தேயிலை மீள் பயிரிடல் தொடர்பாக ஊக்கக் கொடுப்பனவு வழங்குதல் |
|
||||||||||||||||||
தகைமை சிறு தேயிலை பற்று நில அவிவிருத்தி அதிகார சபையினால் நடைமுறைப்படுத்துகின்ற தேயிலைத் தோட்ட மானிய நிகழ்ச்சித்திட்டத்திற்கு உட்படுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள் 1. 20 ஹெக்டயாரிற்குக் குறைவான பொருளாதார ரீதியற்ற தேயிலை தோட்டம் ஒன்றுடன் கூடிய நிலப்பரப்பு ஒன்றுக்குச் சொந்தமான சிறு தேயிலைத் தோட்ட பற்று நிலம் ஒன்றுக்கு சொந்தக்காரரா இருததல். ( தற்கால தேயிலை பயிர்ச் செய்கை நன்கொடைக் கொள்கைக்கு ஏற்ப )இவ்வாறான இடங்களில் வருடம் ஒன்றிற்கு ஆகக் கூடியது ஹெக்டயார் ஒன்று தொடர்பாக மீண்டும் தேயிலை பயிரிடுவதற்கு அனுமதி வழங்கப்படும். 2. தேயிலை பயிரிடப்பட்டுள்ள நிலத்தில் பொருளாதார ரீதியான நன்மையற்ற பழைய பயிர்களை அகற்றி விட்டு துளிர் தேயிலையை பயன்படுத்தி மீண்டும் தேயிலை பயிரிடுவதற்கு மட்டும் இந்த மானியம் வழங்கப்படும். விண்ணப்பப் படிவம் சமர்பிக்கப்படும் நடபடிமுறை ( விண்ணப்பப் படிவம் பெற்றுக் கொள்ளக் கூடிய இடம், சமர்பிக்கப்பட வேண்டிய இடம், கருமபீடங்கள் மற்றும் நேரம்) விண்ணப்பப் படிவத்துடன் இணைக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல் தாளிலுள்ள அனைத்து தகவல்களும் உள்ளடக்கப்படும். விண்ணப்பப் படிவம் பெற்றுக் கொள்ளக் கூடிய இடங்கள் பயிர் நன்கொடை விண்ணப்பப் படிவம் விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக் கொள்வதற்கு செலுத்த வேண்டிய கட்டணம் மானிய விண்ணப்பப் படிவம் தொடர்பாக ரூ. 25.00 தொகையைச் செலுத்துதல் வேண்டும். விண்ணப்பபத்தை சமர்பிக்க வேண்டிய நேரங்கள்
சேவையைப் பெற்றுக் கொள்வதற்கு செலுத்த வேண்டிய கட்டணம் சகல செயற்திட்ட சேவைகள் மற்றும் விவசாய பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள் இலவசமாக சிறு தேயிலை பற்று நில உரிமையாளர்களுக்கு வழங்கப்படும். மேலும் பயிர் செய்கை தொடர்பாக தயாரிக்கப்பட்ட கைநூல் எந்தவொரு பிராந்திய அலுவலகத்தில் அல்லது பிரதான அலுவலகத்தில் பணம் செலுத்திப் பெற்றுக் கொள்ள முடியும்.
ஒவ்வொரு சேவைக்கும ஏற்ப மாறுபடும். விண்ணப்பப் படிவம் சமர்பிக்கப்பட்டதன் பின்னர் உரிய காணியிற்கு வந்து ஆரம்ப பரிசோதனையொன்றை மேற்கொண்டு காணி பொருத்தமானது எனின் பயிர் செய்வதற்கு அங்கிகாரம் மற்றும் அனுமதி வழங்கப்படும். அதன் பின்னர் தேயிலை பயிர் செய்கை நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடியும். தேயிலை பயிரிடலை ஆரம்பிப்பதற்கு முன் ஒவ்வொரு பயிரிடல் வருடத்திற்கும் உரிய அனுமதிப்பத்திரம் விநியோகிக்கப்படும். .
