தகைமைகள் :
• 18 வயதுக்கு மேற்பட்ட இலங்கைப் பிரசை ஒருவர் அல்லது , இலங்கைப் பிரசைளைக் கொண்டுள்ள நிறுவனமாக இருத்தல்
• ஏதேனும் அரச நிறுவனத்தின் அனுசரணையில் அரச காணித்துண்டொன்றைப் பெற்றுக் கொள்வதற்கு தகைமையைக் கொண்டிருத்தல் (வருடாந்த அனுமதிப் பத்திரம் பெற்றிருத்தல், காணிக் கச்சேரி போன்ற நிகழ்வொன்றின் மூலமாக முறையாகத் தெரிவு செய்யப்பட்டிருத்தல்)
• கேள்வி மனுக்கள், காணிக் கச்சேரிகள், ஏலம் ஆகியவை மூலமாகத் தெரிவு செய்யப்பட்டவர்களாக இருத்தல்.
• அறநெறி அமைப்புக்கள், மதச் சார்புடைய நடவடிக்கைகள் அறிவியல் அலுவல்கள் ஆகியவற்றிற்கு அரச காணிகளை வேண்டி விண்ணப்பித்திருப்பவர்களாக இருத்தல்.
• சமூக நலன்களில் ஈடுபாடு கொண்டுள்ள சனசமூக நிலையமாக இருத்தல்
• கூட்டுறவுச் சங்கமாக இருத்தல்
• அரசு சார்ந்த கூட்டுத்தாபனமாக இருத்தல் (வங்கிகள், கூட்டுத்தாபனங்கள், சபைகள்)
• வர்த்தகம், கைத்தொழில் அல்லது கமச்செய்கை சார்ந்த செயற்திட்டமாக இருத்தல்
• 1995.06.15 ஆந் திகதிக்கு முன்பிருந்து அத்துமீறல் செய்து, காணியை அனுபவித்து வருபவராகவும் அவரைக் காணியிலிருந்து வெளியேற்றுதல் சாத்தியமில்லாததாகவும் இருத்தல்.
விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும் முறைவழி :
எழுத்திலான விண்ணப்பத்தைப் பிரதேசச் செயலாளர்/ மாகாணக் காணி ஆணையாளர்/ காணி ஆணையாளர் நாயகத்திற்கு சமர்ப்பித்தல்
விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ளும் இடங்கள் :
விசேட விண்ணப்பப் படிவங்கள் இல்லை. தாங்களே தயாரித்துக் கடித அமைப்பிலான விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க முடியும்.
விண்ணப்பப்பத்திரத்திற்குச் செலுத்த வேண்டிய கட்டணம் :
கட்டணம் அறவிடப்படுவதில்லை.
விண்ணப்பப்பத்திரத்தைச் சமர்ப்பிக்க வேண்டிய காலவரையறை :
அரச விடுமுறையாக இல்லாத எந்த ஒரு தினத்தில் அலுவலக நேரங்களினுள்
சேவையைப் பெற்றுக் கொள்வதற்குச் செலுத்த வேண்டிய கட்டணங்கள் :
• சேவைக் கட்டணம் அறவிடப்படமாட்டாது
• காணியைக் குத்தகைக்கு வழங்குவதினால் வருடாந்தக் குத்தகைப் பணம் அறவிடப்படும்.
• குத்தகைப் பணம் அறவிடும் முறைமை :
--வதிவிடம் : காணியைக் கையளித்த வருடத்தில், காணியின் அபிவிருத்தியடையாத பெறுமதியின் 4% வருடாந்தக் குத்தகையாகச் செலுத்த வேண்டும்.
--பயிர்ச்செய்கை: காணியைக் கையளித்த வருடத்தில், காணியின் அபிவிருத்தியடையாத பெறுமதியின் 4% செலுத்தப்பட வேண்டியதுடன், ஒவ்வொரு 5 வருடங்களுக்குமொரு தடவை குத்தகைப் பணம் 50% ஆல் மீள் திருத்தம் செய்யப்படும்.
--வர்த்தகம் : காணியைக் கையளித்த வருடத்தில், காணியின் வர்த்தகப் பெறுமதியின் 4% வருடாந்தக் குத்தகையாகச் செலுத்த வேண்டும். ஒவ்வொரு 5 வருடங்களுக்குமொரு தடவை குத்தகைப் பணம் 50% ஆல் மீள் திருத்தம் செய்யப்படும்.
மேற்கூறப்பட்டுள்ள அனைத்துத் தருணங்களிலும் ஒரு முறை மட்டும் செலுத்தப்பட வேண்டிய தவணைப் பணம் அல்லது தண்டப் பணம் குத்தகை ஆரம்பிக்கும் போது அறவிடப்படும்.
