிய மாதிரிப் படிவம்:
“M.T.A. 42 படிவம்”
அமைப்பு பற்றிய தகவல்மோட்டார் வாகனத் திணைக்களம்
இல. 581-341, எல்விடிகல மாவத்தை, கொழும்பு 05.
திரு. B. விஜயரத்னா தொலைபேசி:011-2698717 தொலைநகல் இலக்கங்கள்:011-2694338 மின்னஞ்சல்:e.dmts@sltnet.lk இணையத்தளம்: www.dmt.gov.lk
|