SCPPC-நெல், வயற்பயிர், மரக்கறி - விதை உற்பத்தி செய்யும் பயிர்களை பதிவுசெய்தலும் உற்பத்தி செய்த விதைகளுக்கு சான்றளித்தலும் |
|
|||
தகைமை விவசாய திணைக்களத்திலிருந்து அடிப்படை விதைகளை கொள்வனவு செய்து சான்றளித்த விதைகளை உற்பத்தி செய்யும் தேவையுடைய சகல விதை உற்பத்தியாளரும்
விண்ணப்பிக்கும் பதிவுசெய்யும் செய்முறை சகல விபரங்களுடன் பிரதிப் பணிப்பாளர் (SCS) இற்கு கடித மூலம் அல்லது மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்கவும். (பெயர், முகவரி, தொடர்பு கொள்ளும் விபரம், நிலையம், பயிர், வர்க்கம், விதை வகை, தொகுதி இல, விதை அளவு, நிலப் பரப்பளவு பயிரிட்ட திகதி, போன்றவை) பிரதேச SCS உத்தியோகத்தருக்கு பிரதி ஒன்றை அனுப்பவும் பிரதி பணிப்பாளர் (SCS) இன் அனுமதி வழங்கப்பட்ட பின்னர் பிரதேச SCS உத்தியோகத்தர் தோட்டத்திற்கு சமூகமளித்து அடிப்படைதேவைகளை பரசோதிப்பார், உற்பத்தியாளர் பதிவு செய்வதற்கான தகைமைகளை பெற்றிருந்தால் SCS உத்தியோகத்தரால் பதிவு செய்யப்படுவார். பதிவு செய்த பின்னர் 2-3 மேற்பார்வைகள் செய்யப்படும். இறுதியாக முதிர்ச்சி நிலையில் செய்யப்படும். மேற்பார்வையானது விதை உற்பத்திக்கு பயிரை ஏற்றுக்கொள்வதா என்பதை தீர்மானிக்க பயன்படுத்தப்படும்.
அறுடைக்குப் பின்னர் ஒரு தொகுதி மாதிரியானது தரப் பரிசீலனைக்காக SCS இலுள்ள விதை பரிசோதிக்கும் ஆய்வு கூடத்திற்கு வழங்கப்படும்.
தேவையான அடிப்படை தேவைகள் i. ஆகக் குறைந்த நிலப்பரப்பு (நெல் – 1 ஏக்கர் உருளைக்கிழங்கு .......... ஏக்கர், வயற்பயிர்கள் ½ ஏக்கர், மரக்கறிகள் – ¼ ஏக்கர் ii. உற்பத்தியின் உறுதி (அடிப்படை விதைத் தொகுதியின் மூல பெயர்சுட்டி iii. பயிர் சுகாதார நிலைமை, மற்றைய வர்க்கங்களிலிருந்து வெறுபடுத்தப்பட்ட தூரம், உண்மையா வர்க்கப் பண்புகள். iv. உருளைக் கிழங்கு – கடந்த 2 வருடங்களில் சொலனேசியே குடும்ப தாவரங்களான தக்காளி, கத்தரி, மிளகாய் பயிரிடப்படாத இடம் வர்க்கம், விதை வகுப்பு, அடிப்படை விதைகள் நிலத்தின் எல்லைகளை காட்டும் வரைபு போன்ற தகவல்களை சமர்ப்பிக்கவும், நிலத்தின் உயரம் கடல் மட்டத்திலிருந்து 4500 அடி மட்டிலும் நிலச் சரிவு 40% குறைவாகவும். மண் PCN மற்று ரல்ஸ்டொனியா சொலனெசியாரம் என்பவை அற்றதாகவும் (மண் பரிசோதனை அறிக்கை தேவை) மற்றும் மண்ணானது வட்டப்புழுக்கள் அற்றதாகவும் இருக்க வேண்டும்.
விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய காலம் அலுவலக நேரங்களில்
சேவைக்கு தேவையான கட்டணம்.
நெல் – ரூபா 400/= /ஏக்கர்/போகம்/தொகுதி மாற்று வயற்பயிர்கள் ரூபா 400/= / ½ - 1 ஏக்கர்/போகம்/தொகுதி மரக்கறி ரூபா 400/= / ¼ - 1 ஏக்கர்/போகம்/தொகுதி உருளைக்கிழங்கு – ரூபா 800/= / ஏக்கர்/போகம்/தொகுதி
சேவையை வழங்க எடுக்கும் காலம் பதப்படுத்தலிற்கு ஏற்ப
சேவை வழங்கப்படும் இடம்.
விதை சான்றளிப்பு சேவை (SCS) தபால்பெட்டி 3, கன்னொறவை, பேராதெனிய தொலைபேசி 081-2388217 மின்னஞ்சல் scsdoa79@yahoo.com
சேவை வழங்க பொறுப்பான உத்தியோகத்தர் பிரதிப் பணிப்பாளர் (SCS) கலாநிதி திருமதி. R. நானயக்கார
|
முறைப்பாடு செய்யவும் |
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 05:05:05 |
» | உடல் நல வைத்திய அதிகாரி |
» | பொது சுகாதார கண்காணிப்பாளர் |
» | குடும்ப சுகாதார மருத்துவச்சி |
» | பொலிஸ் நிலையம் |
» | புகையிரத நேர அட்டவணை |