தவணைப் பணம் : வருடாந்தக் குத்தகைப் பணத்தின் மூன்று மடங்கு
தண்டப் பணம் : காணி கையளிக்கப்பட்ட வருடத்தில், காணியின் அபிவிருத்தியடைந்த பெறுமதியின் 12% ஆகும்.
குத்தகை பெறுநரைத் தெரிவு செய்யும் அடிப்படையில், தவணைப் பணம் அல்லது தண்டப் பணம் திணைக்களத்தினால் தீர்மானிக்கப்படும். குத்தகைப் பணத்தைத் தீர்மானித்து அறவிடப்படுவதற்குக் கையாளப்படும் அனைத்துப் பெறுமதி மதிப்பீடுகளும் அரச பிரதான பெறுமதி மதிப்பாளரின் மதிப்பீடுகளுக்கமையவே மேற்கொள்ளப்படும்.
சேவையைப் பெற்றுக் கொள்வதற்கான காலப் பகுதி(சாதாரண சேவை/ முன்னுரிமைச் சேவை) :
குறைந்தது 06 மாதங்கள்
தேவைப்படும் உறுதிப்படுத்தும் ஆவணங்கள் :
• தனிநபர் எனில் :
--விண்ணப்பம்
--ஏதேனும் அனுமதிப் பத்திரம், அல்லது எழுத்திலான அங்கீகாரம் எனில், குறித்த அனுமதிப் பத்திரம் அல்லது அங்கீகார ஆவணம்
--சத்தியப் பிரமானம் (தங்களிடமுள்ள மொத்தக் காணிகளும் 50 ஏக்கர் உச்ச வரம்பிற்குக் குறைவு என, பிரதேசச் செயலாளரினால் வழங்கப்படும் 17 ஆவது பிற்சேர்க்கைக்கு அமைவாக) மாதிரியுரு இணைக்கப்பட்டுள்ளது. இணைப்பு 01
--நில அளவை வரைபடம் அல்லது கிட்டத் தட்டச் சரியான சுவடு வரைதல் (இருக்குமானால்)
• பகிரங்கச் சங்கம் எனில் :
--விண்ணப்பம்
--பதிவு செய்துள்ளதற்கான சான்றிதழ்
--சங்கத்தின் அமைப்பு விதிகள்
--நில அளவை வரைபடம் அல்லது கிட்டத்தட்டச் சரியான சுவடு வரைதல் (இருக்குமானால்)
• கூட்டுத்தாபனம் எனில் :
--விண்ணப்பம்
--நில அளவை வரைபடம் அல்லது கிட்டத்தட்டச் சரியான சுவடு வரைதல் (இருக்குமானால்)
--பணிப்பாளர்களின் விபரங்கள்
• தனியார் கம்பெனி எனில் :
--விண்ணப்பம்
--பதிவு செய்துள்ளதற்கான சான்றிதழ்
--பணிப்பாளர்களின் விபரங்கள்
--செயற்திட்ட அறிக்கை
--நில அளவை வரைபடம் அல்லது கிட்டத்தட்டச் சரியான சுவடு வரைதல் (இருக்குமானால்)
இந்தச் சேவைக்குப் பொறுப்பாக உள்ள பதவிநிலை அலுவலர்கள் :
பதவி : காணி ஆணையாளர் (காணி)
பெயர் : திருமதி. த. முருகேசன்
பிரிவு : காணி
தொலைபேசி : 011 - 2695834
தொலைநகல் : 011 – 2684051
மின்னஞ்சல் : landcommdept@gov.lk
அசாதாரண அல்லது மேற்கூறப்பட்டுள்ள தேவைகளுக்குப் புறம்பான சந்தர்ப்பங்கள் மற்றும் விசேட தகவல்கள் :
இயைபுடையதல்ல
விண்ணப்பப்பத்திரத்தின் மாதிரியுரு (விண்ணப்பப்படிவம் ஒன்றை இணையுங்கள்) :
இல்லை
பூரணப்படுத்தப்பட்ட மாதிரியுரு விண்ணப்பப் பத்திரம் (பூரணப்படுத்தப் பட்ட மாதிரியுரு பத்திரமொன்றை இணையுங்கள்) :
இயைபுடையதல்ல
அமைப்பு பற்றிய தகவல்காணி ஆணையாளர் நாயகத்தின் திணைக்களம்
இலக்கம் 07, ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தை, கொழும்பு 07.
திருமதி. த . முருகேசன் தொலைபேசி:0112-797400 தொலைநகல் இலக்கங்கள்:0112-864051 மின்னஞ்சல்:info@landcom.gov.lk இணையத்தளம்: www.landcom.gov.lk
|