படி 1 : விண்ணப்பதாரர் வசிக்கும் நாட்டில் உள்ள இலங்கை தூதரகத்தில் விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
படி 2 : இலங்கை தூதரகம் விண்ணப்பம் மற்றும் அதற்கான தொகையையும் இலங்கையின் பொலிஸ் தலைமையகதிற்கு அனுப்பும்.
படி 3 : இலங்கையின் பொலிஸ் தலைமையகம் விண்ணப்பத்தை சரிபார்த்து உள்ளுர் பொலிஸ் நிலையத்திடம் விண்ணப்பதாரர் எங்கு இசைவு அறிக்கையை சமர்பித்தார் என்ற தகவலை அறிய வேண்டுவர்.
குறிப்பு 01: வெளிநாட்டிற்கு செல்லும் முன் இலங்கையின் பல்வேறு இடங்களில் வசித்த இலங்கை வாசி எந்த வசிப்பிடத்தில் இருந்து தன்னுடைய இசைவு அறிக்கையை ஒப்படைத்ததாக சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையத்திடம் பொலிஸ் தலைமையகம் தெரிவிக்குமாறு வேண்டுகோளிடும்.
படி 4 : பொலிஸ் தலைமையகம் மேலும் விண்ணப்பத்தை பற்றி குற்றப் புலனாய்வு அதிகாரி,உள்துறை இண்டலிகூன்ஸ் மற்றும் தேசிய அடையாள அட்டை வழங்கும் திணைகளத்தின் மூலம் சரிபார்க்கப்படும்.
படி 5 : கொடுக்கப்பட்ட விபரங்கள் பொலிஸ் தலைமையகத்திற்கு திருப்தியளித்தால் இலங்கை தூதரகத்தின் வழியாக விண்ணப்பதாரர் இசைவு சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம்.
குறிப்பு : இலங்கையை விட்டு சென்ற விண்ணப்பதாரரின் கடைசி 10 வருடங்களுக்கான இசைவு சான்றிதழ் யுனைடெட் கிங்டம்,கனடா,அவுஸ்திரேலியா,அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் நியசிலாந்து போன்ற நாடுகளில் வேண்டப்படுகிறது.
மேலே குறிப்பிட்ட நாடுகளை தவிர வேறு நாடுகளில் வசிக்கும் விண்ணப்பதாராகளுக்கு.உள்ளுர் பொலிஸ் நிலையத்தின் (இலங்கை) பொறுப்பு அலுவலரிடமிருந்து இசைவறிக்கை பெறலாம்.
தொடர்புக்கு : பொலிஸ் பொதுமக்கள் உறவுப் பிரிவு.
தகுதி வகையறைகள்:
இலங்கையினர் இலங்கை அல்லது வெளிநாட்டில் வேலை தேடுதல்.
சமர்ப்பிக்கும் முறைகள்:
விண்ணப்ப படிவம் பெறுதல்.
விண்ணப்பதாரர் வசிக்கும் நாட்டில் உள்ள இலங்கையின் தூதரகத்திலிருந்து விண்ணப்ப படிவத்தை பெற வேண்டும்.
விண்ணப்பம் ஒப்படைக்கப்படுதல்:
விண்ணப்பதாரர் வசிக்கும் நாட்டில் உள்ள இலங்கை தூதரகத்தில் விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பபடிவம்
படிவத்தின் பெயர் : பொலிஸ் இசைவுசான்றிதழுக்கான விண்ணப்பம் (DOP APCC)
வரைவு விண்ணப்ப படிவம்.(DOP APCC படிவம்)
குறிப்பு 01: விண்ணப்பபடிவம் பொலிஸ் தலைமையகத்தின் மூலம் வழங்கப்படுகிறது.
குறிப்பு 02: சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையத்தில் விண்ணப்ப படிவங்கள் வழங்குவதில்லை.சமர்பிக்கும் நேரத்தில் கையினால் எழுதப்பட்ட வேண்டுகோள் கடிதத்தை சம்மந்தப்பட்ட பொலிஸ் நிலைய பொறுப்பு அலுவலரிடம் ஒப்படைக்குமாறு வேண்டப்படுவர்.
குறிப்பு : சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையத்தினால் வழங்கப்படும் இசைவு சான்றிதழின்(DOP APCC)நகல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.எடுத்துக்காட்டாக கிருளைப்பனை பொலிஸ் நிலையம்.
காலக்கெடு:
செயல்முறை நேரம்:
திணைக்களத்தினால் கொடுக்கபடவில்லை.
வேலை நேரங்கள்:
வேலை நேரத்தை அறிவதற்கு இலங்கை தூதரகத்தை அனுகவும்.
சேவைத் தொடர்பானக் கட்டணங்கள்:
அவர் வசிக்கும் நாட்டிலுள்ள இலங்கைத் தூதரகம் விண்ணப்பதாரரிடமிருந்து விண்ணப்பப்படிவத்திற்கு கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது.
அபராதம் மற்றும் இதரக் கட்டணங்கள்: இந்த சேவைக்கு பொருந்தாது.
இணைப்பு ஆவணங்கள்:
இணைப்பு ஆவணங்கள் தேவையில்லை.
சேவையின் பொறுப்புக் குழு:
பொலிஸ் தலைமையகம் : இயக்குனர் - பொலிஸ் பொதுமக்கள் தொடர்புப் பிரிவு
சிறப்பு வரையறைகள்:
இச்சேவைக்குப் பொருந்தாது.
போலித் தரவுகளுடன் கூடிய மாதிரி படிவம்:
விண்ணப்பபடிவம் (DOP APCC)
அமைப்பு பற்றிய தகவல்பொலிஸ் திணைக்களம்
பொலிஸ் தலைமையகம், கொழும்பு 01. Mr. Lasitha Weerasekara தொலைபேசி:+94-11-2421111 / +94-11-2327711-2-3 தொலைநகல் இலக்கங்கள்:+94-11-234553 மின்னஞ்சல்:telligp@police.lk இணையத்தளம்: https://www.police.lk
|