படி 1 : விண்ணப்பத்தாரர் அல்லது அமைப்பாளர் பொலிஸ் நிலையத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தை பெறவேண்டும்.
படி 2 : விண்ணப்பதாரர் அல்லது அமைப்பாளர் ஒலிபெருக்கி அனுமதிக்கான விண்ணப்ப படிவத்தை தன் கையால் எழுதி பூர்த்தி செய்யவும்.அனுமதி வேண்டுவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆவணங்களை இணைக்கவும்.
குறிப்பு 01 : குறிப்பிட்ட பகுதியில் பொதுக் கூட்டம் நடக்கும் பட்சத்தில் விண்ணப்பதாரர் அந்த பகுதியின் உரிமையாளரிடமிருந்து ஒப்புதல் கடிதத்தை பெறுதல்.
குறிப்பு 02 : வாகனத்தில் சந்திப்பு நடக்கும் பட்சத்தில் விண்ணப்பதாரர் அந்த வாகனத்தின் உரிமையாளரிடமிருந்து ஒப்புதல் கடிதத்தை பெறுதல்.
குறிப்பு 03 : சாதனங்களை பொருத்துபவரின் ஒப்புதல் கடிதம்.
படி 3 : பொலிஸ் நிலையத்தின் பொறுப்பு அலுவலர் (OIC) அனுமதி நிச்சையமெனில் துணை பொலிஸ் கண்காணிப்பாளரினால் (A.S.P)அங்கீகரிக்கப்படுமா இல்லையா என்று முடிவு செய்வர்.
படி 4 : உள்ளூர் துணை பொலிஸ் கண்காணிப்பாளர்(A.S.P) அனுமதிக்கான அங்கீகாரம் வழங்கி விண்ணப்பதாரர் அல்லது அமைப்பாளரிடம் அறிவுரை மற்றும் கட்டளையிட்டு அதை பின்பற்றுமாறு கூறுதல்.
தகுதிக்கான வரையறைகள்:
எந்த ஒரு இலங்கையினரிடமும் அல்லது வெளிநாட்டிலுள்ள இலங்கையினரிடமும் ஒலிப்பெருக்கி பயன்படுத்த அனுமதி வேண்டுவதற்கான தகுந்த காரணங்கள் இருத்தல்.
குறிப்பு : தகுதி இழப்பிற்கான வரையறை
பொது மக்களிடம் இருந்து ஏதாவது புகார் வரும் பட்சத்தில் உதவி ஆய்வாளர் நிலைக்கு கீழ் இல்லாத ஒரு அலுவலர் அவ்வமைப்பை முன் நின்று நடத்துபவரிடம் அறிவுறுத்த வேண்டும் அதற்கு கீழ் படியாத பட்சத்தில் அந்த அலுவலர் நடவடிக்கை எடுக்கலாம்.
சமர்ப்பிக்கும் முறைகள்:
பொலிஸ் நிலையத்திற்கு வருதல்
விண்ணப்பதாரர் அல்லது அமைப்பாளர் ஒலிப்பெருக்கி பயன்படுத்த அனுமதி வாங்க பொலிஸ் நிலையத்துக்கு வருதல்.
விண்ணப்பப்படிவத்தைப் பெறுதல்:
விண்ணப்பதாரர் அல்லது அமைப்பாளர் தன் கைப்பட ஒலிப்பெருக்கி அனுமதி படிவத்தைப் பூர்த்திச் செய்தல் வேண்டும்.விண்ணப்பதாரர் அப்படிவத்துடன் பின்வரும் ஆவணங்களை இணைத்தல் வேண்டும்.
விண்ணப்பப்படிவத்தை சமர்ப்பித்தல்:
விண்ணப்பதாரர் விண்ணப்படித்துடன் ஒப்புதல் கடிதத்தையும் அதனை சார்ந்த தேவையான ஆவணங்களையும் இனைத்து பொலிஸ் நிலையத்தில் சமர்ப்பித்தல் வேண்டும்
குறிப்பு 01 :
கூட்டம் நடைபெறும் இடத்தின் உரிமையாளரிடம் ஒப்புதல் கடிதத்தை பெறுதல் வேண்டும்.
கூட்டம் வாகனத்தில் நடைபெறுமாயின் வாகன உரிமையாளரிடம் ஒப்புதல் கடிதம் பெறுதல் வேண்டும்.
ஒப்புதல் கடிதம் பெற்ற நபர் மட்டுமே சாதனங்களைப் பெற முடியும்.
விண்ணப்பப்படிவம்:
வரை விண்ணப்பப்படிவம்
குறிப்பு 01 : விண்ணப்பதாரர்/அமைப்பாளர் வரை விண்ணப்பப்படிவத்தில் ( DOP ALS)குறிப்பிடபட்டுள்ள அனைத்துப் பகுதிகளையும் கைப்பட எழுதி சமர்ப்பிக்க வேண்டும்.
