தகைமைகள் :
• இந்தக் காணிகள் தொடர்பாக வழங்கப்பட்டுள்ள அனுமதிப் பத்திரங்கள்/ அளிப்புப் பத்திரங்கள் பேரிலேயே காணி பெறுநர்கள் காணிகளை அனுபவித்து வருதல்.
• குறித்த காணிகள் தொடர்பாகத் தொடக்கத்தில் வசித்து வந்துள்ள நபர்கள் இல்லாத சந்தர்ப்பத்தில், இரண்டாம் அல்லது மூன்றாம் சந்ததியினரால் குறித்த காணிகளின் சொத்துவத்தைக் கோருதல்.
• பின்னுருமையாளர் அல்லது அவ்வாறு இல்லாதுவிடின், பிரதேசச் செயலாளரின் விசாரணையின் பின்பு, காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டத்தின் 3 ஆவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள நபரைத் தெரிவு செய்தல்.
விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும் முறைவழி :
I. எவரேனுமொரு காணிபெறுநர் செலுத்த வேண்டிய பணத்தை ஒரே தடவையில் செலுத்துவதற்குச் சம்மதம் தெரிவித்து விண்ணப்பம் ஒன்றைச் சமர்ப்பித்தல்.
II. செலுத்த வேண்டிய பணத்தைப் பிரதேசச் செயலாளர் கணக்கீட்டு இ.நி1 ஆம் இலக்கப் படிவம் மூலமாக விதப்பரை செய்து அனுப்புதல். இதனைத் தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள கோவைகளுடன் சரிபார்த்து குறித்த கணிப்புச் சரியானதென அறிவித்தல்.
III. குறித்த பணத்தைக் காணி பெறுநரிடமிருந்து அறவிட்டு ஏற்புடைத்தான வருமானத் தலைப்பின் கீழ் வரவு வைத்து அளிப்புப் பத்திரத்தை வழங்கும் பொருட்டு பொது 118 ஆம் இலக்கப் படிவத்தைப் பூரணப்படுத்தி நில அளவைக் கோரிக்கையை அனுப்புதல்
IV. நில அளவை அத்தியட்சகரினால் குறித்த காணிக் குரிய வரி வரைபடத்தை காணி ஆணையாளர் நாயகத்திற்கு அனுப்புதல் (காணிகளை விடுவிக்கும் கட்டளைச் சட்டத்தின் கீழ், அளிப்புப் பத்திரங்களைத் தயாரிக்கும் பொருட்டு)
சேவையைப் பெற்றுக் கொள்வதற்குச் செலுத்த வேண்டிய கட்டணங்கள் :
இது அரசுக்குரிய வருமானமாகையால் காணியைக் கைக் கொள்வதற்கு அரசு செலவிட்ட பணம் மதிப்பீட்டுப் பணமாகும். இந்தப் பணத் தொகைக்கு (ஆரம்பத்தில் காணி பெற்றவருக்குக் காணியைப் பாரமளித்த வருடம் முதல், தற்போதைய விண்ணப்பதாரி குறித்த காணியை விடுவித்துத் தருமாறு விண்ணப்பித்த வருடம் வரையும்) 4% வட்டியைக் கணக்கிட்டு அரசு செலவிட்ட பணத்துடன் அதைக் கூட்டி, இந்தக் கூட்டுத்தொகையிலிருந்து அரசுக்குச் செலுத்தப்பட்டுள்ள குத்தகைப் பணம், வட்டிப் பணம் ஆகியவற்றைப் பிரதேசச் செயலாளர் அலுவலகத்திலுள்ள பேரேட்டுக்கமையக் கணக்கிட்டுக் குறைத்துக் கொண்டு, மீதிப் பணத்தைக் காணி பெறுநரிடமிருந்து அறவிடுதல். இதற்கு மேலதிகமாக, அளிப்புப் பத்திரம் வழங்குவதற்கெனக் காணி அலகு ஒன்றிற்கு ரூபா 250/- சேவைக் கட்டணம் அறவிடுதல்.
சேவையைப் பெற்றுக் கொள்வதற்கான காலப் பகுதி(சாதாரண சேவை/ முன்னுரிமைச் சேவை) :
02 மாதங்கள் வரையிலான காலப் பகுதி
தேவைப்படும் உறுதிப்படுத்தும் ஆவணங்கள் :
I. உறவு முறை தொடர்பாகப் பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் அல்லது சத்தியப் பிரமாணம் மூலமாகச் சமர்ப்பித்தல் வேண்டும்.
II. மதிப்பீட்டுத் தொகையைச் செலுத்தும் போது காணி பெறுநர் குறித்த காணிக்கு வழங்கப்பட்ட பழைய ரேகை வரை படத்தைப் பிரதேசச் செயலாளரிடம் கையளித்தல் வேண்டும்.
அசாதாரண அல்லது மேற்கூறப்பட்டுள்ள தேவைகளுக்குப் புறம்பான சந்தர்ப்பங்கள் மற்றும் விசேட தகவல்கள் :
இயைபுடையதல்ல
விண்ணப்பப்பத்திரத்தின் மாதிரியுரு
இல்லை
பூரணப்படுத்தப்பட்ட மாதிரியுரு விண்ணப்பப் பத்திரம்
இயைபுடையதல்ல
அமைப்பு பற்றிய தகவல்காணி ஆணையாளர் நாயகத்தின் திணைக்களம்
இலக்கம் 07, ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தை, கொழும்பு 07.
திருமதி. த . முருகேசன் தொலைபேசி:0112-797400 தொலைநகல் இலக்கங்கள்:0112-864051 மின்னஞ்சல்:info@landcom.gov.lk இணையத்தளம்: www.landcom.gov.lk
|