மரங்களை வெட்டுவதற்கான அனுமதி வழங்குதல்
தடைசெய்யப்பட்ட மரக்கட்டைகளை போக்குவரத்து செய்வதற்கு, வனப் பாதுகாவலரிடமிருந்து அனுமதி பெறல் வேண்டும். தடை செய்யப்படாத மரக்கட்டைகளை போக்குவரத்து செய்வதற்கு மட்டுமே, கோட்ட செயலகம் அனுமதி அளிக்கும்.
தடைச் செய்யப்பட்ட மரங்களின் வகைகள் பின்வருமாறு:
• கருங்காலி மரம்
• கழுவர எடிரியா
• சாட்டின்
• காலன்கிக்
• பலு
• சூரியமாறா
• கமளு
• கால்மில்லா
• மில்லா
• பேலன்
• பேனாக்கா
• கும்புக்
• கொகாம்பா
• மீ
மூங்கில், சுவான் மரக்கட்டை, கம்பு, வேலி கம்பு, எரிமரம், புதிய களபாடம், ஜன்னல், நிலைகள், ஜன்னல் பலகை, கதவு நிலைகள், கதவு பலகை போன்ற ஏதாவது மரத்தினால் (மேற்குறிப்பிட்ட வரையறுக்கப்பட்ட வகைகளைத் தவிர) செய்யப்பட்டதின் போக்குவரத்திற்கான அனுமதியை கோட்ட செயலகத்திடமிருந்து பெற வேண்டும்.
தகுதி
• போக்குவரத்து செய்யவேண்டிய மரம் மேலே கொடுக்கப்பட்டுள்ள வரையறுக்கப்பட்ட வகைகளை தவிர வேறு மரக்கட்டைகளாக இருத்தல் வேண்டும்.
• மரம் வாங்கிய நிலம் தனியாரின் நிலமாக இருத்தல் வேண்டும்.
சமர்ப்பிக்கும் முறைகள்
விண்ணப்பபடிவம் பெறுதல்
• விண்ணப்பதாரர், விண்ணப்பப்படிவத்தை கிராம சேவகரிடமிருந்து பெறல் வேண்டும்.
• விண்ணப்பம் அனைத்து வகையிலும் பூர்த்திச் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
தேவையான இணைப்பு ஆவணங்கள்
• மரக்கட்டைகள் பெறப்பட்ட இடத்தின் பத்திரம் / மானியச் சான்றிதழ் / அனுமதி அறிக்கை ஆகியவற்றின் சான்றழிக்கப்பட்ட நகல்கள்.
• பாதுகக்கப்பட்ட / பிரிக்கப்படாத எல்லையோற அரசாங்க நிலத்திலிருந்து மரக்கட்டைகள் பெறப்பட்டால் அந்த நிலத்தின் உண்மை நில அளவை திட்டத்தை அளித்தல்.
• விற்பனை மூலம் மரக்கட்டைகள் பெறப்பட்டிருந்தால், அதற்குரிய பற்றுச்சீட்டு.
• மரக்கட்டைகள் வாங்கியிருந்தால், கிராம சேவகரால் சான்றளிக்கப்பட்ட பற்றுச்சீட்டு.
• மரக்கட்டைகள் நன்கொடையாக பெற்றிருந்தால், கிராம சேவகருடைய கடிதம் மற்றும் சான்றிதழ்.
• மரம் வெட்டுவதற்கான அனுமதி.
விண்ணப்பப்படிவம் ஓப்படைத்தல்
• பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்தை கிராம சேவகரிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கு பின், கிராம சேவகர் சம்மந்தப்பட்ட கோட்ட செயலகத்திடம் விண்ணப்பப்படிவத்தை ஒப்படைத்தல்.
குறிப்பு
• நில உரிமையை நிரூபிப்பதற்காக, நிலத்திற்கான பத்திரம் அவசியம் வேண்டும்.
விண்ணப்பப்படிவங்கள்
விண்ணப்பப்படிவத்தின் இலக்கம் / பெயர் |
விளக்கம் |
மரக்கட்டை / புதிய தளபாடம் / உபயோகித்த தளபாடம்; ஆகியவற்றை போக்குவரத்து செய்வதற்கான அனுமதி விண்ணப்பம் |
வரையறுக்கப்படாத மரக்கட்டைகளின் போக்குவரத்திற்கான அனுமதிப் பெறுதல்
|
படிப்படியான வழிமுறைகள் (மரத்தை ஏற்றிச்செல்வதற்கான அனுமதி பெறுதல்)
படி 1: சம்மந்தப்பட்ட கிராம சேவகரிடமிருந்து விண்ணப்ப படிவத்தை விண்ணப்பதாரர் பெற வேண்டும்
படி 2: விண்ணப்பதாரர் முழுமைபெற்ற விண்ணப்பபடிவத்தையும் தேவையான ஆவணங்களையும் கிராம சேவகரிடம் சமர்பித்தல் மற்றும் சம்மந்தப்பட்ட தொகையையும் சமர்பிக்கவும.;
படி 3: கிராம சேவகர் அறிக்கையை தயார் செய்து விண்ணப்பபடிவத்துடன் இணைத்தல்
படி 4: கோட்ட செயலகத்திடம் விண்ணப்பபடிவம் மற்றும் இதர ஆவணங்களையும் கிராம சேவகர் ஒப்படைத்தல்
படி 5 வன இலாக்கா திணைக்களத்திடம் விண்ணப்படிவம் மற்றும் இதர ஆவணங்களையும் கோட்ட செயலகம் அனுப்புதல்.
