சேவையைப் பெற்றுக்கொள்வதற்கான விசேட அவசியப்பாடுகள்:-
கிடையாது.
சேவை பற்றிய விபரங்கள்
புகையிரதத் திணைக்களத்தின் வணிக அத்தியட்சகராலேயே இதற்கான அனுமதி வழங்கப்படுவதோடு விண்ணப்பப் பத்திரமொன்றைச் சமர்ப்பிப்பதன் மூலமாக சேவையைப் பெற்றுக்கொள்ள முடியூம். எவ்வாறாயினும் அத்தகைய புகைப்படம் எடுத்தலும் நாடாக்களில் பதிவூ செய்யப்படுதலும் புகையிரத சேவைக்கோ பயணிகளுக்கோ அவமானத்தை ஏற்படுத்தக்கூடியயவையாக அமைதலாகாது.
சேவையைப் பெற்றுக்கொள்ளும் விதம்
இதன் பொருட்டு 2.8 ஆம் இலக்க விண்ணப்பப் பத்திரத்தை (இவ்விண்ணப்பப் பத்திரம் இப்புத்தகத்தின் 3.3 ஆம் அத்தியாயத்தில் இணைக்கப்பட்டுள்ளது) பூர்த்தி செய்து வணிக அத்தியட்சகரிடம் சமர்ப்பிப்பதன் மூலமாக ஈடேற்றிக் கொள்ளலாம். இன்றேல் நிறுவனத்தின் பெயர் புகைப்படங்கள் எடுக்கும் இடங்கள் அண்மையில் உள்ள புகையிரத நிலையம் புகைப்படங்கள் எடுக்கும் நாட்கள் போன்றவற்றைக் குறிப்பிட்டு கடிதமொன்றை அனுப்பி வைப்பதன் மூலமாகவூம் ஈடேற்றிக் கொள்ளலாம்.
விண்ணப்பப் பத்திரத்திற்கான கட்டணம்:
கிடையாது.
சேவையைப் பெற்றுக்கொள்ளக்கூடிய நேரங்கள்:
கிழமை நாட்களில் காலை 09.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை.
சேவையைப் பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டியவை
புகைப்படம் எடுத்தல்
இந்நாட்டின் தேவைக்காக ஒரு புகைப்படத்திற்கு- ரூ.1000.00
வெளிநாட்டின் தேவைக்காக ஒரு புகைப்படத்திற்கு- ரூ.2000.00
நாடாக்களில் பதிதல்
இந்நாட்டின் தேவைக்காக ஒரு மணித்தியாலத்திற்கு- ரூ.5000.00
வெளிநாட்டின் தேவைக்காக ஒரு மணித்தியாலத்திற்கு- ரூ.10000.00
மேற்பார்வைக்கான மேலதிக கட்டணம்- ரூ.1000.00
சேவையைப் பெற்றுக்கொள்ள எடுக்கும் நேரம்
அவசியத்திற்கிணங்க உடனடியாக அனுமதியைப் பெற்றுக்கொள்ள முடியூம். அதன் பின்னர் புகையிரத தலைமையகத்தின் பிரதம கணக்காளர் திணைக்களத்தின் செலுத்துதல் கருமபீடங்களுக்கு சம்பந்தப்பட்ட தொகையைச் செலுத்துவதன் மூலமாக ஈடேற்றிக் கொள்ளலாம்.
சேவையைப் பெற்றுக்கொள்ள கொண்டுவர வேண்டிய ஆவணங்கள்:
விண்ணப்பப் பத்திரம் மாத்திரமே. வேறு ஆவணங்கள் தேவையில்லை.
சேவை வழங்குதல் தொடர்பில் பொறுப்பு வகிக்கும் உத்தியோகத்தர்கள்:
பதவி |
பெயர் |
தொலைபேசி |
பக்ஸ் |
மின்னஞ்சல் |
வணிக அத்தியட்சகர்
|
திரு. விஜய சமரசிங்க |
+94-11-2320109 |
+94-11-2320109 |
com@railway.gov.lk |
அமைப்பு பற்றிய தகவல்இலங்கை புகையிரதத் திணைக்களம்
புகையிரத தலைமையகம்,
தபால் பெட்டி இல். 355,
கொழும்பு. திரு. எல்.பி.எச். வடுகே தொலைபேசி:+94 11 4 600 111 தொலைநகல் இலக்கங்கள்:+94 11 2 446490 மின்னஞ்சல்:gmr@railway.gov.lk இணையத்தளம்: www.railway.gov.lk
|