The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை பிற விஷேட கருத்திட்டக் கடன்கள்
கேள்வி விடை வகை முழு விபரம்


பிற விஷேட கருத்திட்டக் கடன்கள்

PDF Print Email

01. ஆடைக் கைத்தொழிலுக்கான விஷேட கடன் திட்டம் – எஸ்.எம்.ஈ துறை

நிதித் திட்டமிடல் அமைச்சானது எஸ்.எம்.ஈ ஆடைக் கைத்தொழிலினை லங்காபுத்ர அபிவிருத்தி வங்கியினூடாக தரமுயர்த்துவதற்குத் தேவையான நிதி உதவிகளை வழங்குவதற்கான நிகழ்ச்சித் திட்டமிடலொன்றினை அபிவிருத்தி செய்துள்ளது. 

தகைமை அம்சங்கள்

• நடைமுறையில் செயற்பட்டு வரும் தொழிற்சாலை ஒன்றினைக் கொண்டிருத்தல். (மூடிய தொழிற்சாலை அல்ல)
• கொழும்பு மாவட்டத்திற்கு வெளியே அமைந்திருத்தல் வேண்டும்.
• நேரடி ஏற்றுமதியாளராக இருத்தல் வேண்டும் (ஆவணச் சான்றுகளுக்கு அமைய உப ஒப்பந்தங்களை பரிசீலிக்கப்படும்)
• ஆடைக் கைத்தொழிலில் பயிற்சி நிறுவகம் மற்றும் இணைந்த ஆடைக் கைத் தொழில் சங்கங்களின் மன்றம் என்பவற்றை உள்ளடக்கிய குழுவொன்றின் சிபாரிசு.
• வேலைவாய்ப்பு சந்தர்ப்பங்கள் – ஆகக்கூடியது. 350, ஆகக்குறைந்தது 10
• அசையக்கூடிய ஆதணங்களின் பெறுமதி – ரூபா 30 மில்லியனுக்கு குறைவானது.
• வருடாந்த புரள்வு – ரூபா 100 மில்லியனுக்குக் குறைவானது.

தகைமை பெறும் கடன் வசதிகள்

• நவீனமயப்படுத்தப்பட்ட தொழிற்சாலைக் கட்டிடம்
• இயந்திரங்களை தரமுயர்த்தல் மற்றும் புதிய இயந்திரங்களைக் கொள்வனவு செய்தல்.

கடன்
ஆகக் கூடிய கடன் ரூபா 15 மில் (கட்டிடத்தற்கு ரூபா 7.5 மில் மற்றும் இயந்திரத்திற்கு ரூபா 7.5 மில்)


மீள் கொடுப்பனவு
கட்டிடத்திற்கு 10 வருடங்கள் மற்றும் இயந்திரத்திற்கு 5 வருடங்கள்.

வட்டி வீதம் – ஆண்டொன்றுக்கு 10 வீதம்
பிணை – காணி கட்டிடம்  / இயந்திரம் மீதான ஈட்டுறுதி.


தேவையான ஆவணங்கள்
• கருத்திட்ட அறிக்கை.
• பூரணப்படுத்தப்பட்ட கடள் விண்ணப்பப் படிவம்
• அசையா ஆதனங்கள் பிணையாக வைக்கப்படுமாயின் உறுதி, நில அளவைப் படம் மற்றும் பாதை நிரல் மற்றும் சுவீகரமல்லா சான்றிதழ்கள் வேண்டப்படும் பொழுது சமர்ப்பிக்ககப்படுதல் வேண்டும்.
• மதிப்பீடும் சிபாரிசு படிவமும்.


கடன் செலுத்துவதற்கு எடுக்கும் காலம்
• கருத்திட்டம் அதற்கான பிணை மற்றும் கடனின் அளவு என்பவற்றைப் பொறுத்து அதற்கான காலம் வேறுபடலாம்.

விண்ணப்பப் படிவம் – இணைக்கப்பட்டுள்ளது.
பூரணப்படுத்தப்பட்ட மாதிரி – இணைக்கப்பட்டுள்ளது.
 