தேவையான உறுதிப்படுத்தல் ஆவணங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆவணங்கள் 1. காணியின் உரிமையை உறுதிப்படுத்துகின்ற விண்ணப்பப்படிவம் ( NP / 2A) ( இணைக்கப்பட்டுள்ளது )
விஷேடமாக தேவைகளுக்கு அப்பால் எழும் சந்தர்ப்பங்களும் விஷேட தகவல்களும் உரிய தேயிலைத் தோட்டப் பிரதேசத்தில் தேயிலை சிறு பற்று நிலங்கள் அபிவிருத்தி சங்கங்கள் ஊடாக விண்ணப்பங்கள் மற்றும் தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடிவதுடன அந்த சங்க அங்கத்தவர்களுக்கு சங்கத்தினால் தங்களுடைய சேவை தொடர்பான தேவைகளை அதிகார சபையிற்கு சமர்பிக்க முடியும். அந்த ஒவ்வொரு தவணைக்கும் உரிய வேலைகள் கீழே காட்டப்பட்டுள்ளதுடன் அந்தந்த சந்தர்பங்களில் தேயிலைப் பரீட்சகர் / செயற்திட்ட அலுவலர் ஊடாக பரீசோதனையொன்றை மேற்கொண்டதன் பின்னர் தவணைக் கொடுப்பனவு தொடர்பான தீர்மானம் எடுக்கப்படும். தேயிலை மீள் பயிரிடல் தொடர்பான அனுமதிப்பத்திரம் ஒரு ஏக்கர் காணி அளவு தொடர்பாக மட்டும் தேயிலை பயிரிடுவதற்கான அனுமதிப்பத்திரம் விநியோகிக்கப்படும். இதனைப் பெற்றுக் கொண்டதன் பின்னர் தேயிலையினைப் பயிரிட்டு இறுதி தவணைக் கொடுப்பனவைப் பெற்றுக் கொள்ளும் வரை வேலைகள் உத்தேசிக்கப்பட்ட பிரகாரம் மேற்கொள்வதற்கு அனுமதிப்பத்திர உரிமையாளர் உடன்படிக்கையொன்றை செய்து கொள்ளுதல் வேண்டும். தேயிலை மீள் பயிரிடல் தொடர்பான ஹெக்டயார் ஒன்றிற்கு : காலி, மாத்தறை, கழுத்துறை மற்றும் ஹம்மாந்தோட்டை மாவட்டங்கள் தொடர்பாக ரூ. 190.000, இரத்தினபுரி, கண்டி, நுவரெலிய, கேகாலை, மொனராகலை, பதுள்ளை, மாத்தளை மற்றும் குருநாகல் மாவட்டங்கள் தொடர்பாக ரூ. 200.000 தொகையான ஊக்கக் கொடுப்பனவொன்று வழங்கப்படும். 1. முதலாவது தவணை - அனுமதிப்பத்திரம் கிடைக்கப் பெற்று ஆறு மாதங்களுக்குள் நிலத்தைப் பண்படுத்தி உரிய முறையில் நாற்றுக்கள் நாட்டப் பட்டுள்ளமையை செயற்திட்ட அலுவலர் சிபாரிசு செய்தல் வேண்டும். 2. இரண்டாவது தவணை - உரிய முறையில் தேயிலை நாற்றுக்கள் நாட்டப்பட்டு ஆறு மாதங்கள் கடந்த பின்னர் தேயிலைப் பரிசோதகர் செயற்திட்ட அலுவலரின் சிபாரிசின் படி 3. மூன்றாம் தவணை - உரிய முறையில் நாற்றுக்களை நாட்டி 18 மாதங்கள் கடந்த பின்னர் தேயிலைப் பரிசோதகர் செயற்திட்ட அலுவலரின் சிபாரிசின் பேரில்.
|
முறைப்பாடு செய்யவும் |
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2009-10-29 15:46:22 |
» | உடல் நல வைத்திய அதிகாரி |
» | பொது சுகாதார கண்காணிப்பாளர் |
» | குடும்ப சுகாதார மருத்துவச்சி |
» | பொலிஸ் நிலையம் |
» | புகையிரத நேர அட்டவணை |