ஏற்கனவே உறையிடப்பட்ட பொருளுக்கான விழிப்புணர்வை மக்களுக்கு அளித்தல் |
|
|||
உறையிட்டுப் பொருளை விற்பவரோ அல்லது இறக்குமதியாளரோ யாராக இருப்பினும் அவர் உறையிடப்பட்டப் பொருளானது கீழேக் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி ஒரு ஒழுங்கான முறையில் உறையில் குறிப்பிடப்பட்டிருக்கச் செய்வது அந்த நபரின் கடமையாகும். (a) பொருளின் அளவுகளை எடை அல்லது கன அளவு அல்லது நீளம் ஆகியவற்றின் அங்கீகரிக்கப்பட்ட அலகின் அறிக்கை மற்றும் (b) ஆய்வாளரால் உடனடியாக அடையாளம் கொள்ளும் வகையில் அவன்/அவள் பெயர் மற்றும் முகவரி அல்லது அவனுடைய பெயர் மற்றும் முகவரியைத் தெரியப்படுத்தும் அடையாளம்.
தானியம், தானிய மாவு, தானிய மாவுப் பொருட்கள், ரொட்டி, விதைகள், விதைப் பொடி, விதை மாவுகளில் செய்யப்பட்டப் பொருட்கள், சர்க்கரை, குளுக்கோஸ், இறைச்சி, இறைச்சிப் பொருட்கள், மீன், மீன் பொருட்கள், கடல் வாழ் உணவுகள், கடல் வாழ் உணவுப் பொருட்கள், சமையல் எண்ணெய், காப்பிக்கொட்டை, காப்பித்தூள், சாக்லேட், சட்டினி, ஊறுகாய், சாஸ், பால், பால் பொருட்கள், காளான், குழந்தைகள் உணவு, சமையல் எரிவாயு, பெட்ரோல் பொருட்கள், வேளாண்மை இரசாயனங்கள், ஐஸ், சமையல் வாசனைப் பொருட்கள், கட்டிட உபகரணங்கள், பூச்சு, வார்னிஸ் மற்றும் நீர்மமாகப் பயன்படும் திரவம், வீட்டு உபயோக டிடர்ஜெண்ட், பழங்கள், பழப்பொருட்கள், சாறுகள், பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள், பொருட்களின் மூலப் பொருட்கள், சலவைக்கட்டி, சலவைப்பொடி, காலணிகள் மெருகேற்றி, பற்பசை, பற்பொடி, குடிநீர், தூய்மையாக்கப்பட்ட நீர், ஒப்பனைப் பொருட்கள், மின் உபயோகப்பொருட்கள், அச்சுப்பதிக்கப் பயன்படும் மை மற்றும் எழுதப் பயன்படும் மை, எழுத்துப்பொருட்கள் மற்றும் நூல்கள், மின்கல அமிலம், உப்பு, ஆல்கஹால் அல்லாத பாணம், ஆல்கஹால் உணவுப்பொருள் சாறு மற்றும் வண்ணங்கள், மருந்துத் தயாரிப்பதற்கானப் பொருட்கள், உயவு எண்ணெய், பூச்சிக்கொல்லி மருந்துகள், பூஞ்சைகள், கலைக்கொல்லி, கிருமி நாசினி, உரங்கள், தூய்மையாக்கும் முகவைகள், நாடா, ஒளி & ஒலி நாடாக்கள், மீள் திறனுடைய நாடா, ஒட்டும் நாடாக்கள், தையல் நூல், மேசை விரிப்பன், படுக்கை விரிப்பான், துண்டுகள், புடவைகள், மரக்கட்டைகள், தீப்பெட்டிகள், மெழுகுவர்த்திகள், மத்தாப்புக்கள், கணினியின் மென்வட்டுகள், காய்கறிகள், காய்கறிப் பொருட்கள், குண்டூசி, கவ்வி, காகித இணைப்பான், பசை, களிம்பு, மிளகாய், மிளகாய் பொடி, தேங்காய் பொருட்கள், அவரைகள், வெங்காயம், வெள்ளைப்பூண்டு, அரிசி, உருளைக்கிழங்கு, உருளைக்கிழங்குப் பொருட்கள்.
|
முறைப்பாடு செய்யவும் |
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 07:02:17 |
» | உடல் நல வைத்திய அதிகாரி |
» | பொது சுகாதார கண்காணிப்பாளர் |
» | குடும்ப சுகாதார மருத்துவச்சி |
» | பொலிஸ் நிலையம் |
» | புகையிரத நேர அட்டவணை |