1.1 சுங்கத்தீர்வை அற்ற பிரதான பண்டங்கள் மற்றும் மூலப்பொருட்களை இறக்குமதி செய்ய அங்கீகாரத்தை வழங்குதல்,
1.1.1 தகைமைகள்
1. இலங்கை முதலீட்டு சபையுடன் உடன்படிக்கை ஒன்றை வர்த்தக நிறுவனம் கைச்சாத்திட்டிருக்க வேண்டும்.
2. உள்நாட்டு இறைவரி திணைக்களத்துடன் “பெ.சே.வரி (VAT) சான்றிதழ்”, “வரி அடையாள இலக்கம்” (TIN), மற்றும் (பெ.சே.வரி ( VAT)) என்பனவற்றை பெறுவதற்காகப் பதிவு செய்திருத்தல்
3. வரி அடையாள இலக்கம்” (TIN), மற்றும் (பெ.சே.வரி ( VAT)) என்பனவற்றுக்காக இலங்கை சுங்கப்பகுதியில்(SLC), தானியங்கி தரவு நிரல்படுத்தும் பிரிவில் (ADP) பதிவு செய்திருத்தல்.
4. இலங்கை முதலீட்டுச்சபையின்.முதலீட்டாளர் சேவைகள் திணைக்களத்தில் பதிவுசெய்திருத்தல் (முதலீட்டாளர் சேவைகள் இணையத்தளமான www.boi.lk/insvestorservices இல் (ஒன்லைன் - நேரடி) நேரடியாக நீங்கள் பதிவினை மேற்கொள்ள முடியும்.)
5. ஒத்தி வைக்கப்பட்டுள்ள பெ.சே.வரி (VAT) வசதியளித்தலின் கீழ், பெ.சே.வரி ( VAT) வகையினையும் பதிவினையும் பெற்றுக்கொள்வதற்கு, முதலீட்டாளர் சேவைகள் திணைக்களத்தின், பெ.சே.வரி (VAT) பிரிவின் ஊடாக சுங்கப் பணிப்பாளர் நாயகத்துடன் பதிவினை மேற்கொள்ளல்,
6. கருத்திட்டத்தோடு தொடர்புபட்ட பண்டங்களுக்கான அங்கீகாரச்சான்று கடிதம் ஒன்றினை முதலீட்டு திணைக்களத்திலிருந்துப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
1.1.2 விண்ணப்பப்படிவங்களை சமர்ப்பிக்கும் வழிமுறை
(விண்ணப்பப்படிவங்களை பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள் மற்றும் சமர்ப்பிக்கக்கூடிய இடங்கள், பகுதிகள் மற்றும் காலம்)
1.1.2.1 விண்ணப்பப்படிவங்களை பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள்:- (மாதிரி ஒன்று மாத்திரம்).
இலங்கை சுங்கத் திணைக்களம்,
“சுங்க நிலையம்”,
பிரிஸ்டல் வீதி,,
கொழும்பு 01, இலங்கை.
1.1.2.2 விண்ணப்பப்படிவத்தைப் பெற்றுக்கொள்வதற்குரிய கட்டணம்:-
இல்லை
1.1.2.3 சமர்ப்பித்தலுக்குரிய காலவரையறை:-
மு.ப 8.30 - பி.ப 3.30 வரை (அரசாங்க) கடமை நாட்களில் .
1.1.2.4 சேவையைப் பெற்றுக்கொள்ள, செலுத்த வேண்டிய கட்டணம்:-
CUSDEC ஆவணமொன்றை அங்கீகரிப்பதற்காக அறவிடப்படும் கட்டணம்
ரூ. 397.00
1.1.3 சேவையை வழங்குவதற்கு தேவைப்படும் காலம் (சாதாரண மற்றும் முதன்மைச் சேவைகள் )
• சாதாரண சேவைக்காக = சராசரியாக. 30 நிமிடங்கள்.
• முன்னுரிமை சேவை = சராசரியாக. 20 நிமிடங்கள் (கிரீன் சேனல்).
1.1.4 உறுதிப்படுத்தத் தேவையான ஆவணங்கள்:-
1. கடல் வழியாக பண்டங்களை இறக்குமதி செய்வதற்காக தேவையான ஆவணங்கள்
1.1 சேவையைப் பெற்றுக்கொள்ள செலுத்திய கட்டணப் பற்றுச்சீட்டு.
1.2 CUSDEC இறக்குமதி (2 பிரதிகளுடன்).
1.3 விலைப்பட்டியல் (3 பிரதிகள்).
