அங்கிகரிக்கப்படாத அபிவிருத்தி அடைந்த நிலத்தை குத்தகைக்கு பெறுதல்
அங்கிகரிக்கப்படாத அபிவிருத்தி அடைந்த நிலத்தை குத்தகைக்கு பெறுதல்
தகுதி
• சம்பந்தப்பட்ட அரசின் அங்கிகரிக்கப்படாத அபிவிருத்தி நிலம் எண்ணப்பதாரிடம் 15.06.1995 க்கு முன்னதாக இருக்க வேண்டும்.
• சம்பந்தப்பட்ட நிலம வனப் பகுதியை சாராமல் இருத்தல் வேண்டும் அல்லது அரசாங்கததின உடனடி தேவைக்கு பயன்படக்கூடிய நிலமாக இருக்கக் கூடாது.
• விண்ணப்பதாரர் இலங்கையை சார்ந்தவராக இருத்தல் வேண்டும்.
• விண்ணப்பதாரர் திருமணம் ஆனவராக இருத்தல் வேண்டும்.
• விண்ணப்பதாரர் குடும்பத்தின் மொத்த மாத வருமானம் ரூ. 2500/-க்கு மேல் இருத்தல் வேண்டும்.
• விண்ணப்பதாரர் (ஆண்/பெண்) சொந்தமான நிலம் வைத்திருக்கக் கூடாது.
• எந்தவித வில்லங்கமும் இல்லாமல் நிலமாக இருக்க வேண்டும்.
• அது சார்ந்த பகுதியில் குறைந்து 5 வருடமாவது வாழ்ந்திருக்க வேண்டும்.
சமர்ப்பிக்கும் முறைகள்
விண்ணப்ப படிவத்தை பெறுதல் • குத்தகைக்கு பெற தேவையான நிலத்தின் முழு தகவல்களையும் விண்ணப்பதாரர் வேண்டுகோள் கடிதம் மூலம் தெரிவிக்கவேண்டும்
தேவையான இணைப்பு ஆவணங்கள் • கிராம சேவகர் அறிக்கையானது விண்ணப்பதாரரிடம் சொந்தநிலம் இல்லை என நிருபபிப்பதாக இருக்க வேண்டும்
• கிராம சேவகர் நிலத்தின் தன்மையை அறிவிப்பார்
விண்ணப்ப படிவத்தை ஒப்படைத்தல் • பூர்த்தி செய்யப்பட்ட வேண்டுகோள் கடிதம்; அதற்கு தொடர்புடைய இணைப்பு ஆவணங்களுடன் கோட்ட செயலகத்திடம் சமர்ப்பித்தல் வேண்டும்
வேலை நாட்கள்
திங்கட்கிழமை ரூ புதன்கிழமை
வேலை நேரம்
மு.ப 9.00. முதல் பி.ப. 4.30 வரை
அடிகோடிட்டு காட்டப்பட்டவற்றை தகுந்தவாறு மாற்றவும்
படிப்படியான வழிமுறைகள் (அங்கீகரிக்கப்படாத அபிவிருத்தியடைந்த நிலத்தை குத்தகைக்கு பெறுதல்)
படி 1: விண்ணப்பதாரர் அபிவிருத்தியடைந்த நிலத்தை பெறுவதற்கு முழுவிவரங்களுடன் வேண்டுகோள் கடிதத்தை தயார் செய்ய வேண்டும்.
படி 2: விண்ணப்பதாரர் கிராம சேவகரிடமிருந்து அறிக்கையை பெற வேண்டும்.
குறிப்பு: விண்ணப்பதாரரால் கொடுக்கபட்ட விவரங்களை கிராம சேவகர் பணிக்கு சென்று சரிபார்த்தல்.
படி 3: விண்ணப்பதாரர் சம்பந்தபட்ட கோட்ட செயலகத்திடம் தனது விண்ணப்ப படிவத்தையும், கிராம சேவகரின் அறிக்கையையும் சேர்த்து சமர்பிக்க வேண்டும்.
படி 4: விண்ணப்பதாரரை கோட்ட செயலர் நேர்முக தேர்வுக்காக அழைத்து வேண்டும்.
படி 5: நிலம்நகர்புற பகுதியில் இருந்தால், சம்பந்தபட்ட கோட்ட செயலகம் நில மதிப்பீட்டு அறிக்கையை மாகாண நில ஆணையாளரிடம் அனுமதிக்காக அனுப்ப வேண்டும்
படி 6: நில ஆணையாளர் அனுமதி அளித்து அதன்பின் விண்ணப்பதாரர் நிலத்தை பெறுவதற்கு சம்பந்தப்பட்ட கோட்ட செயலகத்தில் அனுமதி பெற வேண்டும்.
