வெளிநாட்டு நாணய வெளிப்படுத்தல் பற்றிய வரையறைகள் |
|
|||
நிதி அமைச்சு இலங்கைச் சுங்கம்
வெளிநாட்டு நாணய வெளிப்படுத்தல் பற்றிய வரையறைகள் 1. எந்தவொரு நபரும் எவ்வளவு தொகையான வெளிநாட்டு நாயணங்களையும் இலங்கைக்குள் கொண்டு வரலாம். இது பிரயாண காசோலையாகவோ, வங்கிக் கட்டளையாகவோ அல்லது நாயணத்தாள்களாகவோ இருக்கலாம். எனினும், இத்தகைய பணத்தொகையானது 15,000 ஐ.அ.டொலர்களுக்கு அதிகமாயின் அதனை இலங்கை சுங்கத்திடம் வெளிப்படுத்தல் வேண்டும்.
2. மேலே (1) இல் கூறப்பட்டதன பிரகாரம் நாட்டினுள் கொண்டுவரும் பணத்தில் 5,000 ஐ.அ. டொலர்களுக்கு கூடுதலான தொகையுடைய நாணயத்தாள்களை இலங்கைக்கு வெளியே கொண்டு செல்ல விரும்பினால், அக்குறித்த நபர் நாட்டிற்குள் கொண்டுவரும் நாணயத்தாள்களின் முழுத் தொகையினையும், அது 15,000 ஐ.அ. டொலர்களுக்கு குறைவாக இருப்பினும், வெளிப்படுத்தல் வேண்டும்.
3. எந்தவொரு நபரும் தான் சட்டரீதியாகப் பெற்றுக்கொண்ட 10,000 ஐ.அ. டொலர்கள் தொகை வரையிலான எவ்வடிவிலுமான வெளிநாட்டு நாணயங்களை எவ்வித வெளிப்படுத்துகையும் இன்றி நாட்டிலிருந்து வெளியே கொண்டு செல்லலாம். இருப்பினும், அந்த நாணயத்தாள்களின் தொகை 5,000 ஐ.அ. டொலர்களை விட அதிகமாயின கொண்டுசெல்லும் முழுத் தொகையயினையும் பிரகடணம் செய்தல் வேண்டும்.
4. எந்தவொரு நபரும் தொழில்வாய்ப்பு, நிபுணத்துவம் அல்லது வியாபாரம் நிமித்தம் வெளிநாட்டில் சம்பாதித்த எந்தளவுத் தொகையினையும் மேலே பந்தி (1) இல் கூறியுள்ளதன் பிரகாரம் சுங்கத் திணைக்களத்தில் வெளிப்படுத்தியதன் பேரில் நாட்டிற்குள் கொண்டுவரலாமென்பதோடு, அத்தகைய தொகையினை அக்குறித்த நபர் இலங்கை ரூபாக்களாக மாற்றுவதற்கு முன்னரான 90 நாட்களுக்கு தம்முடன் வைத்துக்கொள்ளலாம்.
5. வெளிநாட்டுப் பயணங்களுக்காக ஒரு வங்கியிலிருந்து அல்லது அங்கீகரிக்கப்பட்ட பிரயான முகவரிடமிருந்து அல்லது அங்கீகரிக்கப்பட்ட நாணய மாற்றுனரிடமிருந்து வெளிநாட்டு நாணயத்தை பெறுகின்ற எவரேனும் நபர் ஒருவர், தான் உபயோகிக்காத தொகையினை இலங்கை ரூபாக்களாக மாற்றுவதற்கு முன்னரான 90 நாட்களுக்கு தம்முடன் வைத்துக்கொள்ளலாம்.
6. மேலே (4) மற்றும் (5) இல் கூறியுள்ளதன் பிரகாரம், எவரேனும் நபர் ஒருவர் வைத்துக்கொண்டுள்ள வெளிநாட்டு நாணயங்களை, அவ்வாறு வைத்திருப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியினுள் அங்கீகரிக்கப்பட்ட கொடுக்கல் வாங்கல்களுக்காக அடுத்து மேற்கொள்ளவுள்ள வெளிநாட்டு விஐயங்களின் போது உபயோகிக்கலாம்.
7. வெளிநாட்டு பயணத்தின் பின்னர் திரும்பி வருகின்ற எவரேனும் ஒருவர் அத்தகைய பயணத்திற்காக கொள்வனவு செய்யப்பட்ட அல்லது இலங்கைக்கு வெளியில் அவரால் சம்பாதிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயத்திலிருந்து 2,000 ஐ.அ. டொலர்களை எவ்வித கால வரையறையின்றியும் எதிர்கால பயணங்களின் போதான தனது பயன்பாட்டுக்காக வைத்துக்கொள்ளலாம். மேலே ஐ.அ. டொலர்கள் எனக் குறித்துரைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு நாணயத் தொகைகள் ஏனைய மாற்றத்தகு வெளிநாட்டு நாணயங்களின் சம தொகையாக இருக்கும்.
|
முறைப்பாடு செய்யவும் |
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 05:30:32 |
» | உடல் நல வைத்திய அதிகாரி |
» | பொது சுகாதார கண்காணிப்பாளர் |
» | குடும்ப சுகாதார மருத்துவச்சி |
» | பொலிஸ் நிலையம் |
» | புகையிரத நேர அட்டவணை |