வரை விண்ணப்பப்படிவம் :
ஒலிப்பெருக்கி பயன்படுத்துவதற்க்கான அங்கீகாரம் பெற பொலிஸ் நிலைய அலுவலக பொறுப்பாளரிடம் ஒர் எழுத்துப்பூர்வ விண்ணப்பத்தை சமர்ப்பித்தல் வேண்டும்.வரை விண்ணப்பம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.இந்த அங்கீகாரத்தை வழங்குவதற்க்கான சரியான முடிவை எடுப்பதற்க்கு, விண்ணப்பத்தில் வேண்டப்பட்ட அனைத்து விபரங்களையும் அவசியம் பூர்த்தி செய்தல் வேண்டும் மற்றும் அதனை சரியான நேரத்தில் பொலிஸ் நிலையத்தின் அலுவலக பெறுப்பாளரிடம் சமர்ப்பித்தல் வேண்டும். அங்கீகாரம் வழங்கியதற்கு பின் விண்ணப்பதாரர் அங்கீகாரத்திற்கு பின்னால் கொடுக்கப்பட்டுள்ள ஒலிப் பெருக்கி உபயோகத்திற்காக வழங்கப்பட்ட சட்ட அறிவுரைகளை படித்தல் வேண்டும்.மற்றும் ஒலிப் பெருக்கி அங்கீகாரம் பெற்றதற்காக வழங்கப்பட்டதன் பின்னால் கொடுத்துள்ள அறிவுரைகள் அனைத்தையும் படித்து மற்றும் புரிந்து உள்ளேன் என தெரியப்படுத்துவதற்க்காக விண்ணப்பத்தில் ஒதுக்கபட்டுள்ள தொகுதியில் கையெழுத்திட வேண்டும்.
காலக்கெடு:
செயலுக்கான காலக்கெடு:
ஒரு நாளுக்குள்
வேலை நேரங்கள்:
துணை பொலிஸ் கண்காணிப்பாளர் (A.S.P) அலுவலகம் : மு.ப 8.00 மணி முதல் – பி.ப 4.30 மணி வரை
திங்கள் அல்லது வெள்ள
பொலிஸ் நிலையம் :24/ 7/365 நாட்கள்
சேவை தொடர்பான கட்டணங்கள்:
பொலிஸ் நிலையத்தினால் வழங்கப்பட்ட ஒரு ஒலிபெருக்கி அனுமதிக்கான கட்டணம் ரு:250.00
அபராதங்கள் மற்றும் இதரக் கட்டணங்கள்:
விண்ணப்பத்தாரர் /அமைப்பாளருக்கு எந்த அபராதமும் சுமத்தப்படாது.
குறிப்பு 01: பொது மக்கள் அல்லது உள்ளூர் மக்களிடமிருந்து எதேனும் புகார்கள் வந்தால், அதனை துணை ஆய்வாளர் நிலைக்கு கீழ்அல்லாத அலுவலர் அமைப்பை நடத்துபவருக்கு அறிவுரை வழங்குவார். அமைப்பாளர் கட்டுப்படாத பட்சத்தில் அந்த அலுவலர் நடவடிக்கை எடுப்பார்.
தேவையான ஆவணங்கள்:
• ஒப்புதல் கடிதம்
• தேசிய அடையாள அட்டை.
• விரிவான வீடு மற்றும் அலுவலக முகவரி
• பணி நடைபெறும் இடம் (விரிவாக)
• பேச்சாளர்களின் பெயர் பட்டியல்
• விண்ணப்பதாரர்/அமைப்பாளர் அரசியல் கட்சியின் அங்கத்தினராயின் அந்த அரசியல் கட்சியின் பெயரை பொலிஸ் நிலையத்தில் குறிப்பிட வேண்டும்.
சேவைக்கான பொறுப்பு குழு:
துணை பொலிஸ் கண்காணிப்பாளர்
குறிப்பு 01 :
மண்டல துணை பொலிஸ் கண்காணிப்பாளர் (A.S.P) அனுமதி வழங்குதல்.
பொறுப்பு அலுவலர்
குறிப்பு 02 :
மண்டல பொறுப்பு அலுவலர் அனுமதி வேண்டுகோளுக்கு சான்றழிக்க துணை பொலிஸ் கண்காணிப்பாளா (A.S.P)யிடம் அனுப்புதல்.
சிறப்பு வரையறைகள்:
இது சேவைக்கு பொருந்தாது.
போலித் தகவல்களுடன் கூடிய மாதிரிப் படிவம்:
இரகசிய தகவல்களாய் இருப்பதன் காரணமாக பொலிஸ் நிலையம் வழங்கவில்லை.
குறிப்பு :
வரை விண்ணப்படிவம் பொலிஸ் நிலையத்திடமிருந்து பெற்ற தகவலின் படி பொறுப்பு அலுவலரின் (பொலிஸ் நிலையம்) கோரிக்கையை விண்ணப்பதாரர் அமைப்பாளர் அறிந்துகொள்ளலாம்.
அமைப்பு பற்றிய தகவல்பொலிஸ் திணைக்களம்
பொலிஸ் தலைமையகம், கொழும்பு 01. Mr. Lasitha Weerasekara தொலைபேசி:+94-11-2421111 / +94-11-2327711-2-3 தொலைநகல் இலக்கங்கள்:+94-11-234553 மின்னஞ்சல்:telligp@police.lk இணையத்தளம்: https://www.police.lk
|