போட்டி இல்லாத சூழ்நிலைகளின் மேல் விசாரணை |
|
|||
போட்டி எதிர்ப்பு நடைமுறைகளின் மேலான விசாரணை இலங்கைக்குள் போட்டி எதிர்ப்பு நடைமுறையை தவிக்க இச்சேவை நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையினால் வழங்கப்படுகின்றது.
போட்டி எதிர்ப்பு நடைமுறையினை பின்வருமாறு விபரிக்க முடியும் ஒரு நபர் அல்லது ஒரு குழுவினரின் வியாபார நடவடிக்கையின் போது, பண்டங்களில் தயாரிப்பு, வழங்கள் அல்லது கொள்ளல் அல்லது சேவைகள் வழங்கல் அல்லது பெற்றுக்கொள்ளல் தொடர்பாக போட்டியினை மட்டுப்படுத்துகின்ற, மாறான வழியில் இட்டு செல்கின்ற அல்லது தடுக்கின்ற விதத்தில் அமைகின்ற போது.
தகுதி வியாபாரி அல்லது நுகர்வோர் அமைப்பு அல்லது வர்த்தக சங்கங்கள் போட்டி எதிர்ப்பு நடைமுறைகள் சம்பந்தமாக எழுத்துமூலம் ஆதாரத்துடன் தெரிவிக்கலாம்.
சமர்ப்பிக்கும் வழிமுறை அனைத்து புகார்களும் நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையின் தலைவர் அல்லது பணிப்பாளர் நாயகத்துக்கு அனுப்ப பட வேண்டும்.
விண்ணப்ப படிவம் இந்த சேவைக்கு விண்ணபிக்க நிலையான படிவங்கள் எதுவும் வரையறுக்கப்படவில்லை. விண்ணப்பதாரியின் கையெழுத்துடன் கூடிய கடிதம் மூலம் விண்ணப்பம் செய்வது வரவேற்க தக்கது.
படிப்படியான வழிமுறைகள் படி 1: விண்ணப்பதாரி புகார்களை நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபைக்கு அனுப்ப முடியும் அல்லது நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை விசாரணைகளை தானாகவும் ஆரம்பிக்க முடியும். படி 2 : நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை விசாரணை மேற்றகொள்வதற்க்கு சாட்சிகளுக்கு அழைப்பாணை அனுப்பப்படும். படி 3 : விசாரணையின் போது விண்ணபதாரிக்கு ஆதாரங்களை கேட்டறிவதற்கு சந்தர்பம் வழங்கப்படும். படி 4 : விசாரணையின் போது பிரதிவாதிக்கு தேவையான ஆவணங்களை சமர்பிக்கவும் கேட்டறியவும் சந்தர்பம் வழங்கப்படும் படி 5 : ஆதாரங்கள் மற்றும் சத்தியகடதாசிகள் பெற்றுக்கொள்ளப்படும். படி 6 : நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை விசாரணை மூலம் முடிவெடுக்கும்.
குறிப்பு விசாரணையின் மூலம் போட்டி எதிர்ப்பு நடைமுறை இருக்குமிடத்து, அதிகாரசபை, விண்ணபங்களை பேரவைக்கு அனுப்பப்படும். விண்ணபங்களை பேரவைக்கு அனுப்பும் இடத்து, நுகர்வோர் ஆலோசனை பேரவையானது பெறப்பட்ட திகதியில் இருந்து ஒரு மாதகாலத்துக்குள் உறுதி செய்யவேண்டும்.
கால எல்லை செயல்முறை கால எல்லை அதிகாரசபை விசாரணையினை மேற்கொள்வதற்க்கு 100 நாட்களும் ஆலோசனை பேரவைக்கு ஒரு மாத கால எல்லையினை எடுத்து கொள்ளும்.
சமர்பிக்கும் கால எல்லை வேlலை நாட்கள் : திங்கள் கிழமை முதல் வெள்ளி கிழமை வரை திறந்திருக்கும் நேரம் : மு.ப 8.30 முதல் பி.ப 4.15 வரை விடுமுறை நாட்கள் : பொது விடுமுறை நாட்கள் மற்றும் வணிக விடுமுறை நாட்கள்
ஏற்றுகொள்ளகூடிய காலக்கோடு பொருந்தாது
சேவை தொடர்பான கட்டணம் இந்த சேவைக்கு கட்டணம் எதுவும் இல்லை
அதிகாரசபையில் தொடர்புகளுக்கு 1ம் , 2ம் தளம், சதொச CWECWEசெயலகக் கட்டிடம் வாக்ஸல் தெரு. கொழும்பு 02
|
முறைப்பாடு செய்யவும் |
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 04:55:19 |
» | உடல் நல வைத்திய அதிகாரி |
» | பொது சுகாதார கண்காணிப்பாளர் |
» | குடும்ப சுகாதார மருத்துவச்சி |
» | பொலிஸ் நிலையம் |
» | புகையிரத நேர அட்டவணை |