இலங்கை வங்கியின் வைப்பு ஆக்கங்கள் - வெளிநாட்டு நாணயக் கணக்குத் திட்டங்கள்
a) வதியாதோர் வெளிநாட்டு நாணயக் கணக்கு (NRFC)
i. தேவையான தகுதி
• வெளிநாட்டில் தொழில்புரியும் இலங்கையா்கள்
• இலங்கையா் வெளிநாடு சென்று நாடு திரும்பி 90 நாட்களுக்குள்
• வெளிநாட்டில் வசிக்கும் தேசத்தவரல்லாத இலங்கையா்கள்
ii. தேவையான ஆவணங்கள்
• கடவுச் சீட்டின் போட்டோப் பிரதி
• முறையே பூா்த்தி செய்த மண்டேற்
(விண்ணப்பப் படிவம்)
• ஆரம்ப வைப்பாக அமொரிக்க டொலா்கள் 50 அல்லது அதற்குச் சமமான தொகை
iii. கணக்கு ஆரம்பிப்பதற்கு எடுக்கும் காலம்
• சுமார்10 நிமிடங்கள்
iv. நன்மைகள்
• இலவச ஆயுள் காப்புறுதிக் காப்பளிப்பு
• குறைந்த வட்டி வீதத்தில் வீடமைப்புக் கடன்கள்
• குறைந்த வட்டி வீதத்தில் சுயதொழில் மற்றும்
நுகா்வோர் கடன்
• போனஸ் வட்டி ரூபாயில்
b) வதியாதோர் வெளிநாட்டு நாணய (NRFC) நிலையான வைப்புக் கணக்கு
i. தேவையான தகுதி
• வெளிநாட்டில் தொழில்புரியும் இலங்கையா்கள்
• இலங்கையா் வெளிநாடு சென்று நாடு திரும்பி 90 நாட்களுக்குள்
• வெளிநாட்டில் வசிக்கும் தேசத்தவரல்லாத இலங்கையா்கள்
ii. தேவையான ஆவணங்கள்
• கடவுச் சீட்டின் போட்டோப் பிரதி
• முறையே பூா்த்தி செய்த மண்டேற்
(விண்ணப்பப் படிவம்)
• ஆரம்ப வைப்பு
• ஆரம்ப வைப்பாக அமொரிக்க டொலா்கள் 1000 அல்லது அதற்குச் சமமான தொகை
iii. கணக்கு ஆரம்பிப்பதற்கு எடுக்கும் காலம்
• சுமார்10 நிமிடங்கள்
iv. நன்மைகள்
• இலவச ஆயுள் காப்புறுதிக் காப்பளிப்பு
• குறைந்த வட்டி வீதத்தில் வீடமைப்புக் கடன்கள்
• குறைந்த வட்டி வீதத்தில் சுயதொழில் மற்றும்
நுகா்வோர் கடன்
• போனஸ் வட்டி ரூபாயில்
c) வதிவோர் தேசத்தவரல்லாத வெளிநாட்டு நாணயக்கணக்கு (RNNFC)
i. தேவையான தகைமை
• செல்லுபடியாகும் வீசாவுடன் இலங்கையில் வசிக்கும் வெளிநாட்டவா்
ii. தேவையான ஆவணங்கள்
• கடவுச் சீட்டினதும் செல்லுபடியாகும் வீசாவினதும் பிரதி
• முறையே பூா்த்தி செய்த மண்டேற்
(விண்ணப்பப் படிவம்)
• ஆரம்ப வைப்பு2000 அமெரிக்க டொலா்கள்
iii. கணக்கு ஆரம்பிப்பதற்கு எடுக்கும் காலம்
• சுமார்10 நிமிடங்கள்
d) ரண்கெகுளு வெளிநாட்டு நாணய சேமிப்பு மற்றும் நிலையான வைப்பு
i. தேவையான தகைமை
• தொழிலுக்காக வெளிநாடு சென்ற இலங்கையா்களின் இலங்கையில் அல்லது வெளிநாட்டில் வசிக்கும் பிள்ளைகள்
ii. தேவையான ஆவணங்கள்
• பெற்றோர்/ பாதுகாவலரின் கடவுச் சீட்டின் போட்டோப் பிரதி
• பிறப்புச் சான்றிதழின் போட்டோப் பிரதி
• முறையே பூா்த்தி செய்த மண்டேற்
(விண்ணப்பப் படிவம்)
• சேமிப்புக் கணக்குகளுக்கு 25 அமெரிக்க டொலா்களும் நிலையான வைப்புகளுக்கு 1000 அமெரிக்க டொலா்களும் ஆரம்ப வைப்பு.
