படி 1: புகார் கொடுப்பவர் புகாரை பொலிஸ் நிலையத்தில் கொடுப்பர்.
படி 2: பொலிஸ் அலுவலர் புகாரை சரிபார்த்து புகார் கொடுப்பவரை நேரடியாக சிறார் குற்றப்பிரிவிற்கு கொண்டு செல்லுவார்.
படி 3: பொலிஸ் அலுவலர் புகாரை எழுதிக் கொண்டு படிவம் B ஐ புகார் கொடுப்பவரிடம் வழங்குவார்.
படி 4: பொலிஸ் அலுவலர் இருதரப்பினர்களுக்கும் (அல்லது அதற்கும் மேல்) நீதிமன்ற ஆணையை அனுப்புவர்.
படி 5: பொலிஸ் அலுவலர் சர்ச்சையை முடிக்க முயற்சி செய்வார்.
படி 6: சர்ச்சை முடியவில்லை எனில். பொலிஸ் அலுவலர் (சிறார் குற்றப்பிரிவு) நேரடியாக சர்ச்சையை நடுநிலை குழுவிடம் கொண்டு செல்வார்.
படி 7: நடுநிலை குழு சர்ச்சையை முடிக்க முயற்சி செய்வர்.
படி 8: சர்ச்சையானது முடிவுக்கு வரவில்லை எனில். நடுநிலைக் குழு நேரடியாக சர்ச்சையை நீதிமன்றத்திடம் கொண்டு செல்லப்படும்.
குறிப்பு 1:
சர்ச்சை நடுநிலை குழுவால் முடிவுக்கு கொண்டு வர இயலவில்லை என்றால் அந்த குழுவானது புகார் கொடுப்பவரை நீதிமன்றத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுவார்.
குறிப்பு 2:
புகார் கொடுப்பவர் புகார் பிரதித் தேவைப்பட்டால் அவர்கள் நீதிமன்ற ஆணையின் படிக் கொடுக்கலாம்.
தகுதி வரையறைகள்:
குற்றத்திற்கான ஆதாரம் கண்டிப்பாக புகாரில் இருக்க வேண்டும்.
குறிப்பு:
தகுதியிர்ப்பு வரையறைகள்:
எந்த ஒரு விண்ணப்பதாரராவது மேலே குறிப்பிடப்பட்ட வரையறைக்கு உட்படாமல் இருந்தால் அவர் இந்த சேவையைப் பெறுவதற்கு தகுதியற்றவராக கருதப்படுவார்.
சமர்ப்பிக்கும் முறைகள்:
பொலிஸ் நிலையத்திற்கு செல்லுதல்
வழக்குத் தொடர்பானவர்கள் பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்தல்.
புகாரை சமர்ப்பித்தல்
வழக்குத் தொடர்பானவர்கள் பொலிஸ் அலுவலரிடம் புகாரைத் தெரிவித்து அதனை ஒரு அறிக்கையாக புகார் ஏட்டில் எழுதுவார் பொலிஸ் புகார் எடுத்ததற்கான வரவுச்சீட்டை (B படிவத்தை) வழக்குத் தொடர்பானவரிடம் வழங்குவார்.
வேலை நேரங்கள்
பொலிஸ் நிலையம்:
24/7/365 நாட்கள்
நடுநிலைக் குழு:
சனிக்கிழமைகள் – மு.ப 8.00 மணி முதல் பி.ப 4.00 மணி வரை
படிவத்தின் பெயர்: B படிவம் – இப்படிவம் பொலிஸ் நிலையத்தில் எழுதப்பட்டிருக்கும் ஆதார ஏட்டினைப் பற்றியப் புகாரின் ஆதாரம் மற்றும் சுருக்கமான அறிக்கையாகும்.
விண்ணப்பப்படிவம்:
இந்த சேவைக்கு எந்த ஒரு விண்ணப்ப படிவமும் இல்லை.
குறிப்பு:
வழக்கு தரப்பினர் புகார் தகவல்களை பொலிஸ் நிலையத்திலிருந்துப் பெறுவதற்கு பக்கத்திற்கு ரு: 25.00 வீதம் செலுத்தி தகவல்களை பெற்றுக் கொள்ளலாம்.
புகார்களை எடுப்பதற்கான படிவத்தை பார்க்கவும்.(DOP F424)
காலக்கெடு:
செயல்முறை காலக்கெடு
சர்ச்சையின் சிக்கலைப் பொறுத்து அமையும்.
பொலிஸ் அலுவலர்: பொலிஸ் அலுவலர் சர்ச்சையை முடிவுக்கு கொண்டு வருவதில் வெற்றி அடைந்தால் செயல்முறைக் காலம் ஒரு நாளுக்குள் ஆகும்.
குறிப்பு:
சர்ச்சையானது நடுநிலைக் குழு அல்லது நீதிமன்றத்திடம் இருந்தால் செயல்முறை காலத்தை வரையறுக்க முடியாது.
சேவைத் தொடர்பான கட்டணங்கள்:
புகார் கொடுப்பவர் புகார் தகவல்களை பொலிஸ் நிலையத்திலிருந்துப் பெறுவதற்கு பக்கத்திற்கு ரு: 25.00 வீதம் செலுத்தி தகவல்களை பெற்றுக் கொள்ளலாம்.
அபராதம் மற்றும் இதரக் கட்டணம்:
பொலிஸ் அலுவலர் தவறான புகார்களுக்கு அபராதம் விதிக்காது.
குறிப்பு:
தவறான புகார்கள் கொடுக்கப்பட்டிருந்தால் பொலிஸ் புகார் கொடுப்பவரை நீதிமன்றத்திடம் ஒப்படைத்து நீதிமன்றம் புகார் கொடுப்பவருக்கு அபராதம் விதிக்கும்.
தேவையான இணைப்பு ஆவணங்கள்:
இந்த சேவைக்கு தேவையான இணைப்பு ஆவணங்கள் ஏதுவுமில்லை.
சேவைக்கானப் பொறுப்புக் குழு:
OIC (அலுவலகத்தின் பொறுப்பாளர்) : சிறார் வன்முறை கோட்டம்
OIC (அலுவலகத்தின் பொறுப்பாளர்) : பொலிஸ் நிலையம்
நடுநிலைக் குழு : அலுவலர்
சிறப்பு வகையறைகள்:
இந்த சேவைக்கு எதுவும் இல்லை.
போலித் தகவல்களுடன் கூடிய மாதிரிப் படிவம்:
இரகசிய தகவல்களாய் இருப்பதன் காரணமாக பொலிஸ் நிலையம் வழங்கவில்லை.
அமைப்பு பற்றிய தகவல்பொலிஸ் திணைக்களம்
பொலிஸ் தலைமையகம், கொழும்பு 01. Mr. Lasitha Weerasekara தொலைபேசி:+94-11-2421111 / +94-11-2327711-2-3 தொலைநகல் இலக்கங்கள்:+94-11-234553 மின்னஞ்சல்:telligp@police.lk இணையத்தளம்: https://www.police.lk
|