படி 6: கோட்ட செயலகத்திடம் வனத்துறை பாதுகாவலர் நேரடியாக பார்வையிட்டு அறிக்கையை அனுப்பி வைப்பார்.
படி 7: சம்மந்தப்பட்ட கோட்ட செயலகத்திடமிருந்து கிராம சேவகர் சம்மந்தப்பட்ட தொகையை செலுத்துவதுடன் ஒப்புதலை பெறுதல்.
குறிப்பு:
விண்ணப்பதாரர்கள் தரும் தகவல்கள் வனப்பாதுகாப்பாளரின் திருப்திகரமாக இல்லையெனில் விண்ணப்ப படிவம் நிராகரிக்கப்படும்.
காலக்கோடு
செயல்முறை காலக்கோடு
கோட்ட செயலகம் அனுமதி வழங்குதல் : 2 வாரங்கள்
மரத்தை ஏற்றிச்செல்வதற்கான நேரம் - மு.ப 6.00 மணி முதல் பி.ப 6.00 மணி வரை.
சமர்பிக்க வேண்டிய காலக்கோடு
பொருந்தாது
குறிப்பு: விண்ணப்பம் கிராம சேவகரிடம் சமர்பிக்கவேண்டும.;
ஏற்றுக்கொள்ளக்கூடிய காலக்கோடு
ஓப்புதலில் குறிப்பிடப்பட்ட திகதி மற்றும் நேரத்தில் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்
வேலை நேரம் / நாட்கள்
கோட்ட செயலக அலுவலகம் (நிறுவனப் பிரிவு): மு.ப9.00 மணி முதல் –
பி.ப4.30 மணி வரை
திங்கள் மற்றும் புதன்
சேவை தொடர்பான கட்டணங்கள்
மரத்தை ஏற்றிச்செல்வதற்கான கட்டணம் உபயோகிக்கப்படும் வாகனத்தை பொருத்து வேறுபடும்.
1. தோளில் சுமந்து செல்வதற்கு கட்டணம் இல்லை.
2. பார வண்டிக்கு ரூ. 150/-
3. கைஇழுவை இயந்திரத்திறத்திற்கு ரூ. 150/-
4. இழுவை இயந்திரத்திறத்திற்கு ரூ. 150/-
5. லாரிக்கு ரூ.150/-
தேவையான இணைப்பு ஆவணங்கள்
• மரங்களை பெற்றுக்கொண்ட நிலத்தின் பத்திரம்;/அனுமதி சான்றிதழ்/அனுமதி ஆவணம் ஆகியவற்றின் பிரதிகள்.
• பாதுகாக்கப்பட்ட / பிரிக்கப்படாத அரசு நிலத்தில் இருந்து பெறப்பட்ட மரக்கட்டை, நிலத்தின் உண்மையான பயிற்ச்சித் திட்டத்திற்க்கான நில அளவை
• ஏலத்தில் மரக்கடைகள் பெற்றுக்கொள்ளப்படடிருந்தால் அதற்கான பற்றுச்சீட்டு.
• மரக்கட்டையை விலை கொடுத்து வாங்கியிருப்பின் அதன் பற்றுச்சீட்டு, கிராம சேவகர் மூலம் சான்றளிக்கப்பட்டிருக்க வேண்டும்.
• மரக்கட்டை நன்கொடையாக பெற்றிருப்பின் கிராம சேவகரிடம் இருந்து கடிதம் மற்றும் சான்றிதழ் பெறுதல்.
• மரத்தை வெட்டுவதற்கான அனுமதியின் பிரதி.
அமைப்பு பற்றிய தகவல்பிரதேச செயலகம் இலங்கை
Divisional Secretary,
Colombo Divisional Secretariat,
Dam Street,
Colombo 12.
தொலைபேசி:011-2437247 தொலைநகல் இலக்கங்கள்:011-2325512 மின்னஞ்சல்:ds@colombo.ds.gov.lk இணையத்தளம்: www.colombo.ds.gov.lk
|