1.4 பொதியிடல் பட்டியல்.
1.5 Bill of lading (B/L).
1.6 விநியோகக் கட்டளை.
2. வான் வழியாக பண்டங்களை இறக்குமதி செய்வதற்கு.
2.1 பிரதான வான் வழிப் பட்டியல் (MAWB).
2.2 நிலைய வான்வழி பட்டியல் (HAWB).
2.3 வந்து சேர்ந்தமைக்கான அறிவித்தல்.
www.boi.lk/investorservices இணையத்தளத்தின் ஊடாக இலங்கை முதலீட்டுச் சபைக்கு மின்னஞ்சல்கள் மூலமாக முன்கூட்டியே B/L மற்றும் AWBs ன் இலக்கங்களை சமர்ப்பித்தல் வேண்டும்.
1.1.5 பொறுப்பு வாய்ந்த பதவி நிலை உத்தியோகத்தர்கள்
பதவி பெயர் பிரிவு தொலைபேசி தொலை நகல் மின்னஞ்சல்
சிரேஷ்ட பிரிவுப் பணிப்பாளர். திரு.. W. P. அபேசிங்க ஏற்றுமதிப் பிரிவு / பகுதி # +94-11- 2543042 +94-11- 2473127 padmakumaraa@boi.lk
பிரிவுப் பணிப்பாளர். திருமதி. B. G. K. பீரிஸ் ஏற்றுமதிப் பிரிவு / பகுதி # +94-11- 2342402 +94-11- 2473127
பிரிவுப் பணிப்பாளர். திரு.. M. S. D. பெரேரா ஏற்றுமதிப் பிரிவு / பகுதி #- +94-11- 2342402 +94-11- 2473127 sarathp@boi.lk
# இறக்குமதிப் பிரிவு / பகுதி, முதலீட்டாளர் சேவைகள் திணைக்களம்,,
இலங்கை முதலீட்டு சபை,
இல.. 14, ஶ்ரீ பரோன் ஜயதிலக்க மாவத்தை,
கொழும்பு 01, இலங்கை.
1.1.6 மேற்கூறப்பட்ட தேவைகளுக்கு புறம்பான சந்தர்ப்பங்களும் விசேட தகவல்களும்,
அவசர உற்பத்தி தேவைகளுக்காக வான் வழியாக இறக்குமதி செய்யப்பட்டுள்ள பண்டங்களை விடுவித்துக்கொள்வதற்கான அங்கீகரத்தினை, விசேட விண்ணப்பப்படிவம் ஒன்றை பி.ப 4.30 மற்றும் மு.ப 8.30 வரையிலான காலத்திற்கிடையில் சமர்ப்பிப்பதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.
1.1.7 மாதிரி விண்ணப்பப்படிவங்கள் (மாதிரி விண்ணப்பப்படிவங்களை இணைக்குக)
விண்ணப்பப்படிவ இலக்கம் 05, CUSDEC, என்பது அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்காக இறக்குமதி செய்யக்கூடிய பண்டங்களை பிரகடனப்படுத்தும் படிவம்
விண்ணப்பப்படிவ இலக்கம் 12, ஒத்திவைக்கப்பட்ட பெ.சே.வரி ( VAT) கட்டணங்கள் தொடர்பாக இலங்கை சுங்கப் பகுதியுடன் பதிவினை மேற்கொள்ள பயன் படுத்தப்படுகிறது.
விண்ணப்பப்படிவ இலக்கம் 15, இலங்கை முதலீட்டுச்சபையின் முதலீட்டாளர் சேவைகள் திணைக்களத்துடன் பதிவினை மேற்கொள்ள பயன்படுத்தப் படுகிறது.
1.1.8 பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி விண்ணப்பப்படிவங்கள் (பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவங்களை இணைக்குக)
அமைப்பு பற்றிய தகவல்இலங்கை முதலீட்டுச் சபை
தலைமை அலுவலகம் :
த. பெ. இல. 1768,
05, 06, 08, 09, 19, 24, 25 மற்றம் 26ஆம் மாடிகல்,
மேற்கும் கோபுரம்,
உலக வர்த்தக,
ஏச்சிலன் சதுக்கம்,
கொழும்பு 01,
இலங்கை. பீ. ஏ. பெரேரா தொலைபேசி:+94-11-2434403 / +94-11-2346131/3 தொலைநகல் இலக்கங்கள்:+94-11-2448105 மின்னஞ்சல்:info@boi.lk இணையத்தளம்: www.investsrilanka.com
|