02.இரத்தினக் கல் மற்றும் ஆபரணக் கைத்தொழிலுக்கான  விஷேட கடன் திட்டம்.

இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கைத்தொழில் எஸ்.எம்.ஈ. துறைக்கு நிதியளிப்பதற்கு இரரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கைத்தொழில் அதிகாரசபையின் வேண்டுகோளுடன் இந்த கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தகைமை பெறும் அம்சம்
• இரத்தினக்கல் கல் மற்றும் ஆபரண சம்மேளனத்தின் உறுப்பினர் ஒருவராக இருத்தல் வேண்டும்.
• தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபையினால் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டிருப்பதுடன் தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகாரசபையிலும்  பதிவு செய்யப்பட்டிருத்தல் வேண்டும்.

தகைமை கடன் வசதி
• இரத்தினக்கற்களின் கொள்வனவு (தொழிற்பாட்டு மூலதனக் கடன்)

கடன் திட்டம்
குறுகிய கால கடன் (சுழற்சி) – ஆகக்கூடியது ரூபா 1.0 மில்

வட்டி வீதம் – 15 சதவீதம் வருடமொன்றுக்கு

மீள்கொடுப்பனவு  - 6 மாதங்களுக்குள் (சுழற்சி)

பிணை – இரத்தினக்கற்கள் அல்லது வங்கியினால் ஏற்றுக் கொள்ளக்கூடிய பிற பிணைகளும்

தேவையான ஆவணங்கள்
• பூரணப்படுத்தப்பட்ட கடன் விண்ணப்பப் படிவம்
விண்ணப்பப் படிவம் – இணைக்கப்பட்டுள்ளது.
பூரணப்படுத்தப்பட்ட மாதிரி – இணைக்கப்பட்டுள்ளது.

03. இளம் இலங்கை தொழில் முயற்சியாளர்களின் சம்மேளனத்தினூடாக எஸ்.எம்.ஈ. துறைக்கான விஷேட கடன் திட்டம்.

நாட்டிலுள்ள இளந்தொழில்முயற்சியாளர்களுக்கான விஷேட கடன் திட்ட மொன்றினை வழங்குவதற்கு லங்காபுத்ர அபிவிருத்தி வங்கி உடன்படிக்கை யொன்றில் கைச்சாத்திட்டுள்ளது.

கடன் திடடத்தின் விபரம் கீழே தரப்பட்டுள்ளது.

தகைமை பெறும் அம்சங்கள்

குறித்த சம்மேளனத்தின் உறுப்பினர் ஒருவராக இருத்தல் வேண்டும் (வங்கியிலிருந்து நிதி உதவியினை நாடும் குறித்த தொழில் முயற்சிக்குத் தேவையான திறன்கள் / அனுபவங்ககளை உள்ளடக்கியதாக வங்கியின் அம்சங்களை நிறைவு செய்யக்கூடிய உறுப்பினர்கள்.)

துறை:  எஸ்.எம்.ஈ. கைத்தொழில்கள் (விவசாய மற்றும் விவசாய அடிப்படைக் கைத்தொழில்கள், ஏற்றுமதி அடிப்படைக் கைத்தொழில்கள் மற்றும் இறக்குமதி பதிலீடுகள் என்பவற்றுக்கு முன்னுரிமை வழங்கப்படும்)
 
ஆகக்கூடிய தொகை: ரூபா 20.0 மில்லியன்

இலக்குக் குழு: இளம் தொழில் முயற்சியாளர்களின் சம்மேளனத்தில் பதிவு செய்து கொண்ட உறுப்பினர்கள்.