iii. கணக்கு ஆரம்பிப்பதற்கு எடுக்கும் காலம்
• சுமார்10 நிமிடங்கள்
iv. நன்மைகள்
• இலவச ஆயுள் காப்புறுதிக்காப்பளிப்பு
• வைப்புகளுக்கு போனஸ் வட்டி வீதம்
e) வதிவோர் வெளிநாட்டு நாணய சேமிப்புகள் (RFC)
i. தேவையான தகுதி
• வெளிநாட்டுப் பணம் 100 அமொரிக்க டொலா்களை அல்லது ஏனைய நாணயங்களில் அதற்குச் சமமான தொகையைப் பெறும் இலங்கையா்கள்.
ii. தேவையான ஆவணங்கள்
• முறையே பூா்த்தி செய்த மண்டேற்
(விண்ணப்பப் படிவம்)
• தேசிய அடையாள அட்டை பிரதி
iii. கணக்கு ஆரம்பிப்பதற்கு எடுக்கும் காலம்
• சுமார்10 நிமிடங்கள்
f) வதிவோர் வெளிநாட்டு நாணய நிலையான வைப்பு (RFC)
i. தேவையான தகைமை
• வெளிநாட்டுப் பணம் 100 அமெரிக்க டொலா்களை அல்லது ஏனைய நாணயங்களில் அதற்குச் சமமான தொகையைப் பெறும் இலங்கையா்கள்
ii. தேவையான ஆவணங்கள்
• முறையே பூா்த்தி செய்த மண்டேற்
(விண்ணப்பப் படிவம்)
• தேசிய அடையாள அட்டைப் பிரதி
iii. கணக்கு ஆரம்பிப்பதற்கு எடுக்கும் காலம்
• சுமார் 10 நிமிடங்கள்
g) ஏற்றுமதியாளா் வெளிநாட்டு நாணயக் கணக்கு (EFC / DFC)
i. தேவையான தகைமை
• ஏற்றுமதி அபிவிருத்திச் சபையில் பதிவு செய்துள்ள இலங்கை ஏற்றுமதியாளா்கள்
ii. தேவையான ஆவணங்கள்
• ஏற்றுமதி வருமானங்களுக்கான ஆவணச் சான்று
• ஏற்றுமதியாளா் அனுமதிப் பத்திரத்தின் பிரதி
iii. கணக்கு ஆரம்பிப்பதற்கு எடுக்கும் காலம்
• சுமார் 10 நிமிடங்கள்
h) திறைசேரி முறிகள் முதலீடு வெளிவாரி ரூபாய் கணக்கு (TIERA – 1)
i. தேவையான தகைமை
• வெளிநாட்டு கடவுச் சீட்டு வைத்திருப்போர்
• வெளிநாட்டில் வசிக்கும் தேசத்தவரல்லாத இலங்கையா்கள்
• இலங்கைக்கு வெளியே பதிவு செய்யப்பட்ட தாபனத் துறைகள்
ii. தேவையான ஆவணங்கள்
i) திறைசேரி உண்டியல்கள் முதலீடு வெளிவாரி ரூபாய் கணக்கு (TIERA – 2)
i. தேவையான தகைமை
• வெளிநாட்டு கடவுச் சீட்டு வைத்திருப்போர்
• வெளிநாட்டில் வசிக்கும் தேசத்தவரல்லாத இலங்கையா்கள்
• இலங்கைக்கு வெளியே பதிவு செய்யப்பட்ட தாபனத் துறைகள்
ii. தேவையான ஆவணங்கள்
• கடவுச் சீட்டின் பிரதி
• கம்பனிப் பதிவு
• வெளிநாட்டு வங்கியிலிருந்து சான்றிதழ்
• உள்ளக வெளிநாட்டுப் பண அனுப்புதல்கள் ரூபா. 10,000/=
iii. கணக்கு ஆரம்பிப்பதற்கு எடுக்கும் காலம்
• சுமார் 10 நிமிடங்கள்
j) திறைசேரி உண்டியல்கள் / முறிகள் முதலீடு வெளிவாரி ரூபாய் கணக்கு (TIERA – D)
i. தேவையான தகைமை
• வெளிநாட்டில் வசிக்கும் தேசத்தவரல்லாத இலங்கையா்கள்
ii. தேவையான ஆவணங்கள்
