01. விஷேட கருத்திட்டங்களுக்கான பொதுவான தகடை அம்சங்கள்
• பெறுநர் 18-55 வயதுடையவராக இருத்தல் வேண்டும்.
• பெறுநர் தொடர்புடைய கைத்தொழிலில் முன் அனுபவம் உடையவராக இருத்தல் வேண்டும்.
• பெறுநர் வங்கியொன்றில் சேமிப்புக் கணக்கொன்றினை பேணக்கூடியவராக இருத்தல் வேண்டும்.
• விண்ணப்பதாரி வேறு ஏதேனும் பிற நிதி நிறுவனங்களிலிருந்து பணம் செலுத்தத் தவறியவராக இருத்தலாகாது.
தேவையான அவணங்கள்
• கடன் விண்ணப்பப் படிவம்
• சமர்ப்பிக்கப்படவிருக்கும் பிணை தொடர்பான ஆவணங்கள்
• மதிப்பீடு (கருத்திட்டச் செலவு)
• வங்கியினால் தேவைப்படும் பிற ஏதேனும் ஆவணங்கள்.
கடன் வழங்குவதற்கு எடுக்கும் காலம்
• கருத்திட்டத்தின் தன்மை அதன் அளவு கடனின் அளவு என்பவற்றைக் கொண்டு காலம் வேறுபடும்.
விண்ணப்பப் படிவம் – இணைக்கப்பட்டுள்ளது.
பூரணப்படுத்தப்பட்ட மாதிரி – இணைக்கப்பட்டுள்ளது
02. க்ருஷி நவோதய கடன் திட்டம்
விவசாய உபகரணங்கள், சேவைகள் மற்றும் பிற உள்ளீடுகளினை கொள்வனவு செய்வதற்கு சிறிய விவசாயிகளுக்கான விஷேட விவசாய அடிப்படைக் கடன்திட்டமாகும். இத்திட்டமானது விவசாய சமூகத்தின் வருமானம் பெரும் வழிகளை அதிகரிப்பதற்கான திட்டத்தினை முன்வைக்கின்றது.
நோக்கம்
• விவசாயத் துறையிலும் அதனுடன் தொடர்புற்ற துறைகளினலும் புதிய வேலைவாய்ப்பு சந்தர்ப்பங்களை உருவாக்கும் அதேநேரம் சிறிய விவசாயினது வருமான மட்டத்தினை அதிகரிப்பதற்காக விவசாய உபகரணங்கள், சேவைகள் மற்றும் பிற உள்ளீடுகளை கொள்வனவு செய்வதற்கு அவர்களுக்கு வசதியளித்தல்.
• புதிய தொழிநுட்பம், நுட்ப முறைகள் மற்றும் சந்தைப்படுத்தல் வாய்ப்புக்கள் என்பவற்றின் பால் நகர்த்துவதற்கு சிறிய விவசாயிகளுக்குக்கான வழிவகைகளைத் திறத்தல்.
யாருக்கு
விவசாய அடிப்படை கைத்தொழில்களில் விவசாய அடிப்படை சுயவேலைவாய்ப்புச் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள சிறிய விவசாயிகளுக்கு மற்றும் பிறரும்.
தகைமை பெறும் கடன் வசதிகள்
விவசாய மற்றும் விவசாய அடிப்படைக் கைத்தொழில்களின் அபிவிருத்திக்கு பின்வரும் நோக்கங்களுக்காக கடன் வசதிகள் வழங்கப்படும்.
• விவசாய உபகரணங்களின் கொள்வனவு
• கால்நடை பண்ணை
• விவசாய செயற்பாடுகளுக்கான விரிவாக்கற் சேவைகள்
• சேதன விவசாயமும் சேதன பசளைகளின் உற்பத்தியும்
• களஞ்சியப்படுத்தல் வசதிகளை விரிவாக்கல்
• சிறிய நீர்ப்பாசனம், துளிர் நீர்ப்பாசனம் மற்றும் பகிர்வு முறைகள் போன்றன.
