விசேட அவசியப்பாடுகள்:- கிடையாது
சேவை பற்றிய விபரம்:-
இப்புகையிரதத்தை வர்த்தக மற்றும் சந்தைப்படுத்தல் முகாமையாளர் ஊடாக ஒதுக்கிக் கொள்ள இயலுமென்பதோடு 60 பயணிகளும் 100 பயணிகளும் பயணஞ் செய்யப்கூடிய 2 புகையிரதத் தொகுதிகள் உள்ளன. சேவைகளைப் பெற்றுக்கொள்ள விரும்புகின்றவர்கள் வர்த்தக மற்றும் சந்தைப்படுத்தல் முகாமையாளருடன் (தொலைபேசி – 011-2421909) தொலைபேசி மூலமாக விபரங்களைப் பெற்றுக்கொள்ளவூம்.
சேவையைப் பெற்றுக்கொள்ளும் விதம் (வழிமுறை)
கொழும்பு 10 புகையிரத தலைமையகத்தின் வர்த்தக மற்றும் சந்தைப்படுத்தல் முகாமையாளர் அலுவலகத்திடமிருந்து இதற்கான விண்ணப்பப் பத்திரத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இதற்கான விண்ணப்பப் பத்திரம் இலக்கம் 2.2(அ) இச்சிறிய நூலுடன் இணைக்கப்பட்டுள்ளது. இன்றேல் நிறுவனத்தின் பெயர் பயணிகள் எண்ணிக்கை ஆரம்ப மற்றும் இறுதிப் புகையிரத நிலையங்கள் அத்துடன் உத்தேச திகதிகளைக் குறிப்பிட்டு கடிதமொன்றை அனுப்பிவைப்பதன் மூலமாகவூம் ஒதுக்கிக் கொள்ள முடியூம்.
விண்ணப்பப் பத்திரத்திற்காக செலுத்த வேண்டிய தொகை:-
கிடையாது.
ஒதுக்கிக் கொள்ளக்கூடிய நேரங்கள்:-
கிழமை நாட்களில் காலை 09.00 மணியில் இருந்து மாலை 04.00 மணி வரை
புகையிரதத்தை ஒதுக்கிக் கொள்வதற்கான கட்டணங்கள்:-
ஒதுக்கிக் கொள்ளும் நேரத்திலேயே செலுத்த வேண்டிய
அடிப்படைக் கட்டணம் - ரூ.5000.00
கிலோ மீற்றருக்கான கட்டணம் - ரூ.1400.00
புகையிரதத்தை நிறுத்தி வைக்கும் கால
வரையறைகளுக்கான கட்டணம் (மணித்தியாலத்திற்கு) - ரூ.100.00
சேவையைப் பெற்றுக்கொள்ள எடுக்கும் காலம்:-
விண்ணப்பப் பத்திரம் கிடைத்த பின்னர் புகையிரத தொகுதியை ஒதுக்கிக் கொள்வதில் நிலவூகின்ற ஆற்றலுக்கிணங்க விண்ணப்பதாரிக்கு அறிவிக்கப்படும். அதன் பின்னர் விண்ணப்பதாரி ரூ.5000ஃ- பணத்தொகையை அண்மையில் உள்ள புகையிரத நிலையத்திற்கு செலுத்திய பின்னர் அது பற்றி வர்த்தக மற்றும் சந்தைப்படுத்தல் முகாமையாளருக்கு அறிவிப்பதன் மூலம் புகையிரதத்தை ஒதுக்கிக்கொள்ள முடியூம். 2 வார காலப்பகுதிக்குள் இப்பணியை ஈடேற்றிக்கொள்ள முடியூம்.
சேவையைப் பெற்றுக்கொள்ள கொண்டுவரவேண்டிய வேறு ஆவணங்கள்
விண்ணப்பப் பத்திரம் மாத்திரம் போதுமானது.
சேவையை வழங்கும் பொறுப்பினை வகிக்கும் உத்தியோகத்தர்கள்
புகையிரத நிலைய அதிபர்கள் அல்லது
பதவி |
பெயர் |
தொலைபேசி |
பக்ஸ் |
மின்னஞ்சல் |
வர்த்தகம் மற்றும் சந்தைப்படுத்தல் முகாமையாளர் |
திரு.வூ.சு.பி.டீ. தென்னக்கோன்
|
+94-11-2320109 |
+94-11-2320109 |
com@railway.gov.lk |
இச்செயற்பாடுகளுக்குப் புறம்பான சந்தர்ப்பங்கள்:-
இச்சேவையை வழங்குவதற்காக ஈடுபடுத்தப்படுகின்ற புகையிரதத் தொகுதிகள் 30 வருடங்கள் பழமை வாய்ந்தவை. இதன் காரணமாக சில சந்தர்ப்பங்களில் பயணங்கள் இரத்துச் செய்யப்படுகின்ற நிலைமைகளும் உண்டு.
அமைப்பு பற்றிய தகவல்இலங்கை புகையிரதத் திணைக்களம்
புகையிரத தலைமையகம்,
தபால் பெட்டி இல். 355,
கொழும்பு. திரு. எல்.பி.எச். வடுகே தொலைபேசி:+94 11 4 600 111 தொலைநகல் இலக்கங்கள்:+94 11 2 446490 மின்னஞ்சல்:gmr@railway.gov.lk இணையத்தளம்: www.railway.gov.lk
|