Early Investigation & Rehabilitation of Disabled Children |
|
|||
உங்கள் பிள்ளையின் பிறப்பில், குழந்தைப் பருவத்தில் அல்லது அதன் பின்னர் வளர்ச்சியில் சிக்கல் அல்லது தாமதம், மாற்றுத்திறனுள்ள நிலை இருப்பதாக அடையாளம் கண்டால் அரச நிறுவனம் என்ற வகையில் எமது நிறுவனம் உங்கள் பிள்ளைக்காக திறந்திருக்கிறது. பிள்ளையின் ஊனத்தை முற்கூட்டியே அறிந்துகொண்டு சேவை வழங்குதல்தமது பிள்ளைக்கு ஏதேனும் ஊனம் உள்ளது என்பதை அறிந்துகொண்டதன் பின்னர் பெரும்பாலும் குடும்ப கூட்டுத்தாபனத்தில் தீவிர சிக்கலான நிலை தோன்றுவதோடு, அத்தகைய சந்தர்ப்பங்களில் ஏற்படுகின்ற மன அழுத்தத்தைக் குறைத்துக்கொள்ளுவதற்கும் இந்த நிலையைப் படிப்படியாகப் புரிந்துகொள்ளுவதற்கு உதவி சேவைகள் இருக்க வேண்டும். அது குடும்ப அங்கத்தினர்களைப் போன்று பிள்ளைக்கும் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். பிள்ளையின் வளர்ச்சியில் உள்ள பல்வேறு சிக்கல்களை (ஊனங்கள்) அடையாளம் காணக்கூடிய வயது நிலை பலதரப்பட்டதாகும். சில வேளைகளில் சிற்சில நிலைகளை பிறப்பிலேயே அறிந்துகொள்ள முடியும். இயலுமானளவு முற்கூட்டியே அறிந்துகொண்டு உரிய சேவைகளை வழங்குவதற்காகத் தலையிடுவதன்மூலம் ஆகக்கூடிய அபிவிருத்தியை நோக்கிச் செல்லுவதற்குள்ள வாய்ப்பு அதிகமானது என்பது கல்விமான்கள் ஏற்றுக்கொண்ட விடயாகும். இதன் பிரகாரம் சமூக சேவை திணைக்களம், இலங்கையில் வாழ்கின்ற பல்வேறு மாற்றுத்தினுள்ள பிள்ளைகளின் முன்னிளம் பருவத்தை அபிவிருத்தி செய்வதற்காக தலையிடும் தேசிய வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்தும் தேவையை நிறைவுசெய்வதற்காக கொழும்பு மாவட்டத்தை அடிப்படையாகக்கொண்ட மாதிரி கருத்திட்டமொன்று 2003ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. அத்துடன், அது மகரகம, வெல வீதி, இலக்கம். 11, சிறுவர் வழிகாட்டல் நிலையத்தை மையமாகக்கொண்டு செயற்படுத்தப்படுகின்றது. கருத்திட்டத்தின் நோக்கம்
நாங்கள் உங்கள் பிள்ளைக்காகவே
எமது முன்னிளம் பருவ அபிவிருத்தி நிறுவனத்தின் மூலம் பின்வரும் சேவைகளை உங்கள் பிள்ளைக்காக இலவசமாக வழங்குகின்றோம்.
மேலதிக விபரங்களை நாடு முழுவதிலும் அமைந்துள்ள பிரதேச செயலகங்களுக்கு இடைச் சேர்க்கப்பட்டுள்ள சமூக சேவை திணைக்களத்தின் சமூக சேவை உத்தியோகத்தரிடம் அல்லது அபிவிருத்தி உத்தியோகத்தரிடம் பெற்றுக்கொள்ள முடியும்.
|
முறைப்பாடு செய்யவும் |
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 07:33:22 |
» | உடல் நல வைத்திய அதிகாரி |
» | பொது சுகாதார கண்காணிப்பாளர் |
» | குடும்ப சுகாதார மருத்துவச்சி |
» | பொலிஸ் நிலையம் |
» | புகையிரத நேர அட்டவணை |