• பாதுகாக்கப்பட்ட விவசாய அபிவிருத்தி
கடன்
• கடன் பெறுநர் ஒருவருக்கு ஆகக்கூடிய தொகை ரூபா 100,000/-
• துளிர் நீர்ப்பாசனத்திற்கான ஆகக்கூடிய தொகை ரூபா 350,00/-
மீள்கொடுப்பனவு
• ஆகக்கூடிய மீள்கொடுப்பனவுக் காலம் 3 வருடங்கள் வரையாக இருக்கும்.கப்ருக்க
03. ஆயோஜன” தெங்கு அபிவிருத்தி கடன் திட்டம்
தெங்கு உற்பத்தி, தென்னங்காணிகளின் உற்பத்தித்திறன், தெங்கு பெருந்தோட்டங்களில் தொழில் வாய்ப்புக்கள் என்பவற்றினை அதிகரித்தல் அத்துடன் தோட்டங்களின் வருமானங்களை அதிகரித்தல் மற்றும் தென்னை செய்கையாளர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தல் என்பவற்றுக்கு இக்கடன் திட்டம் வசதியளிக்கின்றது.
நோக்கம்
• தெங்கு உற்பத்தி, தென்னங்காணிகளின் உற்பத்தித்திறன், தெங்கு பெருந்தோட்டங்களின் தொழில் வாய்ப்புக்கள் என்பவற்றினை அதிகரித்தல் மற்றும் தென்னை செய்கையாளர்களின் வருமான மட்டத்தினை அதிகரித்தல்.
யாருக்கு
• தென்னங்காணி உடமையாளர்கள் அல்லது குத்தகைக்காரர்கள்
கடன்
• விஷேட கருத்திட்டங்களுக்காக ஆகக்கூடியது ரூபா 10 மில்லியன்
தகைமை கடன் வசதிகள்
• ஊடு பயிர்ச் செய்கையுடன் புதிய மற்றும் தெங்கு மீள் நடுகை
• தெங்கு பெருந்தோட்டங்களை புனரமைத்தல்
• தெங்கு தனிப் பயிர்ச் செய்கை
• தெங்குகு ஊடு பயிர்ச் செய்கை க்கான நீர்ப்பாசன முறைமை
• நாற்றுமேடைகள் – அன்னாசி, வாழைப்பழம்
• தென்னை தோட்டங்களுக்கான விவசாய உபகரணங்கள்
மீள்கொடுப்பனவு
• ஆகக்கூடியது 5 வருடங்கள் வரை
“கப்ருக்க ஆயோஜன” தெங்கு அபிவிருத்தி கடன் திட்டம் தெங்கு அபிவிருத்தி அதிகார சபையினால் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட் டுள்ளது.
புதிய கிராமியக் கடன் திட்டங்கள் (NCRCS)
இலங்கை மத்திய வங்கியால் அங்கிகரிக்கப்பபட்டவாறு அரிசி மற்றும் துணை உணவுத் தானியங்கள் பயிரிடுவதற்காக சிறந்த விலையுடன் சந்தையொன்றினை உறுதிப்படுத்துவதற்காக விஷேட கடன் திட்டமொன்று சிறிய விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் பயிர்ச் செய்கைக்கு முன்னைய (விதை மற்றும் நாற்று நடல் உபகரணங்கள்) மற்றும் பின்னரான சேவைகளும். (விதை மற்றும் பிற விவசாய உற்பத்திகளின் கொள்வனவு மற்றும் களஞ்சியப்படுத்தல்)
நோக்கம்
சிறிய விவசாயிகளுக்கு சிறந்த விலையுடன் கூடிய சந்தையொன்றினை உறுதிப்படுத்தல்.
யாருக்கு
• தனிப்பட்ட விவசாயிகள் / குழுக்கள் அல்லது நெல், மிளகாய், சிவப்பு வெங்காயம், பெரிய வெங்காயம், எண்ணெய் விதைகள், பிற தானியங்கள், மரக்கறிகள் மற்றும் உருளைக்கிழங்கு செய்கை பண்ணும் நிறுவன ரீதியான வாடிக்கையாளர்கள்.
கடன்
பின்வரும் தானியங்களுக்காக கடன்கள் வழங்கப்படும் - பெரும்போகம் அல்லது சிறு போகம்.
