தகுதி இலங்கையுள்ள கோட்ட செயலக எல்லைக்குள் பிறந்தவர் பிறப்பு நடந்த கோட்ட செயலக பிரிவிலிருந்து பிறப்பிற்கான பிரதியை பெற தகுதியானவர்.
உங்களுடைய வீட்டிற்கு வெளியேயுள்ள பகுதியில் பிறப்பு நடந்திருந்தால், பிறப்பு நடந்த பிரிவிலுள்ள கோட்ட செயலகத்திற்கு செல்ல வேண்டும்.
குறிப்பு: ஒரு விண்ணப்பத்தை உபயோகிப்பதற்காக விண்ணப்பதாரர் 3 பிரதிகளை கேட்கவும்;.
சமர்ப்பிக்கும் வழிமுறைகள்
விண்ணப்பப்படிவத்தை பெறுவதற்கு -விண்ணப்பதாரர் விண்ணப்பபடிவத்தை விசாரணை மேஜையிலிருந்தோ அல்லது எந்த கோட்ட செயலகத்திலுள்ள பெருத்தமான சான்றிதழ் பதிவாளரிடமிருந்து பெற்றுக் கொள்ள வேண்டும்.
-விண்ணப்பதாரர் விண்ணப்பபடிவத்தை தயார் செய்து பூர்த்தி செய்யவும்.
குறிப்பு:
சேதமடைந்த நடப்பு பிறப்பு சான்றிதழின் பிரதியை கேட்டிருந்தால் விண்ணப்பத்துடன் சேதமடைந்த பிரதியையும் சேர்க்க வேண்டும்
தேவையான விண்ணப்பத்தை ஒப்படைத்தல் -விண்ணப்பதாரர் விண்ணப்பபடிவததுடன் முத்;திரையிடப்பட உறையுடன் சேர்த்து பதிவாளரிடம் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ சமர்பிக்க வேண்டும்
குறிப்பு:
-அஞ்சல் மூலம் அனுப்புவதாக இருந்தால், விண்ணப்பங்களை பதிவு தபால் மூலம் மட்டும் அனுப்ப வேண்டும்.
-விண்ணப்பதாரர் முதல் பதிவு செய்தற்கான சரியான திகதியை தெரிந்திருந்தால், அதிக விரைவாகவும் மறறும் சுலபமாகவும் பிரதியை பெறுலாம்.
குறிப்பிட்ட காலத்தில் விண்ணப்பதாரருக்கு பிறப்பு சான்றிதழ் தபால் மூலம் அனுப்பபடும்.
ஏற்றுக்கொள்ளக்கூடிய காலம் மு.ப 9.00. – பி.ப 12.30
மு.ப 1.00 – பி.ப 4.45
விண்ணப்பப்படிவங்கள்
விண்ணப்பப்படிவத்தின் இலக்கம் / பெயர்
விளக்கங்கள்
பிற்ப்புசான்றிதழுக்கான விண்ணப்பம் மற்றும்அல்லது பதிவிற்கான ஆய்வு படிவம் B63
பிறப்புச் சான்றிதழின் பிரதியைப் பெறுதல்.
படிப்படியான வழிமுறைகள் (பிறப்பு சான்றிதழின் பிரதியை வழங்குதல்)
படி 1: விண்ணப்பதாரர் விசாரணைப் பிரிவு அல்லது பதிவாளரிடமிருந்து விண்ணப்பப்படிவத்தைப் பெறுதல்.
படி 2: விண்ணப்பதாரர் விண்ணப்பபடிவத்தை தயாரித்து பூர்த்தி செய்தல்.
படி 3: விண்ணப்பத்தைக் கோட்டச் செயலகத்திற்கு அஞ்சல் மூலம் அல்லது நேரடியாக கோட்ட செயலக பதிவாளரிடம் ஒப்படைத்தல்.
குறிப்பு:
விண்ணப்பம் அஞ்சல் மூலம் அல்லது நேரடியாக அஞ்சல் முத்திரை ஒட்டப்பட்ட உறையுடன்; ஒப்படைக்க வேண்டும.;
படி 5: கோட்டச் செயலகம் விண்ணப்பத்தைப் பெற்று செயலாக்கம் செய்து இணைப்பு ஆவணங்களின் செல்லுபடியைச் சரிபார்த்தல்.
படி 6: விண்ணப்பதாரர் அஞ்சல் மூலமாகப் பிறப்பு சான்றிதழை பெறுதல்;.
குறிப்பு :
விண்ணப்பதாரர் நிராகரிக்கப்பட்டால், தகுதி நீக்கம் செய்யப்பட்டக் காரணத்தைக் குறிப்பிட்டு பதிவாளர் விண்ணப்பதாரருக்கு விண்ணப்பத்தைத் தபால் மூலமாகத் திருப்பி அனுப்புவா
காலக்கோடு
செயல்முறை காலக்கோடு ஆவணங்களை எளிதாக தேடுவதற்காக விண்ணப்பதாரர் உண்மைத் பிறப்புச் சான்றிதழின் பதிவிலக்கம் அல்லது பதிவிலக்கத்தை தரும் பட்சத்தில் புதியப் பிறப்புச் சான்றிதழ் 2 லிருந்து 3 நாட்களுக்குள் தயார் செய்து விண்ணப்பதாரருக்கு அனுப்பப்படும்.
குறிப்பு : தேடுகின்ற தகவல்கள் கிடைக்காதப் பட்சத்தில் விண்ணப்பத்தின் செயல்முறைக் காலம் கிடைக்க கூடிய மனிதவளத்தைப் பொறுத்து சாதரணமாக ஆகக்கூடிய நேரத்தைவிட அதிக நேரம் தாமதமாகும்.
