தகுதிகளின் அடிப்படையில் உதவி வழங்குதல்
தகுதி
பொது உதவி பெறும் ஏதேனும் ஒருவர் அல்லது அவன்/அவளாகவே சுயவேலையில் ஈடுபடும் உறுதியுடைய ஒரு ஊனமுற்ற நபர்.
சமர்ப்பிக்கும் முறைகள்
வேண்டுகோள் கடிதத்தை தயாரித்தல்
விண்ணப்பதாரர் அவருடைய சுய வேலைவாய்ப்பு அமைப்பின் தன்மையை பற்றிய வேண்டுகோள் கடிதத்தை தயாரித்து அதனைக் கோட்ட செயலக அலுவலகத்திடம் சமர்பித்தல் வேண்டும்.
தேவையான இணைப்பு ஆவணங்கள
இணைப்பு ஆவணங்கள் தேவையில்லை
கடிதத்தைச் சமர்ப்பித்தல்
விண்ணப்பதாரர், கோட்டச் செயலக அலுவலகத்திடம் வேண்டுகோள் கடிதத்தை ஒப்படைத்தல்.
குறிப்பு :
விண்ணப்பதாரர் சமூக சேவை அதிகாரியை சந்திததல் மற்றும் விபரங்களை கலந்தாலோசித்தல் வேண்டும்.
விண்ணப்பப்படிவங்கள்
இச்சேவைக்காக விண்ணப்பப்படிவங்கள் ஏதுமில்லை.
படிப்படியான வழிமுறைகள் (தகுதி ஆய்வு உதவி வழங்குதல்)
படி 1 : விண்ணப்பதாரர் வேண்டுகோள் கடிதத்தை கோட்ட செயலக அலுவலகத்திடம் சமர்பித்தல் வேண்டும்.
படி 2 : கடிதத்தை பெற்று கொண்டபிறகு, முதன்மை சமூக சேவை அலுவலர் நடத்தவிருக்கும் நேர்காணலுக்கு வருமாறு விண்ணப்பதாரர் அழைக்கப்படுவார்.
குறிப்பு : சமூக சேவை அலுவருக்கு வேண்டுகோள் திருப்தியளிக்கவில்லை என்றால், விண்ணப்பதாரர் தகுதியிழந்தவராவார்.
படி 3 : சமூக சேவை அலுவலர் ஒப்புதல் அளித்த பிறகு, கோட்ட செயலாளர் தகுதி ஆய்வு உதவியை அங்கீகரிப்பார்.
படி 4 : கோட்டச் செயலக அலுவலகம் தபால் மூலம் தகவலை தெரிவித்த பின், விண்ணப்பதாரர் கோட்டச் செயலகத்திலிருந்து நிதியை பெற்றுக் கொள்ளலாம்.
காலக் கோடு
செயல்முறை காலக்கோடு
நிதி தயாரித்தல் (கோட்டச் செயலக அலுவலகம்) : ஒரு மாதத்திற்குள்ளாக
சமர்ப்பிக்க வேண்டிய காலக்கோடு
வேலை நேரத்திற்குள்ளாக
ஏற்றுக் கொள்ளக் சுடிய காலக்கோடு
இச்சேவைக்கு பொருந்தாது.
வேலை நேரங்கள் / நாட்கள்
கோட்டச் செயலக அலுவலகம் (நிறுவுதல் பிரிவு): மு.ப. 9.00 – பி.ப. 4.30
திங்கட்கிழமை மற்றும் புதன்கிழமை
சேவைத் தொடர்பான செலவீனங்கள்
இச்சேவைக்கு செலவீனங்கள் ஏதுமில்லை.
தேவையான இணைப்பு ஆவணங்கள்
• சுய வேலை வாய்ப்பு அமைப்பின் தன்மையை விளக்கும் ஒரு வேண்டுகோள் கடிதம்.
சிறப்பு வகையறைகள்
6 மாத காலங்களுக்கு பிறகு தகுதி ஆய்வு பருவ சேவை நிருத்தப்படும்.