• விததைப் பண்ணைகள், நாற்று மேடைகள் மற்றும் பயிரிடல் உபகரணம்:
ஆகக்கூடிய கடன்தொகை ரூபா 5 மில்லியன்
• முன்கொண்டுவரப்பட்ட விற்பனை ஒப்பந்தங்களின் கீழ் விவசாய உற்பத்திகளின் கொள்வனவு:
ஆகக்கூடிய கடன் தொகை ரூபா 50 மில்லியன்
தகைமை கடன் வசதிகள்
• இலங்கை மத்திய வங்கியால் அங்கிகரிக்கப்பபட்டவாறு நெல் மற்றும் துணை உணவுத் தானியங்கள் பயிர்ச் செய்கை.
• பயிர்ச் செய்கைக்கு முன்னையவை – விதை மற்றும் நாற்றுப் பொருட்களின் உற்பத்தி.
• பயிர்ச் செய்கைக்குப் பின்னரான செயற்பாடுகள் – நெல் மற்றும் பிற விவசாய உற்பத்திகளினை கொள்வனவு செய்தல் மற்றும் களஞ்சியப்படுத்தல்.
மீள் கொடுப்பனவு
• 270 நாட்களுக்குள்
04.மகாவலிப் பிரதேசத்தில் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளுக்கான கடன் திட்டம்.
மகாவலி அதிகாரசபை சட்டத்தின் கீழ் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட மகாவலி பிரதேசங்களிலுள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளுக்கான கடன்திட்டமொன்று இலங்கை மகாவலி அதிகாரசபையுடன் இணைந்து அமுல்படுத்தப்படுகின்றது.
நோக்கம்
• உள்ளூர் மற்றும் ஏற்றுமதி சந்தைகளை அடைந்து கொள்வதற்கு மற்றும் வியாபார மற்றும் வேலைவாய்ப்பு சந்தர்ப்பங்களை அதிகரிப்பதற்கு நவீன தொழில்நுட்பங்களைப் பெற்றுக் கொள்வதற்காக மகாவலிக் குடியிருப்பாளர்களுக்கு வசதியளித்தல்.
• மகாவலிப் பிரதேசத்தில் விவசாய மற்றும் பிற உற்பத்திகளின் பெறுமதி சேர்ப்பிற்கான வினைத்திறனை விரிவாக்குதல்.
யாருக்கு
மகாவலியின் பீ.சீ.ஜீ.எச்.எல், வலவ்வ, மெதிரிகிரிய ஹுருலுவெவெ மற்றும் மேல் மகாவலி பிரதேசம், கொத்மலை மற்றும் விக்டோரியா அத்துடன் எதிர்காலத்தில் மகாவலி அதிகார சபைச் சட்டத்தின் கீழ் வர்த்தமானியில் பிரசுரிக்கப்படும் ஏதேனும் பிரதேசங்கள் (கடன் விண்ணப்பங்கள் இலங்கை மகாவலி அதிகாரசபையின் வாழ்விட கருத்திட்ட முகாமையாளர் (RPM) ஊடாக வங்கிக்கு அனுப்பிவைக்கபப்டுதல் வேண்டும்.
