அடகுகடைத் தரகர் தொழிலுக்கு உரிமம் வழங்குதல்
தகுதி
o விண்ணப்பதாரர்; இலங்கை குடிமகனாக இருத்தல் வேண்டும்.
o விண்ணப்பதாரர் ஏதாவது தவறு செய்து அதற்கு சட்டத்தின் கீழ் தண்டனை பெற்றவராகவோ அல்லது சட்டத்திற்கு புரம்பாக நடந்து கொள்பவராக இருத்தல் கூடாது.
குறிப்பு: அடகுபிடிப்பதற்கான உரிமம் இல்லாத எந்த ஒரு நபரினாலும் இத்தொழிலை செய்ய முடியாது.
குறிப்பு: தகுதியற்ற காரணிகள்
• பின் வரும் நபர்கள் அடகு தொழில் செய்ய தடை செய்யப்பட்டவர்கள்
o இலங்கை குடிமகன் அல்லாத நபர் அல்லது
o வெளிநாட்டு நிறுவனம் அல்லது
o வெளிநாட்டு அமைப்பு
• எந்த நபராவது அடகு தொழிலுக்கான உரிமம் வைத்திருக்காவிட்டால்:
- உரிமத்திற்காக விண்ணப்பித்த நாளிலிருந்து ஐந்து வருடத்திற்கு முன்னால் எந்த நேரத்திலாவது அவர் தண்டனைக்கு உட்பட்டவராக இருந்தால்.
- குற்றம் செய்ததற்காக அரசாங்க பெயர் அறிக்கையில் இவருடைய பெயர் இருந்தால்
- நபர் ஆண்டு கணக்கு அறிக்கையை சமர்ப்பிக்காமல் இருத்தல்
• அடகு தொழில் செயவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தால் அந்த நபருக்கு உரிமம் வழங்கப்படாது.
சமர்ப்பிக்கும் முறைகள்
விண்ணப்ப படிவம் பெறுதல்
- விண்ணப்பதாரர் சம்பந்தப்பட்ட கோட்ட
செயலகத்திலிருந்து விண்ணப்ப படிவம் பெற
வேண்டும்.
- விண்ணக்கம், விண்ணப்பங்களில் குறிப்பிட்ட அனைத்து தேவையான ஆவணங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.
தேவையான இணைப்பு ஆவணங்கள்
-குறிப்பிட்ட பகுதிக்கு பொறுப்பேற்றுள்ள பொலிஸ் கண்காணிப்பாளரிடமிருந்து பெற்ற பொலிஸ் அறிக்கை.
-கிராம சேவகர் அறிக்கை
விண்ணப்பதாரால் வழங்கப்பட்ட பணம் தொடர்பான விளக்கங்களுக்கு வங்கி சேமிப்பு கணக்கு அறிக்கை ஆதாரமாக இருக்க வேண்டும்
விண்ணப்ப படிவத்தை ஒப்படைத்தல்
- விண்ணப்பதாரர் தொகையை செலுத்திய பிறகு அதற்கு சம்பந்தப்பட்ட கோட்ட செயலகத்திடம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
குறிப்பு:
- பாதுகாப்பிற்காக தொகையானது தேசிய சேமிப்பு வங்கி கணக்கில் முன்பணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்ப படிவத்தின் இலக்கம் / பெயர் |
விரிவாக்கம் |
அடகு கடைக்கு உரிமம் வழங்குவதற்கான விண்ணப்பம் |
அடகு கடையின் உரிமம் பெறுவதற்கு
|
படிப்படியான வழிமுறைகள் (அடகு கடைக்கு உரிமம் வழங்குவதற்கு)
படி 1: விண்ணப்பதாரர் விண்ணப்ப படிவத்தை தொடர்புடைய கோட்ட செயலகத்திலிருந்து பெற்றுக் கொள்ள வேண்டும்.
படி 2: பூர்த்தி செய்த விண்ணப்பங்களை; இணை ஆவணங்கள் மற்றும் தொடர்பான தொகைகளுடன் கோட்ட செயலகத்தில் தபால் மூலம் ஒப்படைக்க வேண்டும்.