குறிப்பு: நில ஆணையாளர் அறிக்கைக்கு அனுமதி அளிக்கவில்லையெனில் விண்ணப்பதாரர் இச்சேவையை பெறுவதற்கு தகுதியை இழக்கிறார்.
குறிப்பு 1: ஒவ்வொரு வருடமும் அனுமதி புதுப்பிக்க வேண்டும் அனுமதி புதுப்பிக்க தவறினால் வருட குத்தகை பண அடிப்படையில் செலுத்தபட்டு வருடகடைசியில் அனுமதி ரத்து செய்யபடும்.
குறிப்பு 2: குறிப்பிட்ட நிலம் கிராம புற பகுதியில் அமைந்திருந்தால் அவற்றிற்கு நில மதிப்பு செய்ய தேவையில்லை மாகாண நில ஆணையளர் அனுமதி அளித்தால், அந்த நிலங்களை விண்ணப்பித்தவருக்கு ஸ்வர்ணபூமி / ஜெயபூமி திட்டத்தின் அடிப்படையில் வழங்கலாம் இவற்றிற்கு எந்தவித வருட கட்டணமும் மேற்கொள்ள தேவையில்லை.
குறிப்பு 3: ஸ்வர்ணபூமி / ஜெயபூமி அமைப்பின் கீழ் கொடுக்கும் திட்டம் இதுவரைக்கும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது விரைவில் இதற்கான புதிய முறை அறிமுகபடுத்தபடும்.
காலக்கோடு
செயல்படுத்துவதற்கான காலக்கோடு 3 மாதத்திற்குள்
சமர்பிக்க வேண்டிய காலக்கோடு கோட்ட செயலகத்தின் எந்த வேலை நேரங்களும்
ஏற்றுக்கொள்ள கூடிய காலக்கோடு நகர்புற பகுதிகளுக்கு:
குத்தகை காலஅளவு – ஜனவரி1ஆம் திகதியிலிருந்து– டிசம்பர் 31ஆம் திகதி வரை
ஒவ்வொரு வருடமும் புதுப்பிக்க வேண்டும்
அந்த வருடத்தில் மார்ச் 31 வரை உள்ள காலத்திற்கு குத்தகை பணத்தை எந்தவித அபராதமும் இன்றி செலுத்தலாம்.
வேலை நேரங்கள் / நாட்கள்
கோட்ட செயலக அலுவலகம் (அரசாங்க நிலங்களின் செயல்பாட்டுப் பிரிவு):
மு.ப. 9.00 முதல் – பி.ப.4.30 வரை
திங்கட்கிழமை மற்றும்; புதன்கிழமை
கிராம சேவகர் அலுவலகம் : மு.ப. 9.00. முதல் – பி.ப. 4.45 வரை
திங்கட்கிழமை மு.ப.9.00 முதல் – பி.ப. 12 வரை வியாழன் முதல் சனிக்கிழமை வரை
சேவை தொடர்பான கட்டணங்கள் நகர்புற பகுதிகளுக்கு:
முதல் 5 வருடங்கள் – 4% நிலமதிப்பீடு
அதன் பிறகு ஒவ்வொரு 5 வருடங்களும் – வருட அனுமதி 50%
கூடி கொண்டே போகும்.
குறிப்பு: மார்ச் 31ஆவது திகதிக்குப் பிறகு தொகை செலுத்தபட்டால் அபராதமாக 10% வசூலிக்கபடும்.
கிராமபற பகுதிகளுக்கு : எந்த வித கட்டணமும் கிடையாது.
தேவையான இணைப்பு ஆவணங்கள் • விண்ணப்பதாரருடைய உரிமையின் அடிப்படையில் விண்ணப்பதாரர் எந்தவித நிலமும் சொந்தமாக வைத்திருக்கவில்லை என்று கிராம சேவகரின் அறிக்கை நிருபிக்க வேண்டும்.
• நிலத்தின் அமைப்பு பற்றி கிராம சேவகர் குறிப்பிட வேண்டும்.
அமைப்பு பற்றிய தகவல்
பிரதேச செயலகம் இலங்கை
Divisional Secretary,
Colombo Divisional Secretariat,
Dam Street,
Colombo 12.
அரசாங்க தகவல் நிலையத்திற்கு (GIC) வரவேற்கிறோம். அரசாங்க தகவல்களை அணுகுவது உங்கள் உரிமை. தங்களுக்கு தேவையான அதிகாரப்பூர்வ அரசாங்க தகவல்களை செயல்திறனுடன் வழங்குவோம்.
Welcome to the Government Information Center (GIC). It’s your right to have access to Government Information.
We strive our best to cater your information needs as GIC. Please provide your name,
District & Contact number and kindly wait until one of our Agents get in touch with you.