போதைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளித்தல் |
|
|||
போதைப் பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிக்கும், சமூகமயப்படுத்தும் கருத்திட்டம்.போதைப் பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளித்தல், சமூகமயப்படுத்தல் மற்றும் தொழில்ரீதியான ஆற்றல்களை மேம்படுத்துதல் என்பவை இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. ஹெரொயின், கஞ்சா, கேரள கஞ்சா, மதுபானம் மற்றும் போதை குழுசைகளை பயன்படுத்துதல் என்பவற்றின் காரணமாக வாழ்க்கையை இருளாக்கிக்கொண்டு இந்த நபர்கள் எமது நிறுவனத்திற்குள் பிரவேசித்ததன் பின்னர் முக்கியமாக மனநிலை சிகிச்சை, உளவளத்துணை ஆலோசனை மற்றும் மருத்துவவியல் அணுகுமுறை என்பவற்றின் ஊடாக புனர்வாழ்வளிக்கப்படுகிறது. அக்காலப் பகுதியில் பயிலுநர்களின் ஆன்மீக அபிவிருத்திக்கு யோக தியானம் மற்றும் மத நிகழ்ச்சித்திட்டங்கள் என்பவை நடத்தப்படுகின்றன. பயிலுநர்கள் புனர்வாழ்வு பெறுகின்ற காலத்தில் வதிவிட வசதிகள், உணவு, மருத்துவ வசதிகள் என்பவை இலவசமாக வழங்கப்படுகின்றன. பயிலுநர்களின் சீவனோபாய மார்க்கத்தை அபிவிருத்தி செய்வதற்காகத் தேவைப்படுகின்ற தொழில்ரீதியான ஆற்றலை அபிவிருத்திசெய்யும் பயிற்சியும் தங்கியிருக்கும் காலத்தில் வழங்கப்படுகின்றது. செயற்பாடுகள்
|
முறைப்பாடு செய்யவும் |
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 07:34:18 |
» | உடல் நல வைத்திய அதிகாரி |
» | பொது சுகாதார கண்காணிப்பாளர் |
» | குடும்ப சுகாதார மருத்துவச்சி |
» | பொலிஸ் நிலையம் |
» | புகையிரத நேர அட்டவணை |