படி 3: கோட்ட செயலாளர் பகுதியை பார்வையிடுதல் மற்றும் விண்ணப்பத்தை அங்கீகரித்தல்.
படி 4: கோட்ட செயலாளர் அடகு கடைக்கான உரிமத்தை அங்கீகாரம் செய்தல்.
குறிப்பு 1:
தேவையான ஆவணங்கள் இல்லையெனில், விண்ணப்பம் நிராகரிக்கப்படும். விண்ணப்பதாரருக்கு தகுதியிழந்ததற்கான காரணத்தை தெரியப்படுத்தப்படும்.
குறிப்பு 2:
ஒவ்வொரு வருடமும் உரிமத்தை புதுப்பிக்க வேண்டும். (உரிமையாளர் முந்தைய காலத்தில் இதே மாதிரி விணணப்பங்கள் ஏதாவது வைத்திருந்தால் மற்றும் இவரது வியாபாரம் அடகு கடை வைத்திருப்பது தொடர்பாக இருந்தால் மேலும் இவர் சட்டகட்டுபாட்டிற்கு மற்;றும் நடைமுறைக்கு முற்றிலும் மாறான முன்னேற்பாடான நோக்கங்கள மற்றும் செயல்களை செய்யும் ஆர்வம் உள்ளவராக இருக்கிறார் என்று கோட்ட செயலகம் கருதினால் அவரது உரிமத்தை புதுப்பிப்தற்கு மறுப்பு தெரிவிக்கலாம்)
காலக்கோடு
செயல்முறை காலக்கோடு
உரிமம் வழங்குதல் : ஒரு மாதத்திற்குள்
குறிப்பு : விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் மறுத்தற்கான காரணத்தை தொடர்புடைய கோட்ட செயலகம் விண்ணப்பதராருக்கு 30 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும்.
சமர்பிக்க வேண்டிய காலக்கோடு
வேலை நாட்கள் /கோட்ட செயலக நேரங்களில்
ஏற்றுக்கொள்ளக்கூடிய காலக்கோடு
ஒரு வருடம்
குறிப்பு: ஒவ்வொரு வருடமும் உரிமத்தை புதுப்பிக்க வேண்டும் (புதுப்பிக்கும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால்இ அது தொடர்பாக கோட்ட செயலகம் 30 நாட்களுக்குள் மறுத்ததற்கான காரணத்தை விண்;ணப்பதாரருக்கு தெரிவிக்கவும்)
வேலை நேரங்கள் / நாட்கள்
கோட்ட செயலக அலுவலகம் (நிறுவுதல் பிரிவு): மு.ப. 9.00 மணி முதல் – பி.ப. 4.30 மணி வரை
திங்கள் மற்றும் புதன்
சேவைத் தொடர்பான கட்டணங்கள்
உரிம கட்டணம் – ரூ.25000
உரிமத்தை புதுப்பிக்க கட்டணம் – ரூ.1000
தேசிய சேமிப்பு வங்கியின் பாதுகாப்பு வைப்பு தொகை – ரூ. 100,000.
தேவையான இணைப்பு ஆவணங்கள்
• அந்த பகுதியில் உள்ள பொலிஸ் கண்காணிப்பாளரிடமிருந்கு பொலிஸ் அறிக்கை.
• கிராம சேவகரின் அறிக்கை
• விண்ணப்பதாரரின் பாதுகாப்பு தொகையின் அறிக்கையை சாடசியாக தேசிய சேமிப்பு வங்கி கொடுக்க வேண்டும்.
குறிப்பு: பாதுகாப்பு வைப்பு தொகையாக தேசிய சேமிப்பு வங்கி கணக்கில் இருக்க வேண்டும்.
அமைப்பு பற்றிய தகவல்பிரதேச செயலகம் இலங்கை
Divisional Secretary,
Colombo Divisional Secretariat,
Dam Street,
Colombo 12.
தொலைபேசி:011-2437247 தொலைநகல் இலக்கங்கள்:011-2325512 மின்னஞ்சல்:ds@colombo.ds.gov.lk இணையத்தளம்: www.colombo.ds.gov.lk
|