• கடவுச் சீட்டின் பிரதி
• உள்ளக வெளிநாட்டுப் பண அனுப்புதல்கள்
• ஆரம்ப வைப்பு ரூபா. 500,000/= - முறிகள்
ரூபா. 10,000/= - உண்டியல்கள்
iii. கணக்கு ஆரம்பிப்பதற்கு எடுக்கும் காலம்
• சுமார் 10 நிமிடங்கள்
k) பங்கு முதலீட்டு வெளிவாரி ரூபாய்க் கணக்கு (SIERA )
i. தேவையான தகைமை
• வெளிநாட்டு கடவுச் சீட்டு வைத்திருப்போர்
• வெளிநாட்டில் வசிக்கும் தேசத்தவரல்லாத இலங்கையா்கள்
ii. தேவையான ஆவணங்கள்
• கடவுச் சீட்டின் பிரதி
• உள்ளக வெளிநாட்டுப் பண அனுப்புதல்கள்
• ஆரம்ப வைப்பு 250 அமெரிக்க டொலா்கள்
iii. கணக்கு ஆரம்பிப்பதற்கு எடுக்கும் காலம்
• சுமார் 10 நிமிடங்கள்
l) விசேட வெளிநாட்டு வைப்புக் கணக்கு
i. தேவையான தகைமை
• வெளிநாட்டு கடவுச் சீட்டு வைத்திருப்போர்
• வெளிநாட்டில் வசிக்கும் தேசத்தவரல்லாத இலங்கையா்கள்
ii. தேவையான ஆவணங்கள்
• கடவுச் சீட்டின் பிரதி
• ஆகக் குறைந்த தொகை 10,000 அமெரிக்க டொலா்கள் அல்லது ஏனைய வெளிநாட்டு நாணயங்களில் அதற்குச் சமமான தொகை iii. கணக்கு ஆரம்பிப்பதற்கு எடுக்கும் காலம்
• சுமார் 10 நிமிடங்கள்
m) சிரேஷ்ட வெளிநாட்டவா் முதலீட்டு வைப்புக் கணக்கு
i. தேவையான தகைமை
• வெளிநாட்டு கடவுச் சீட்டு வைத்திருக்கும் 55
வயதிற்கு மேற்பட்டோர்.
ii. தேவையான ஆவணங்கள்
• கடவுச் சீட்டின் பிரதி
• 15,000 அமெரிக்க டொலா்களுக்கு மேற்பட்ட உள்ளக வெளிநாட்டுப் பண அனுப்புதல்கள்
• 1500 அமெரிக்க டொலா்கள் அல்லது அதற்குச் சமமான தொகையிலான மாதாந்த வெளிநாட்டுப்பண அனுப்புதல்கள்
iii. கணக்கு ஆரம்பிப்பதற்கு எடுக்கும் காலம்
சுமார் 10 நிமிடங்கள்
n) வதியாதோர் இலங்கையா் முதலீட்டு ரூபாய்க்கணக்கு (RANSI)
i. தேவையான தகைமை
• வெளிநாட்டில் வசிக்கும் தேசத்தவரல்லாத இலங்கையா்கள்
ii. தேவையான ஆவணங்கள்
• கடவுச் சீட்டின் பிரதி
• உள்ளக பண அனுப்புதல்கள்
• மண்டேற் படிவம்
• ஆரம்ப வைப்பு 250 அமெரிக்க டொலா்கள்
அரசாங்க தகவல் நிலையத்திற்கு (GIC) வரவேற்கிறோம். அரசாங்க தகவல்களை அணுகுவது உங்கள் உரிமை. தங்களுக்கு தேவையான அதிகாரப்பூர்வ அரசாங்க தகவல்களை செயல்திறனுடன் வழங்குவோம்.
Welcome to the Government Information Center (GIC). It’s your right to have access to Government Information.
We strive our best to cater your information needs as GIC. Please provide your name,
District & Contact number and kindly wait until one of our Agents get in touch with you.