சமர்ப்;பிக்க வேண்டிய காலக்கோடு
படி 1: விண்ணப்பப்படிவங்களைப் பெறுதல்
விண்ணப்பப்படிவங்களை விசாரணைப் பிரிவு அல்லது கோட்டச் செயலகத்தின் பதிவாளரிடமிருந்தும் பணி நேரங்களில் கிடைக்கும்.
பணிநாட்கள் – திங்கள் கிழமை – வெள்ளிக் கிழமை (திங்கள் கிழமை ரூ புதன் கிழமை விரும்பத் தகுந்த நாட்கள்)
கருமப்பீடம் திறந்திருக்கும் நேரம் – மு.ப. 9.00 முதல் 12.30 பி.ப.இ பி.ப 1.00 முதல் பி.ப. 3.00
விடுமுறைகள் – பொது மற்றும் அனைத்து வணிக நாட்கள்;
படி 2: விண்ணப்பப்படிவங்களைச் சமர்ப்பித்தல்
விண்ணப்பம் நேரடியாக சமர்ப்பித்தால், நேரம் வீணாவது இல்லை. விண்ணப்பம் அஞ்சல் மூலமாக அனுப்பினால் அஞ்சல் நேரத்தைப் பொறுத்து சம்பந்தப்பட்ட அதிகாரியை சென்றடையும்.
பணிநாட்கள் – திங்கள் கிழமை – வெள்ளிக் கிழமை (திங்கள் கிழமை ரூ புதன் கிழமை விரும்பத் தகுந்த நாட்கள்)
கருமப்பீடம் திறந்திருக்கும் நேரம் – மு.ப. 9.00 முதல் 12.30 பி.ப.இ பி.ப 1.00 முதல் பி.ப. 3.00
விடுமுறைகள் – பொது மற்றும் அனைத்து வணிக நாட்கள
ஏற்றுக்கொள்ளக் கூடிய காலக்கோடு நீடித்து நிற்கும் கால அவகாசம்
சேவைத் தொடர்பானக் கட்டணங்கள்;
பிறப்பு சான்றிதழ்; மற்றும் / அல்லது தேடப்படும் பதிவுக்கான விண்ணப்பித்துப் பதிவுச் செய்வதற்கு முத்திரை கட்டணம் மட்டும் செலுத்த வேண்டும்
• பதிவுச் செய்யப்பட்டத் திகதி அல்லது பதிவு இலக்கம் கொடுக்கப்பட்டிருப்பின் ஒரு பிரதிக்கான முத்திரைக் கட்டணம் ரூ.5/ஸ்ரீ
• பதிவுச் செய்யப்பட்ட திகதி அல்லது பதிவு இலக்கம் கொடுக்கப்படவில்லையெனில் மேலும் பதிவேடுகளில் 3 மாதத்திற்கு மிகாமல் தேட வேண்டியிருந்தால் ஒரு பிரதிக்கான முத்திரைக் கட்டணம் ரூ.10/ஸ்ரீ
• பதிவேடுகளில் 2 வருடங்களுக்கு மிகாமல் தேட வேண்டியிருந்தால் ஒரு பிரதிக்கான முத்திரைக் கட்டணம் ரூ. 20/ஸ்ரீ
பிறப்பு சான்றிதழுக்கான விண்ணப்பம் மற்றும் அல்லது பதிவு செய்வதற்கான ஆய்வு போன்றவற்றிற்கு மட்டும் முத்திரை வரியை செலுத்த வேண்டும்.
பிறப்பிற்கு 3 மாதத்திற்கு பிறகோ அல்லது ஒரு வருடத்திற்கு முன்போ பதிவை அறிவித்திருந்தால், முத்திரை வரி ரூ.5 செலுத்த வேண்டும்.
ஒரு வருடத்திற்கு பிறகு அறிவித்திருந்தால்; ரூ.5 மட்டும் முத்திரை வரி பொருந்தும்;.
பதிவிற்கான திகதி அல்லது பதிவுக்கான இலக்கங்கள் கொடுக்கப்பட்டிருந்தால் முத்திரை வரிக்கான சான்றிதழ் கொடுப்பதற்கு ரூ.5 செலுத்த வேண்டும். (3பிரதிகள்).
பதிவிற்கான திகதி அல்லது பதிவுக்கான இலக்கங்கள் கொடுக்கவில்லையென்றால் சான்றிதழ் சம்பந்தப்பட்ட பதிவு செய்வதற்கான ஆய்வு மூன்று மாதங்களுக்கு மேல் இருக்க கூடாது. சான்றிதழ் சம்பந்தப்பட்ட கட்டணம் ரூ.10. (2பிரதிகள்).
அமைப்பு பற்றிய தகவல்
பிரதேச செயலகம் இலங்கை
Divisional Secretary,
Colombo Divisional Secretariat,
Dam Street,
Colombo 12.
அரசாங்க தகவல் நிலையத்திற்கு (GIC) வரவேற்கிறோம். அரசாங்க தகவல்களை அணுகுவது உங்கள் உரிமை. தங்களுக்கு தேவையான அதிகாரப்பூர்வ அரசாங்க தகவல்களை செயல்திறனுடன் வழங்குவோம்.
Welcome to the Government Information Center (GIC). It’s your right to have access to Government Information.
We strive our best to cater your information needs as GIC. Please provide your name,
District & Contact number and kindly wait until one of our Agents get in touch with you.