புகார் கொடுத்தவர் குற்ற புலனாய்வு திணைக்களத்திற்கு (CID) செல்லுதல்:
படி 1: புகார் கொடுத்தவர் பொலிஸ் நிலையத்திலுள்ள குற்ற விசாரணை பிரிவுக்கு செல்லுதல்.
படி 2: புகார் கொடுப்பவர் புகார் பற்றிய தகவலை வழங்குதல். புகார் கொடுப்பவர் புகாரின் தன்மையைப் பொறுத்து CID குற்ற புலனாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைத்தல்.
படி 3: புகார் கொடுப்பவர் புகாரை கொடுத்தல் மற்றும் பொலிஸ் B படிவத்தை வழங்குதல்.
படி 4: பொலிஸ் நிலையத்தின் குற்ற புலனாய்வு திணைக்களம் (CID) வழக்குக்கு சம்மந்தப்பட்ட ஆதாரத்தை வாங்குதல்.
படி 5: சந்தேகப்படும் நபரை தன் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருத்தல்.
படி 6: சந்தேகப்படும் நபரை குற்ற புலனாய்வு திணைக்களம் (CID) நீதிமன்றத்தில் ஒப்படைத்தல்.
மற்ற பிரிவுகள் CID க்கு அனுப்புதல்:
படி 1: மற்ற பிரிவுகள் வழக்குகளை CIDக்கு அனுப்புதல் (CIDக்கு சம்பந்தப்பட்டதாக இருந்தால்)
படி 2: வழக்கின் ஆதாரங்களை குற்ற புலனாய்வு திணைக்கம் (CID) வாங்குதல்.
படி 3: சந்தேகிப்பதற்கு போதுமான ஆதாரங்கள் இருந்தால் சந்தேகப்படும் நபரை குற்ற புலனாய்வு திணைக்களம் (CID) தன் கட்டப்பாட்டின் கீழ் வைத்திருத்தல்.
படி 4: சந்தேகப்படும் நபரை நீதிமன்றத்தில் ஒப்படைத்தல்.
தகுதி வரையறைகள்:
• புகார்கள் மேலே குறிப்பிடபட்ட 21 குற்றங்களுள் ஒன்றாக இருக்க வேண்டும்.
• பாதிக்கபட்டதற்க்கான ஆதாரங்கள் வேண்டும்.
சமர்ப்பிக்கும் முறைகள்:
புகார் கொடுப்பவர் பொலிஸ் நிலையத்திற்கு செல்லுதல்.
புகார் கொடுப்பவர் குற்ற விசாரணை பிரிவில் நேரில் வந்து புகார் கொடுக்க வேண்டும் (பொலிஸ் நிலையம்)
புகாரை சமர்பித்தல்.
புகார் கொடுத்தவர் கொடுத்த புகாரை பொலிஸ் அலுவலர் புகார் புத்தகத்தில் எழுதுதல்.பொலிஸ் (B படிவம்) பற்றுசீட்டை வழங்குதல்.
படிவம்:
B படிவம் –இது தகவல் குறிப்பு மற்றும் புகாரின் சுருக்கம் ஆகும்.அத்துடன் இது பொலிஸ் நிலையத்தில் புகார் புத்தகத்தில் எழுதப்பட்ட குறிப்புகளையும் கொண்டுள்ளது.
விண்ணப்பபடிவங்கள்:
இந்தச் சேவைக்கு விண்ணப்பபடிவங்கள் இல்லை.
காலக்கெடு:
செயல்முறை காலக்கெடு:
பிரச்சனைகளின் சிக்கல்களை பொறுத்து.
வேலை நேரம்:
பொலிஸ் நிலையம் – 24/7/365 நாட்கள்
சேவைத் தொடர்பான கட்டணங்கள்:
பொலிஸ் நிலையத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகாரின் ஒவ்வொரு பக்கத்திற்க்கும் ரு:25.00 வசூலிக்கப்படும்.
அபராதங்கள் மற்றும் இதரகட்டணங்கள்:
பொலிஸ் அலுவலர்கள் தவறான வாக்குமூலத்திற்க்கு அபராதங்கள் விதிப்பதில்லை.
குறிப்பு:புகார் தவறாக இருந்தால் புகார் கொடுத்தவரை பொலிஸ் நீதிமன்றத்தில் சமர்பிக்கும்.நீதிமன்றம் தவறாக புகார் கொடுத்தவர் மீது அபராதம் விதிக்கும்.
தேவையான இணைப்பு ஆவணங்கள்:
விசாரணைக்குத் தொடர்பான தகவல் அல்லது ஆயுதங்களை CID முன் கொண்டுவர வேண்டும்.
சேவைக்கான பொறுப்புக் குழு:
OIC (அலுவலக பொறுப்பாளர்) – குற்ற விசாரணை பிரிவு (பொலிஸ் நிலையம்)
OIC (அலுவலக பொறுப்பாளர்) - பொலிஸ் நிலையம்
சிறப்பு வகையறைகள்:
இந்தச் சேவைக்குப் பொருந்தாது.
போலித் தகவல்களுடன் கூடிய மாதிரிப் படிவம்:
இந்தச் சேவைக்குப் பொருந்தாது.
அமைப்பு பற்றிய தகவல்பொலிஸ் திணைக்களம்
பொலிஸ் தலைமையகம், கொழும்பு 01. Mr. Lasitha Weerasekara தொலைபேசி:+94-11-2421111 / +94-11-2327711-2-3 தொலைநகல் இலக்கங்கள்:+94-11-234553 மின்னஞ்சல்:telligp@police.lk இணையத்தளம்: https://www.police.lk
|