கடனின் நோக்கம்: 
இயந்திரம் மற்றும் உபகரணங்களின் கொள்வனவு
தொழிற்சாலைக் கட்டிட நிர்மாணம்

வட்டி விகிதம்  

  1. கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கு வெளியே அமைந்துள்ள கைத்தொழில்களுக்காக  ஆண்டொன்றுக்கு 12
  2. கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் ஆமைந்துள்ள கைத்தொழில்களுக்காக ஆண்டொன்றுக்கு 15

மீள் கொடுப்பனவு: இயந்திரம் மற்றும் உபகரணம் கொள்வனவிற்காக தவணை அடிப்படையில் 3 வருடங்கள்
 நிர்மாணம்/கட்டிடத்தைப் புதுப்பித்தல் என்பவற்றுக்காக தவணை அடிப்படையில் 5 வருடங்கள்

பிணை: 
i. அசையா ஆதனங்கள் மீது முதலாம்/இரண்டாம் ஈட்டுறுதிகள்.
ii.பணிப்பாளர்களின் தனிப்பட்ட உத்தரவாதம் /வங்கியினால் ஏற்றுக் கொள்ளக்
கூடிய தனிப்பட்ட உத்தரவாதத்துடன் அசையும் ஆதனங்கள் மீது முதலாம் ஈட்டுறுதிகள். 

தேவையான ஆவணங்கள்

• பூரணப்படுத்தப்பட்ட கடன் விண்ணப்பப் படிவம்

04. இலங்கை சிறிய கைத்தொழில் சம்மேளனத்தினூடாக எஸ்.எம்.ஈ. துறைக்கான விஷேட கடன் திட்டம். 

கடன் திட்டத்தின் விபரங்கள் பின்வருமாறு

தகைமை பெறும் அம்சங்கள்

1. இலங்கை சிறய கைத்தொழில் சம்மேளனத்தின் உறுப்பினர் ஒருவராக இருத்தல் வேண்டும்.
2. இலங்கை சிறிய கைத்தொழில் சம்மேளனத்தின் சிபாரிசு.

துறை: எஸ்.எம்.ஈ. கைத்தொழில்கள் விவசாய மற்றும் விவசாய அடிப்படைக் கைத்தொழில்கள், ஏற்றுமதி அடிப்படைக் கைத்தொழில்கள் மற்றும் இறக்குமதி பதிலீடுகள் என்பவற்றுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
 
ஆகக்கூடிய தொகை: ரூபா 5 மில்லியன்

கடனின் நோக்கம்: 
i.இயந்திரம் மற்றும் உபகரணங்களின் கொள்வனவு
ii.தொழிற்சாலைக் கட்டிட நிர்மாணம்

வட்டி விகிதம்  
i.மேல் மாகாணத்திற்குள் அமைந்துள்ள கைத்தொழில்களுக்காக ஆண்டொன்றுக்கு 15
ii.மேல் மாகாணத்துக்கு வெளியே அமைந்துள்ள கைத்தொழில்களுக்காக ஆண்டொன்றுக்கு 10

பிணை: 
i.அசையா ஆதனங்கள் மீது ஆரம்ப / இரண்டாம்  நிலை ஈட்டுறுதிகள்.
ii.பணிப்பாளர்களின் உத்தரவாதத்துடன் அசையும் ஆதனங்கள் மீது ஆரம்ப ஈட்டுறுதிகள். 

மீள் கொடுப்பனவு: 
i.இயந்திரம் மற்றும் உபகரணம் 3 வருடங்கள்
ii.கட்டிடத்திற்காக 5 வருடங்கள்

05. “லக்கம்” கடன் திட்டம்


லங்கா புத்திர அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி சபை (IDB) என்பன இணைந்து புதிய மற்றும் தற்பொழுதிருக்கும் கைத்தொழில்களின் முன்னேற்றம் மற்றும் அபிவிருத்திக்காக சிறிய மற்றும் நடுத்தர அளவு கைத்தொழில்களின் தொழில் முயற்சிக்கு மற்றும் சுய வேலைவாய்ப்புத் துறைக்கு நிதி உதவி வழங்கும் வசதிகளையும் அடிப்படையாகக் கொண்டு நிகழ்சித் திட்டமொன்றினை ஆரம்பித்தது.

வியாபார துறைகள்   : உற்பத்திக் கைத்தொழில் சேவைகள்


கடன் வரையறை   : ரூபா 50,000/- இலிருந்து ரூபா 1,000,000/- வரை
 

கடனின் நோக்கம்   :  இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் கொள்வனவு    


   தொழிற்பாட்டு மூலதனங்கள்


வட்டி விகிதம்  

ஆகக்கூடியது 3 வருடங்கள்   (ரூபா 50,000/- முதல் ரூபா 500,000/- வரை )


ஆகக்கூடியது 5 வருடங்கள் (ரூபா 500,000/- முதல் ரூபா 1,000,000/- வரை )


பிணைகள்  : வங்கியினால் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஏதாவது பிணை.