தகைமைக் கடன் வசதிகள்
• விவசாயப் பதனிடல் (அரிசி ஆலை, தானிய பதனிடல், பழம் மற்றும் மரக்கறி பதனிடல், போசாக்கூட்டல் போன்றன)
• கால்நடை உற்பத்தியும் பதனிடலும்
• அழகு மீன் வளர்ப்பு மற்றும் பண்ணை செய்தல்
• நன்நீர் மீன் பதனிடல் (தகரத்தில் அடைத்தல், கருக வைத்தல், காயவைத்தல் போன்ற)
• உயர் தொழில்நுட்ப விவசாயத்தினை அறிமுகப்படுத்தல் (தூரல் நீர்ப்பாசனம், பச்சை / வலை வீடுகள் போன்றன)
• உயர் தொழிநுட்ப இயந்திரங்கள், உபகரணங்கள் மற்றும் உதிரிப்பாகங்களை உற்பத்தி செய்தல்
கடன்
• ரூபா 10 மில்லியன் வரை
மீள் கொடுப்பனவு
• ஆகக் கூடியது 4 வருடங்கள் வரை
05.விவசாய கால்நடை அபிவிருத்திக் கடன் திட்டம் (ALDL)
விவசாயத் துறையில் பாற்பண்ணைச் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள சிறிய விவசாயிகளுக்கும் பிறருக்கும் வருமான உருவாக்க வழிவகைகளை மேம் படுத்துவதற்கு விஷேட கடன் திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நோக்கங்கள்
• பசுக்கள் / பாற்கரவைகள், குளிரூட்டல் உபகரணங்கள், சேவைகளைக் கொள்வனவு செய்வதற்கும் திரவ பால் உற்பத்தியினை மேம்படுத்துவதற்காக மாட்டுத்தொழுவங்களை நிர்மாணிப்பதற்கும் புதிய தொழிநுட்பம் மற்றும் நுட்ப முறைகளைப் பின்பற்றுவதற்கும் பாற்பண்ணையாளர்களுக்கு வசதியளித்தல்.
யாருக்கு
• பசுக்கள், கரவை மாடுகள், பால் உற்பத்திகளை அபிவிருத்தி செய்வதற்கான உபகரணங்கள் என்பவற்றைக் கொள்வனவு செய்தலும் மாட்டுத் தொழுவங்களை நிர்மாணித்தலும்.
• திரவ பால் பதனிடல் மற்றும் விவசாயத்துடன் தொடர்பாக பதனிடல் கைத்தொழில்கள்.
• விவசாய அடிப்படை மற்றும் விவசாயப்படுத்தல் வசதிகளை மேம்படுத்தல்
• பதனிடல் கைத்தொழில் களஞ்சியப்படுத்தல் வசதிகளை மேம்படுத்தல்.
கடன்
• சிறிய பாற்பண்ணையாளர்கள் – ஆகக் கூடியது ரூபா 400,000
• பதனிடல் கைத்தொழில் – ஆகக்கூடியது ரூபா 300 மில்லியன்
மீள் கொடுப்பனவு
• ஆகக்கூடியது 5 வருடங்கள் வரை
06.பாதணி தயாரிப்பாளர்களுக்கான கடன் திட்டம்.
பாதணித் தாயரிப்புத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அவர்களது உற்பத்தியினை மேம்படுத்தவும் நவீனமயப்படுத்துவதற்காகவும் நிதியளிப்புக்காக கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சுடன் இணைந்து இலங்கைப் பாதணி சம்மேளனத்தினால் ஆரம்பிக்கப்பட்ட கருத்திட்டம் ஒன்றின் கீழ் இக் கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நோக்கம்
பாதணிக் கைத்தொழிலில் ஈடுபட்டுள்ள தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திச் செயன்முறையினை தரமுயர்த்ததலும் நவீனமயப்படுத்தலும்.
யாருக்கு
பாதணி சம்மேளனத்தில் பதிவுசெய்யப்பட்டவர்களுக்கும் பாதணி தயாரிப்புக் கைத்தொழிலில் ஈடுபட்டுள்ள சிறிய தொழில் முயற்சியாளர்களுக்கும்.
தகைமை கடன் வசதிகள்
பாதணி தயாரிப்புக் கைத்தொழிலுடன் தொடர்பான இயந்திரங்களையும் மூலப் பொருட்களையும் கொள்வனவு செய்தல்.
கடன்
தவணைக் கடன் – ஆகக்கூடியது ரூ 250,000
தொழிற்பாட்டு மூலதனம் – ஆகக்கூடியது ரூ 250,000
மீள் கொடுப்பனவு
ஆகக்கூடியது 3 வருடங்கள் வரை
அமைப்பு பற்றிய தகவல்லங்காபுத்ர அபிவிருத்தி வங்கி லிமிடெட்
நோ 80,
நவால ரோடு,
நுகேகொட திரு. ஏ.சரத் டி சில்வா தொலைபேசி:011 2821030 / 011 2821035 தொலைநகல் இலக்கங்கள்:011 2821031 மின்னஞ்சல்:info@lankaputhra.lk இணையத்தளம்: www.lankaputhra.lk
|