செயற்படுத்தல் பிரதேசங்கள்

  • வடமேல் மாகாணம் 
  • தென் மாகாணம்
  • கிழக்கு மாகாணம்
  • வட மத்திய மாகாணம்
  • மத்திய மாகாணம்
  • ஊவா மாகாணம்
  • வட  மாகாணம்
  • சப்ரகமுவ மாகாணம்
  • களுத்துறை மாவட்டம்

06. “இலங்கை உற்பத்திகள் “ கட்டி எழுப்புவதற்கான கருத்திட்டக் கடன்

 “மவ்பிம லங்கா பவுன்டேசன்” வேண்டுகோளுக்கிணங்க இந்த கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன் “சூரிய சிங்க“ சின்னத்தை் ஏற்றுக் கொள்ளும் வகையில் இது நடைமுறைப்படுத்தப்படுகின்றது. 

உத்தேச கடன் திட்டத்தின் விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன:


துறை   : உற்பத்தி/ ஏற்றுமதிகள்
ஆகக்கூடிய தொகை: ரூபா 10 மில்
கடன் நோக்கம் : உற்பத்தி ஊக்குவிப்பு /உள்நாடு சர்வதேசம்


வட்டி விகிதம் : 

கடன் திட்டத்திற்கு ஏற்புடையதான விகிதங்கள்

  •     மேல்மாகாணத்திற்கு வெளியே ஆண்டொன்றுக்கு 12%
  •     மேல் மாகாணத்துக்குள்  17%

மீள் கொடுப்பனவு  : 7 நாட்களுக்குள்

பிணை   : அசையாத ஆதனங்கள் மீது  ஆரம்ப/ இணைந்த/ இரண்டாம் நிலை ஈட்டுறுதிகள்

தகைமை பகுதிகள் : 

பகுதி அ

  • வருடாந்த புரள்வு – 100 மில்லியனுக்கு மேல்
  • ஊழியர்களின் எண்ணிக்கை  - 100 மேல்
  • ஆகக்கூடிய கடன் தொகை 10 மில்லியன்

பகுதி ஆ

  • வருடாந்த புரள்வு – 60 மில்லியனுக்கு மேல்
  • ஊழியர்களின் எண்ணிக்கை – 50 மேல்
  • ஆகக்கூடிய கடன் தொகை ரூபா 5 மில்லியன்

மவ்பிம லங்கா பவுன்டேசனின் பொறுப்புக்கள்

 இந்நோக்கத்திற்காக லங்கா புத்திர அபிவிருத்தி வங்கிக்காக உறுப்பினர்களை சிபாரிசு செய்தல் மற்றும் கடன் மீள் அளவீட்டில் வங்கிக்கு உதவுதல்.

 

  • வர்த்தக கடன்கள்   -இல்லை
  • வீடமைப்புக் கடன்கள்  - இல்லை
  • அடகு சேவை    -இன்னும் அறிமுகப்படுத்தப்படவில்லை
  • உற்பத்திக் கடன்கள்  - இவை கருத்திட்டக் கடன்களைப் போன்று நோக்கப்படும்
  • நுகர்வோர் கடன்கள்  - இல்லை
  • தனியாள் மற்றும் பிற கடன்கள்- இல்லை


 

 


அமைப்பு பற்றிய தகவல்

லங்காபுத்ர அபிவிருத்தி வங்கி லிமிடெட்

நோ 80,
நவால ரோடு,
நுகேகொட


திரு. ஏ.சரத் டி சில்வா
தொலைபேசி:011 2821030 / 011 2821035
தொலைநகல் இலக்கங்கள்:011 2821031
மின்னஞ்சல்:info@lankaputhra.lk
இணையத்தளம்: www.lankaputhra.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 09:05:03
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites


மிகவும் ஜனரஞ்சகமானவை

1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

     
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2024-03-18
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 2
   

×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty